‘திற’ குறும்படத்தை எடுத்த பிரின்சைப்
பாராட்ட வார்த்தைகளே இல்லை
பெரியார் கல்வி நிறுவனங்களில் காட்டப்படும்
தமிழர் தலைவர் மகிழ்ச்சியுடன் அறிவிப்பு


குஜராத் இனப் படுகொலையை, மதவெறியை மய்யமாக வைத்து ‘திற’ குறும்படத்தினை எடுத்த இயக்குநர் பிரின்ஸ் என்னாரெசு பெரியாரைப் பாராட்டி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பொன்னாடை போர்த்துகிறார். (சென்னை, ரஷ்ய கலாச்சார மய்யம், 17.12.2009)

சென்னை, டிச. 18_ ‘திற’ குறும்படத்தை எடுத்த பிரின்சு என்னாரெசைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. முதலில் இந்தப் படம் பெரியார் கல்வி நிறு-வனங்களில் காட்டப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

காரைக்குடி மாவட்ட தி.க. தலைவர் சாமி.-சம-தர்மம் அவர்களுடைய மகன் பிரபல குறும்பட இயக்-குநர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுடைய முயற்சியில் தயாரிக்கப்பட்ட ‘திற’ குறும்பட திரை-யிடும் நிகழ்ச்சி சென்னை கோபாலபுரத்திற்கு அரு-கிலுள்ள சோழா ஓட்டல் பின்புறமுள்ள ரஷ்ய கலாச்சார மய்யத்தில் வியாழன் (17.12.2009) இரவு 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரை

இவ்விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இந்த அரங்கம் முழுவதும் அறிவார்ந்த மக்கள் நிரம்பியிருக்கின்றார்கள். பிரின்ஸ் என்னாரெசு அவர்கள் இயக்கிய ‘திற’ குறும்படம், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னாலே காட்டப்பட்டது. 14 நிமிடங்கள் அந்த குறும்படத்தைக் காட்டி இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மனிதனுடைய உணர்ச்சிகளையும், துடிப்புகளையும் அறிவார்ந்த முறையிலே காட்டப்-பட்-டிருக்கிறது. இந்த சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்-டிய பாடம் இந்தப் படத்தில் அடங்கி இருக்கிறது.

மதவெறி, ஜாதிவெறி

இங்கே ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் பேசும் பொழுது ஒரு கருத்தை மிக நன்றாகச் சொன்னார். மதவெறியை, ஜாதி வெறியைத் தூண்டி ஆதிக்கவாதிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றிச் சொன்னார்கள்.

உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தத் கூடிய-வர்களின் பாத்திரங்கள் மாறியிருக்கலாம். ஆனால் அதன் தன்மை மாறவில்லை.

ஈழத்தில் நடந்த கொடுமையோ!

அதே போல சகோதரர் நக்கீரன் கோபால் அவர்-கள் பேசும் பொழுது ஒரு கருத்தைச் சொன்னார். அவர் எந்தக் கருத்தைச் சொன்னாரோ அதே சிந்தனை-யோடுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

குஜராத்திலே இந்து மத வெறியினாலே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது, பெண்களை எப்படி எல்-லாம் மானபங்கம் செய்து கொன்றார்கள் என்று இந்த ‘திற’ குறும்படத்தில் காட்டும் பொழுது, இதுவே இப்படி என்றால், ஈழத்திலே போரின் பொழுதும், முள்வேலி முகாம்களிலும் என்ன கொடுமைகள் நடந்-திருக்குமோ! என்று மனவேதனையுடன் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இது நான்காவது தலைமுறை

நமது கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் பிரின்ஸ் என்னாரெசு மூன்றாம் தலை-முறை-யைச் சார்ந்த நமது கொள்கைக் குடும்பம் என்று சொன்னார். அவருக்கு ஒரு திருத்தத்தைக் கூற விரும்பு-கிறேன். இது மூன்றாவது தலைமுறை அல்ல. நான்-காவது தலைமுறை. தமிழீழத்தை (பெரியார் சாக்ரட்-டீஸ் மகள்) சேர்த்து இது நான்காவது தலைமுறையைச் சார்ந்த பெரியாரின் கொள்கைக் குடும்பம் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமையடைகின்றேன்.

பாராட்ட வார்த்தைகளே இல்லை

‘திற’ குறும்படத்தை எடுத்த நமது பிரின்சு என்னாரெசு அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதுதான் நாங்கள் அவருக்கு வழங்கும் பாராட்டு.

எனது வாழ்விணையர் மோகனா அம்மையார் அவர்களிடம் அவர் அன்பாக பேசுவார். அவர்களும் என்னென்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று இவரது வளர்ச்சி பணி காரணமாக துளைத்தெடுத்து அக்கறையோடு விசாரிப்பார்கள். இதை பிரின்சு என்னாரெசு பேசும்பொழுது சொன்னார். இதிலிருந்து நான் அதிகம் கண்டுகொள்ளவில்லை என்பதையும் அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார். தாய்மை உணர்வு என்பதுதான் தனிச் சிறப்பானது.

பெரியார் கல்வி நிறுவனங்களில் காட்டப்படும்

பிரின்ஸ் அவர்கள் ஓர் அற்புதமாகக் குழுவை அமைத்து இது போன்ற பணிகளை செய்து வருகிறார். அதற்காக இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை அவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். பிரின்ஸ் தயாரித்த ‘திற’ என்ற இந்த குறும்படம் எல்லா இடங்களிலும் காட்டப்படவேண்டும் என்று இங்கே பேசிய சகோதரர் சுப. வீரபாண்டியன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

முதலாவதாக திருச்சி, தஞ்சையில் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர் செல்வங்களுக்கு ‘திற’ குறும்படம் காட்டப்படும்.

சமுதாயத்தில் நிலவுகின்ற இந்தக் கொடுமைகளை இளம் செல்வங்கள் முதலில் தெரிந்து கொள்ள-வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரை பதவிகள் முக்கியமல்ல. கொள்கை, இலட்சியங்கள்தான் முக்கியம். மனிதனை மதிக்கின்ற பண்பு இருக்க வேண்டும்.

முதல் எதிரி அரசு பயங்கரவாதம்

மதவெறியைப் பற்றி பிரின்சு போன்றவர்கள் குறும்படமாக எடுத்ததுதான் சிறப்பானது.

தீவிரவாதிகள் என்றால் அவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் தீவிரவாதிகள், முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொல்லுகின்றார்கள். ஏன் இந்துக்களில் தீவிரவாதி-களே இல்லையா? பயங்கரவாதிகள் இல்லையா?

குஜராத் அரசு, நரேந்திர மோடி அரசு செய்த இனப்படுகொலை என்பது அரசு பயங்கரவாதம்.

அதேபோல இலங்கையிலே நடைபெற்ற தமிழினப் படு-கொலை என்பது அரசு பயங்கரவாதம். மனித இனத்-திற்கு முதல் எதிரியே இந்த அரசு பயங்கரவாதம்தான்.

இவ்வாறு பேசிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறும்படத்தில் காட்டப்பட்டிருக்கும் மத-வெறியையும், நாட்டில் நடைபெறுகின்ற மதவெறி, இன-வெறிச் செயல்களையும் ஏராளமான கருத்துகளுடன், ஆதாரத்துடன் விளக்கினார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai