தேனாம்பேட்டை, அன்பகம், அண்ணா மன்றத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் 107 பேர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் மற்றும் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோர் என 140 பேர்களுக்கு பணி நியமனஆணைகளை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அருகில் மேயர் மா.சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.


கருவறையில் காமலீலை அர்ச்சகர் தேவநாதனுக்கு
அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்
கோவில் சீரமைப்பு சங்கம் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், டிச. 12_- காஞ்சிபுரம் பேருந்து-நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பல பெண்-களுடன் காம லீலையில் ஈடுபட்ட அர்ச்சகர் தேவ-நாதன் மீது சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்-பதிவு செய்தனர். இதையடுத்து தேவநாதன் காஞ்சிபுரம் நீதிமன்றத்-தில் சரண் அடைந்தார்.

காவல்துறைக் காவலில் அவரை எடுத்து விசாரித்-தனர். அப்போது அர்ச்ச-கரின் காமலீலை தொடர்-பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அர்ச்சகர் தேவநாதனின் இந்த செயல் காஞ்சிபுரம் மக்களிடையே மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்-களின் மனதை புண்-படுத்தி உள்ளது. பக்தர்-கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் பெண்க-ளுடன் காம லீலையில் ஈடுபட்ட காட்சியை தானே செல்போனில் படம் பிடித்து தனிமை-யில் ரசித்து வந்தார்.

அது செல்போன் பழுது பார்க்க கொடுத்த போது வெளியுலகிற்கு பரவியது. அர்ச்சகர் தேவ-நாதன் காமக்களி-யாட்-டத்தில் ஈடுபட்ட அந்த காட்சி தனியார் தொலைக்-காட்சிகளில் ஒளிப்பரப்பு ஆகின. இதை கண்ட மக்கள் கொதித்து போய் உள்ள-னர். தேவநாதனை நீதி-மன்றத்திற்க்கு அழைத்து வந்த போது பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்-கள் அர்ச்சகர் தேவநா-தன் மீது செருப்பு, துடைப்-பம், சாணி ஆகி-யவற்றை வீசி தங்கள் கோபத்தை வெளிப்-படுத்-தினர்.

இந்து முன்னணி அமைப்-பினர் அர்ச்சகர் தேவநா-தனை கண்டித்து கண்ட சுவரொட்டிகள் ஒட்டினர். இந்நிலையில் தமிழ்நாடு தனியார் திருக்கோயில்கள் சீரமைப்பு சங்கம் சார்பில் மாநில தலைவர் கவிஞர் குமார்சாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:- மடத்-திற்கு மடாதிபதியும் நிறுவ-னங்களுக்கு நிறுவ-னர்களும், கிராமத்திற்கு அதிகாரியும் எவ்வாறு முக்கியமான-வர்களோ, அவ்வாறே புனிதமான கோவில்களில் அர்ச்சகர் பணியும் முக்கிய-மானது. ஆகமங்களையும், மந்திரங்களையும், வேதங்-களையும், முறையாக பயின்று சாஸ்திரங்களை கற்று பூஜைக்குரியவர்கள் என்று கருதப்படுகிற-வர்கள் தெய்வத்திற்கு அடுத்தப்படியாக போற்-றுதலுக்கு உரியவர்களாக கருதப்படுகின்றனர். அப்பேற்பட்ட அர்ச்சகர் குலத்திற்கே இழிவு ஏற்-படுத்திவிட்டார் தேவ-நாதன். அதுவும் கோவி-லின் கருவறையில் பெண்-களுடன் காமலீலையில் ஈடுபட்-டுள்ளார் என்று கேட்ட போதே உடம்பெல்-லாம் எரிகிறது. அர்ச்சகர் இனத்துக்கே இழிவு ஏற்படுத்திய தேவநா-தனுக்கு அதிகபட்ச தண்-டனை பாரபட்சம் காட்-டாமல் வழங்க வேண்-டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 
Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai