அய்யப்பன் கோயில் பிரசாதம்

அய்யப்பனும் தெய்வமா? மகர சோதியும் உண்மையா? என்ற துண் டறிக்கை வினியோகித்ததாகவும், அதைப் பெற்றுக் கொண்ட வக்கீல் நாகராசன் என்பவர் மனம் புண்பட்டு இதைப் பற்றிக் கேட்டதாகவும் அதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும், எனக்கெதிராக வழக்கொன்று பதிவு செய்தார். அந்த வழக்கு கடந்த மூன் றாண்டாக எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது.

குற்றப் பத்திரிகை தரவோ, சாட்சி விசாரணையோ ஏதுமின்றி வழக்குத் தள்ளிப் போடப்பட்டுவருகிறது. வாய்தாவிற்கு வாதி பல நாட்கள் வருவதில்லை. அதனாலேயே வாய்தா மாற்றி வைக்கப்பட்டு, வருடங்கள் போய்க் கொண்டே இருக்கின்றன. இவ்வழக்கில் பிரதிக்கு தண்டனை கிடைக்காது, அவரை நீதிமன்றத்திற்கு அலைய விடுவதுதான் தண்டனை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென் றால், துண்டறிக்கை வினியோகம் செய்ததாகச் சொல்லப்பட்ட நாளில், பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்காக சென்னைக்கு நான் இரயிலில் சென்று கொண்டிருந்தேன்.

அய்யப்பப் பக்தரும் வக்கீலுமான ஒருவர் பொய் வழக்குப் போட்டுள் ளார். இதில் ஆச்சரியப்பட ஒன்று மில்லை. ஏனெனில் அவர் குமரி மாவட்ட இந்து முன்னணி பொறுப் பாளர்களில் ஒருவர்.

வாய்தாக்களுக்கு நீதிமன்றத்திற்கு அலைய வைப்பது தான் தண்டனை என அவர் எண்ணிக் கொண்டிருக் கிறார். ஆனால் நானோ வாய்தா நாள்களில் நீதிமன்ற வளாகத்தில், கருப்புச் சட்டைத் தோழர்களுடன் கொள்கை பரப்பும் துண்டறிக்கை வினியோகம், பத்திரிகை சந்தா சேர்த்தல், புத்தக விற்பனை போன் றவற்றை செய்து வருகிறோம். அவர் தண்டனை என்று எண்ணுவதைப் பயனுள்ளதாக மாற்றிவிடுகிறோம் வாழ்வியல் சிந்தனை பயின்று வரும் கழகத் தோழர்கள்.

சென்ற வாய்தாவிற்கு நீதிமன்ற அறையின் முன் நின்று கொண்டி ருந்தபோது எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நீதிமன்றம் வருபவர்கள் வயதான வரானாலும், நோயாளியானாலும் நிற்கத்தான் வேண்டும். பெண்களெல் லாம் நிழல் உள்ள தரை, படிக்கட்டு களில் அமர்ந்திருப்பதைக் காண வருத்தமாயிருக்-கும்.

அன்பர், மிகவும் நல்ல மாதிரி, வம்பு தும்பு எதற்கும் செல்வதில்லை. அவருண்டு அவரது வியாபாரமுண்டு என்றிருப்பவர். அவரிடம் மெதுவாக, ‘என்ன இங்கு நிற்கிறீர்களே?’ என்று கேட்டேன். அவர், அய்யோ! அதை ஏன் கேட்கிறீர்கள்? என் கடையி லிருந்து மிட்டாய்களை, சுகாதாரத் துறையினர் எடுத்துச் சென்றனர். “சோதனைக்கு பின் அதில் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப் பிடப்படவில்லை என வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அலைந்து கொண்டி ருக்கிறேன். இது வியாபாரம் நன்கு நடைபெறுகிற நேரம். இங்கு காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என வருத்தப்பட்டார்.

மிட்டாய் கம்பெனிகளிலிருந்து வாங்கி, அய்ந்து அல்லது பத்து லாபத் திற்கு விற்கும் கடைக்காரர் மீது வழக் குத் தொடர்வது என்ன நியாயமோ தெரியவில்லை.

 

இது மாதிரி வழக்குகள் கோயில் பிரசாதத்திற்கு பொருந்தாது போலும். பல கோயில்களில் தின்பண்டங்கள் பிரசாதம் என்ற பெயரில் டின்களில் அடைத்து விற்கப்படுகின்றன. அவற் றில் எதுவுமே குறிப்பிடப்படுவ தில்லை. சுகாதாரத் துறையும் அதனை கண்டு கொள்வதில்லை. கடவுள் மீதுள்ள பக்தியினாலா? பயத்தி னாலா? என்பது தெரியவில்லை.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வங்கியில் பணி புரிந்து வருகிறார். அவர் சபரிமலைக்கு, உண்டியல். பணம் எண்ணுவதற்காக அனுப்பப் பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஒரு வாரம் பணி. அதை முடித்து விட்டு வரும்போது அய்யப்பன் பிரசாதம் வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு டப்பா எங்களுக்கும் தந்தார். அதில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, சரணம் அய்யப்பா, சபரிமலை தேவவஸ்வம் அரவணை பிரசாதம் 250 என டப்பாவின் இரு பக்கங் களிலும் அய்யப்பன் படத்துடன் கூடிய அச்சடித்த தாள் ஒட்டப்பட்டி ருந்தது. அந்த டப்பாவின் பக்கங்கள் மேல் கீழ் என டப்பாவைச் சுழற்றி சுழற்றி பார்த்தேன். ஒரு இடத்தில் கூட தயாரிக்கப்பட்ட நாளோ முடிவுறும் காலமோ, எண்களோ, சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் பெயர்களோ எதுவும் இல்லை, எந்த சுகாதாரத்துறை அதிகாரிக்கும் சோதிக்கத் தோன்ற வில்லையே.

பக்தர்களைப் பாதுகாக்க சுகா தாரத் துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. காவல்துறை வேறு கண்ணும் கருத்துமாய் செயல்படுகிறது. ஆனால் தேவஸ்வம் போர்டு விற்பனை செய்யும் தின் பண்டங்கள் பற்றி யாரும் எண்ணிப் பார்க்க வில்லையே.

அய்யப்பப் பக்தர்களை நோய் நொடிகளிலிருந்தும், திருடர்களிட மிருந்தும் விபத்துக்களிலிருந்தும் காப்பாற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ள அரசு, உணவுப் பண்டங் கள் விற்பனையில் கவனம் செலுத்த வேண்டாமா? ஏற்கெனவே அய்யப் பன் பிரசாதத்தில் ஈ., கரப்பான் பூச்சி கள் கிடந்ததாக குற்றச்சாற்றுகள் உண்டே!

- ப.சங்கரநாராயணன்
தலைவர்,திராவிடர்கழகம்
கன்னியாகுமரிமாவட்டம்.


`சுற்றும்' மாளிகை

சொந்தவீடு நமக்கு நிம்மதி தரலாம். அது சுகமும் தரவேண்டுமானால் பல்வேறு வசதிகளை செய்ய வேண்டும். அவரவர் தகுதிக்கு ஏற்ப வசதிகளை செய்கிறோம். ஏழ்மையால் வீடு கட்ட ஏங்குபவர்களுக்கு குறைந்த செலவில் உடனடி வீடுகள் உருவாக்கவும் அறிவியல் தொழில்நுட்பம் இருக்கிறது. அதேபோல் எல்லாவற்றிலும் நவீனத்தைப் புகுத்தி பிரம்மாண்டங்களை உருவாக்கி புதுமை படைப்பதிலும் விஞ்ஞானம் முன்னேறி வருகிறது. அதில் அதிநவீனமாக சூரியஒளிக்கு ஏற்ப சுழலும் வீடு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை சுழலும் அறைகள், சுழலும் கட்டடங்கள் உள்ளன. இது சூரிய ஒளிக்கு ஏற்ப சுழன்று கொள்ளும் வீடாகும். இந்த வீடு கிழக்கில் இருந்து 15 டிகிரி சாய்வாக வடக்கு நோக்கி அமைந்திருக்கும். இதனால் சூரிய ஒளி குறிப்பிட்ட அளவே வீட்டில் வசிப்பவர்களின் மீது படும். சுழலும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதால் தேவைக்கு ஏற்ப மாற்றியும் வைத்துக் கொள்ளலாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லூக், டெப்பி எவரிங்கம் என்ற தம்பதியினர் இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர். இது சாதாரண வீட்டைவிட பலமடங்கு எடைகுறைவானது. பருவகாலங்களுக்கு ஏற்ப எந்தப் பக்கமாக வேண்டுமானாலும் தலைவாசலை திருப்பிக் கொள்ளலாம்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 
Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai