வகுப்பு வெறியை முறியடிக்க பெரியாரின் சிந்தனைகளே தேவை
இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் கு.வெ.கி.ஆசான், அ.அருள்மொழி, ஆர்.ஜி.ராவ், வித்யாபூஷன்

சென்னை, டிச.27_ வகுப்பு வெறியை முறி-யடிக்க பெரியாரின் சிந்-தனைகள்தான் பயன்-படும் என்று வித்யா பூஷன்-ராவத் நேற்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற மாநாட்டில் கூறி விளக்கமளித்தார்.

7ஆவது தேசிய மாநாடு டிசம்பர் 26 பிற்பகல் மற்-றும் மாலை நிகழ்ச்-சிகள் நேற்று நடைபெற்றன. அதன் தொடர்ச்சி வருமாறு:

வகுப்புவாதத்தை ஒழிப்பதில் பகுத்தறிவு இயக்கங்களின் பங்கு எனும் தலைப்பில் முதல் கருத்தரங்கு நேற்று (26.12.2009) மாலை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட-லில் நடைபெற்றது.

கு.வெ.கிஆசான்

பெரியார் பேருரை-யாளர் கு.வெ.கி.ஆசான் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை-யேற்றார். ஆங்கிலத்தில் உள்ள கம்யூனல் எனும் சொல்லை வகுப்புவாதம் எனும் விரும்பத்தகாத பொருளில் இந்தியா-வில்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயமாக மக்கள் வாழ்-வது, ஒன்றைப் பொது-வாக அவர்கள் பயன்-படுத்துவது ஆகியவை-தான் அச்சொல்லின் இயல்பான பொருள் என்-பதைத் தெளிவுபடுத்-தினார். 1964இல் வெளி-யான கன்சைஸ் ஆக்ஸ்ஃ-போர்டு அகராதியின்படி, சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்வு எனும் பொருளில், கம்யூ-னல் எனும் சொல் இந்-தி-யாவில் பயன்படத் தொடங்-கியதை எடுத்துக்காட்-டினார்.

இந்து முஸ்லிம் பகை

பெரும்பான்மை இந்து மதத்தினர் சிறு-பான்மை மத்தினரை ஒதுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்-பட்ட பொழுது, சிறு-பான்-மையர் சட்டப் பாதுகாப்பை வகுப்பு-ரிமையின் அடிப்படையில் கேட்டனர். அது மறுக்-கப்பட்ட பொழுது இந்து, முஸ்லீம் பகை ஏற்பட்டு, பாகிஸ்தான் பிரிவினை-யில் முடிந்தது.

வி.பி.சிங் ஆட்சியில்

மேல்ஜாதியார் ஆதிக்-கத்தில் இருந்து, ஒடுக்கப்-பட்ட, ஒதுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட ஜாதியார் பாதுகாப்புப் பெற, இட-ஒதுக்கீட்டைக் கோரினர். அதை விழிப்புணர்வுடன் தென்நாடு முன்-னெடுத்-தது. ஆனால் வடபுலத்-தில் வகுப்புரிமை இயக்கம் வலுப்பெறவில்லை. மண்-டல் ஆணையத்தின் பரிந்-துரைப்படி, வி.பி.சிங் பிர-தமராக இருந்த பொழுது, மத்திய அரசில் பணி-யிடங்களுக்குப் பிற்படுத்-தப்பட்டோருக்கு இட-ஒதுக்கீடு அளித்தது. அதைத் தென் மாநிலங்கள் மகிழ்-வுடன் வரவேற்றன. ஆனால் வட இந்தியாவில் மேல்-ஜாதியாரின் தூண்டுத-லால் கலவரம் உண்டா-யிற்று.

உச்சகட்ட கலவரங்கள்

உண்மையான பிரச்-சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப, மதவெறியை இந்துத்-துவா சக்திகள் கிளப்பு-கின்றன. உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சிகளை எழுப்பி, கற்பனைப் பிரச்-சினை-களைக் கொண்டு, சிறு-பான்மை மதத்தினர் மீது வெறுப்பை வளர்த்து கல-வரங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன. 1992இல் பாபர் மசூதி இடிப்பும், 2002இல் குஜராத் கல-வரங்களும் அவற்றில் உச்சகட்டமானவை.

பொதுமக்களின் கவ-னம் தவறான பாதையில் செல்லும் வரை, அவர் மீது தங்கள் ஆதிக்கம் நிலை-பெறும் என்பது படித்த, மற்றும் பணக்-காரக் கூட்டத்தினரின் கணிப்பாகும்.

ஆகையால் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து எளிய மக்களின் கவனத்-தைத் திருப்புதல், கலவரத்-தைத் தூண்டுதல், பக்தி-போதையை ஏற்றுதல், மதவெறியை ஊக்கு-வித்தல் முதலியவற்றில் மதவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் பகுத்தறி-வா-ளர்கள் மக்களுக்கு உண்-மைகளைச் சொல்ல வேண்டும், மூடநம்பிக்-கைகளை முறியடிக்க வேண்டும், அறிவியல் பார்வையை உண்டாக்க வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகளால் விழிப்-படைந்த மக்கள் தேவையான காரியங்-களுக்கும் உரிமைகளுக்-கும் முயற்சி எடுத்துக்கொள்-வார்-கள். வீண் உணர்ச்-சிக்கு ஆட்பட்டு வகுப்-புக் கலவரங்களில் ஈடு-பட-மாட்டார்கள், வகுப்பு-வாதத்தை முறியடிப்-பார்-கள். இவ்வாறு கு.வெ.கி. ஆசான் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி

உயர்நீதிமன்ற வழக்கு-ரை-ஞர் அ.அருள்மொழி பேசுகையில், புத்தரின் போதனைகள் மறக்-கடிக்-கப்பட்டு, வேதியத்தின் அடிப்படையில் கதைகள் பரப்பப்படுவதைக் கண்-டித்தார். சென்னை மாகா-ணத்தில் நீதிக்கட்சி அரசு எல்லாப் பிரிவு மக்களுக்-கும் நீதி கிடைக்கும் வகை-யில் வகுப்புரிமை ஆணை பிறப்பித்து மக்களாட்-சியை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அனைவருக்-கும் தெரிய வேண்டும். இன்னும் தீண்டாமை-யைக் குற்றம் அற்றது எனக் கூறுவோர் இருக்-கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கோவா அறிவியல் பேரவைத் தலைவர், ஆர்.ஜி.ராவ்

இக்காலகட்டத்தில் தேவைப்படுவது மனித-நேயம் என்றார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வித்யாபூஷன் ராவத்

டெல்லி, சமூக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வித்யா பூஷன் ராவத் கருத்து அறிவிக்கையில் பெரியாரின் எண்ணங்-கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றார். வகுப்பு நெறியை முறி-யடிக்க பெரியார் சிந்த-னை-கள் பயன்படும். காந்தி-யார் கூறிய மதச் சார்பின்மை பார்ப்-பனியம் சார்ந்த மதச் சார்பின்மை. பெரியாரின் மதச் சார்பின்மை, மனித நேயம் சார்ந்தது. மதச் சார்பின்மை வர்ணாஸ்-சிரம தர்மத்தை மறுப்ப-தாக இருக்க வேண்டும் என்றார்.

பி.எஸ்.பர்னாலா

பர்னாலா மத குருக்-கள் மூடநம்பிக்கை-களைப் பரப்புவது வருத்தத்திற்கு உரியது எனக்கூறி, பகுத்-தறிவாளர்கள் மக்களை இன்னும் அதிக அளவில் நாடு முழுவதும் சந்தித்-துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai