ஜோசப்பும் - மேரியும் படுக்கையில்
இருப்பது போன்ற விளம்பரப் பலகை
நியூசிலாந்து தேவாலயத்தில் கடும் எதிர்ப்பு

வெல்லிங்டன், டிச. 18_ உள்ளூர் ஆங்கிலிகன் தேவாலயத்தால் வைக்கப்பட்டிருந்த, ஜோசப்பும் மேரியும் படுக்கையில் இருப்பது போன்ற ஒரு விளம்பரப் பலகை கத்தோலிக்க கிறித்துவ தேவாலயத்தின் கடுமையான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

யேசுவை ஈன்ற மேரி, ஆணின் உடலுறவு இன்றி கன்னியாகவே இருந்து யேசுவைப் பெற்றெடுத்தார் என்பது கத்தோக்க கிறித்துவ மதத்தின் நம்பிக்கை. இதைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஜோசப்பும் மேரியும் படுக்கையில் இருப்பது போன்ற ஒரு விளம்பரப் பலகை வைக்கப்-பட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆக்லாந்தின் புனித மாத்யூ நகர தேவாலயத்-தால் இந்தப்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. வெறுப்பு கொண்டிருந்த ஜோசப், சோகமாக இருக்கும் மேரியுடன் படுக்கையில் போர்வைக்குள் இருப்பது போன்று அப்படத்தில் சித்திரிக்கப்-பட்டுள்ளது. ‘‘பரிதாபத்திற்குரிய ஜோசப்! கடவுளாக நடிப்பது என்பது எளிதில் மற்றவர்-களால் பின்பற்ற முடியாதது’’ என்ற அதில் வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துமஸ் விழா ஏன் கொண்டாடப்படுகிறது என்று வழக்கமாகக் கூறப்படும் காரணத்தைக் கேலி செய்வது, விழாவின் உண்மையான முக்கியத்து-வத்தை எடுத்துக் காட்டுவது என்ற நோக்கங்-களுடன்-தான் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது என்று ஆங்கிலிகன் தேவாலயத்தின் பிஷப்புக்கு அடுத்த நிலையில் உள்ள பாதிரியார் கிளின் கார்டி கூறினார். ‘‘கிறிஸ்துமஸ் என்றால் என்ன என்பதை முழுவதுமாக மக்களை எண்ணிப் பார்க்கச் செய்யவே நாங்கள் முயற்சித்துள்ளோம் ’’ என்று செய்தியாளர்களிடையே அவர் கூறினார். ‘‘ஒரு குழந்தை பிறப்பதற்காக ஒரு ஆன்மிகக் கடவுள் தனது விந்துவை அளித்தாரா அல்லது ஜோசப்-பிடம் காணப்படுவது போன்ற அன்பின் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா என்பது பற்றியதுதான் இந்த பலகை.’’

தேவையற்றது, பொறுப்பற்றது, மரியாதைக் குறைவானது என்று இந்தப் பலகை வைக்கப்-பட்டது பற்றி நியூசிலாந்தின் கிறித்துவ தேவலாயம் கண்டித்து உள்ளது. குடும்பத்திற்கே முதலிடம் அளிக்கும் குடும்ப மதிப்பீட்டுக் குழுவும் இதனைக் கண்டித்துள்ளது. கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றியும் அதன் ஆன்மிக முக்கியத்தைப் பற்றியும் தேவாலயக் கட்டடத்திற்குள்ளேயே அவர்கள் விவாதிக்க முடியும். ஆனால், இவ்வாறு தெருவில் ஒரு பலகையை வைத்து குடும்பங்களையும், குழந்தைகளையும் அதிர்ச்சி அடையச் செய்வது மிகவும் பொறுப்பற்ற, தேவையற்ற செயல் என்று அந்த குழுவின் இயக்குநர் பாப் மெகோஸ்கிரி கூறினார்.

(ஒரே மதத்தின் இரு பிரிவுகள் இவ்வாறு மோதிக் கொள்வது நல்ல நகைச்சுவை. நம்மூர் சைவ, வைணவத் தகராறு கிறித்துவ மதத்தையும் பிடித்துக் கொண்டது போலும்!)


தெலங்கானா விவகாரம்
மத்திய அரசுதான் வழிகாட்ட வேண்டும்

அய்தராபாத், டிச. 18_ தெலங்கானா விவகாரத்-தால் ஆந்திராவில் ஏற்-பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு வழிகாட்ட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா கோரி-யுள்-ளார்.

அய்தராபாத்தில் நேற்று ரோசய்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:

தெலங்கானா மாநி-லம் அமைப்பது தொடர்-பான பிரச்சினையில் ஆந்திராவில் பதற்றம் நிலவுகிறது. இது ஆந்-திராவுக்கும் மட்டுமே உரிய பிரச்சினை அல்ல. மத்திய அரசுக்கும் இது பிரச்சினைதான். இதற்கு தீர்வு காண எங்களுக்கு மத்திய அரசு வழிகாட்ட வேண்டும். மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப ஊடகங்கள் உள்பட எல்லா தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். தெலங்கானா விவகாரம் உணர்வுபூர்வமான பிரச்-சினை. அதனால், பதற்-றம் அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு காண சிறிது காலம் ஆகும். அனைத்துக் கட்சிக் கூட்-டத்தை கூட்டி முடிவு எடுக்க தயாராக இருக்-கிறேன். ஆனால், இந்த பிரச்சினையில் கட்சி-களிடம் ஒருமித்த கருத்து ஏற்படுவது கடினம் என்-பதால் இது சாத்திய-மல்ல.

போராட்டங்கள் காரணமாக கடந்த 20 நாள்களாக மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அரசுக்கும் வருமானம் இழப்பு ஏற்படுகிறது. இயல்பு வாழ்க்கை திரும்ப அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒத்து-ழைப்பு தர வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் பற்றி முடிவு செய்ய வேண்டியது பேரவைத் தலைவர்தான்.

இவ்வாறு ரோசய்யா கூறினார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai