இந்தியாவின் முதல் பெண் விமானி

1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அன்றைய தினத்தில் பெரும்-பாலான பத்திரிகைகளில் ஒரு விளம்-பரம் வந்திருந்தது. ஆல்வாரின் மகாராணிக்கு தனிப்பட்ட முறையில் செயல்பட ஒரு விமானி தேவை. அதுவும் ஒரு பெண் விமானி தேவை என்று.

அந்த நாள்களில் அரச பரம்-பரையைச் சேர்ந்தவர்கள் தனி விமா-னத்தில் பறப்பது வினோதமல்ல. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் பெண் விமானிகள் மிகவும் அபூர்-வம். இந்தியப்பெண்மணியும் இளம் வயதினருமான சரளா தாக்ரல் அந்தப் பணியில் சேர்ந்தார். விமானம் என்பதே அபூர்வமான விஞ்ஞான முன்னேற்றம் என்று கருதப்பட்ட அன்றையக் காலக்கட்-டத்தில் முதன் முதலில் விமானம் ஓட்டிய இந்தியப் பெண்மணி என்ற பெருமையை சரளா தாக்ரல் பெற்றார். ‘’விமானம் ஓட்ட கற்ற பிறகு-தான் கார், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

பயிற்சி பெற்ற நேரம் பத்து மணிநேரம். அதற்குப் பிறகு, தனி-யாக விமானம் ஓட்டி சாதனை புரிந்தேன்’’ என்கிறார் சரளா. அய்ம்-பது-களில் நகை வடிவமைப்பாள-ரா-கவும் டெக்ஸ்டைல் பிரின்டிங்கிலும் சாதனை புரிந்தவர் இவர். திரு-மணத்-திற்குப் பிறகு சரளா விமானம் ஓட்ட பயிற்சி எடுத்தார். இவருடைய குடும்பத்தில் 9 விமான ஓட்டிகள் இருந்தனர். புகுந்த வீட்டில் ஹமாலயா ஃப்ளை-யிங் கம்பெனி வைத்திருந்ததால் இவர் பயிற்சி பெறுவது கஷ்டமாக இருக்கவில்லை. அன்றைய காலக்-கட்டத்தில் ‘’ஏ’’ நிலை உரிமம் பெற்றார். ‘’பி’’ நிலை உரிமம் பெற முயற்சி எடுத்துக் கொண்டிருந்த-போது எதிர்பாராத விமான விபத்-தில் கணவரை இழந்தார். இது 1939ஆம் ஆண்டு நடந்தது. சோகத்-திலிருந்து மீண்டு மறுமணம் செய்து கொண்டார்.

பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தினார். இவருடைய கண்காட்சி-களில் பெரும்பாலும் பெண்களின் உருவங்களே நிறைந்திருக்கும். சில காலம் கழித்து ‘’பி’’ உரிமம் பெற்றுத் திரும்பவும் விமானியாக பணி-யாற்றினார். ஆறுமாத காலம் ஆல்-வார் ராணிக்கு தனிப்பட்ட விமானி-யாக இருந்து பிறகு விலகினார். 88 வயதாகும் சரளா இன்னும் நகை வடிவமைப்பாளராகவும், தேசிய நாடகப் பள்ளிக்காக பல வே¬-களைச் செய்பவருமாக இருக்கிறார். தினமும் காலையில் கண்விழிக்கும் போது அன்றைய தினம் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு விடுவதாகக் கூறும் இவர், திட்ட-மிடாத வாழ்க்கை வீண் என்கிறார். இவ்வளவு வேலைகள் செய்யவும் இவர், வீட்டு வேலைக்-காக யாரை-யும் வைத்துக் கொள்ள-வில்லை. அதையும் தானே செய்-கிறார் இந்தச் சுறுசுறுப்பான பெண்-மணி.


இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!

தற்போது படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது கையிலும் இருப்பது செல்-போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில் ஒருவரே பல செல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம். இந்த செல்போன்கள் பல வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும் உள்ளன.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை ஏற்படுகிறது.

சில பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின் செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர் தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.

கேமரா உள்ள செல்பேசிகளை வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.

இதுபோல வரும் அழைப்புகளை பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும்.

தெரியாத நபர்களின் அழைப்பைக் கூட நல்ல முறையில் பேச வைப்பார்கள். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ, நட்பாகவோ மாறி, வாழ்க்கையே கேள்விக்-குறியாகும் நிலைக்குக் கூட போய் இருக்கிறது.

இதுபோன்ற முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளைப் பற்றி நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.

அதாவது, எதிர்முனையில் பேசுபவர் திருமணம் ஆன-வரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி செய்ய முடியாது. அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம் அல்லவா?

உங்களை செல்பேசியில் அழைத்துப் பேசும் நபர், நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர் உண்மையில் இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?

நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல பொறுப்பில் இருப்பீர்கள். ஆனால் உங்களிடம் பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக இருப்பாரா? அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய வாய்ப்புள்ளதா?

சில நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர் மூலமாக நம்மைப் பற்றி அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில் நமது செல்பேசி எண்ணை வாங்கி நமக்கு அவர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக் காட்டத் துணியாத ஒரு நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?

உங்களைச் சுற்றி எத்தனையே உறவுகளும், கை தொடும் தூரத்தில் எத்தனையோ நட்புகளும் வலம் வரும் போது இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது நட்பு உங்களுக்கு எந்த விதத்தில் அவசியமாகிறது?

ராங் கால் போட்டு பேசி ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும் ஒருவரது நடத்தை எந்த விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?

நம்முடன் ஒன்றாகப் படித்து / வேலை பார்த்து ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளாமல் பேகும் போது, இவர்களை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறீர்கள்?

ராங் காலில் வரும் அழைப்புகளுடன் நட்பு கொண்டாடு-வதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இதில் ஒரு கேள்விக்காவது உங்களிடம் சரியான பதில் வருமா? நிச்சயம் வராது. முக்கியமாக பெண்கள் தங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத் தர வேண்டும். இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் காவல்-நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளத்தான் செல்பேசியே தவிர, அதனை படுகுழியில் தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai