இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் இரண்டாம் நாள் (27.12.2009) மாநாட்டு நிகழ்வுகள்
புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

சென்னை, டிச.31_ இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் 7ஆவது தேசிய மாநாட்-டின் இரண்டாம் நாள் (27.12.2009) நிகழ்ச்சிகள் தொடர்ந்து பெரியார் திடல், எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றன.

கூட்டமைப்பின் FIRA பொதுக்குழு கூட்டம்

காலை 9 மணிக்கு கூட்டமைப்பின் பொதுக்-குழு, அதன்தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமையில் கூடியது. கூட்டமைப்பின் தேசிய செயலாளர் யு.கலநாதன் செயல்பாட்டு அறிக்கையினை வாசித்தார். செயல்பாட்டு அறிக்கை-யின் மீதான தங்களது கருத்துகளை, கூட்டமைப்-பின் அங்கமாக உள்ள பல்வேறு பகுத்தறிவாளர் அமைப்புகளின் பொறுப்-பாளர்கள் தெரிவித்தனர். அதன் மீதான விவாதங்-கள் நடைபெற்றன.

நிதிக் கணக்கு அறிக்கை சமர்ப்பித்தல்

கூட்டமைப்பின் நிதிக் கணக்கு அறிக்கையினை கூட்டமைப்பின் பொரு-ளாளர் வீ.குமரேசன் சமர்ப்பித்தார். பொதுக்-குழு அறிக்கை மீதான தனது ஒப்புதலை வழங்-கியது. கூட்டமைப்பின் நிதி ஆதாரத்திற்கும், கூட்டமைப்பின் காலாண்டு செய்தி மடல் தொடர்ந்து வெளி வருவ-தற்கான நிதி ஆதாரச் சேர்க்கை குறித்தும் தனது கருத்துகளை வழங்கினர்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

கூட்டமைப்பின் மாநாட்டில், பகுத்தறி-வாளர் இயக்கத்தின் செயல்பாடு, எதிர்பார்ப்பு ஆகியவற்றை பிரதிபலிக்-கும் வகையில் தீர்மா-னங்கள் நிறைவேற்றப்-பட்டன. தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்-தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த -_ தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறி-வாளர் கழகப் பொதுச்-செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாது-காப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்-பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது. 9 தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன. (தீர்மா-னங்கள் விவரங்கள் விடுதலை 28.10.2009 நாளிட்ட தலையங்கத்தில் இடம்பெற்றுள்ளன).

கூட்டமைப்பின்FIRA புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

2009_2011 காலத்திற்-கான இந்திய பகுத்தறி-வாளர் சங்கக் கூட்ட-மைப்பின் புதிய பொறுப்-பாளர்கள் தேர்ந்தெடுக்-கப்-பட்டனர்.

விஜயவாடா நாத்திக மய்யத்தின் செயல் இயக்கு-நர் டாக்டர் ஜி.விஜயம் தேர்தல் அதிகாரியாக இருந்து செயல்பட்டார். கூட்டமைப்பின் புதிய பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்-யப்பட்டனர். பொதுக்-குழு புதிய பொறுப்பா-ளர்கள் தேர்வுக்கு தனது ஒப்புதலை வழங்கியது.

நிறுவனர்: காலம்-சென்ற பி.பிரேமானந்த், புரவலர்: யு.கலநாதன், (கேரளா), தலைவர்: நரேந்திரநாயக் (கர்நா-டகம்), துணைத் தலை-வர்கள்: பர்னாலா (பஞ்சாப்), வீ.குமரேசன் (பகுத்தறிவாளர் கழகம் தமிழ்நாடு), தேசிய செய-லாளர்: ஆர்.ஜி.ராவ் (கோவா), மண்டல செயலாளர்கள்: பிர்தல் (வடக்கு_பஞ்சாப் தெற்கு-_தமிழ்நாடு, வா.நேரு (பகுத்தறிவாளர் கழகம்), தேஷ்முக் (மேற்கு_மகா-ராஷ்டிரம்), தானேஷ்வர் சாகு (கிழக்கு ஒரிஸ்ஸா), வித்யா பூஷன் ராவத் (மய்யம்_ புதுதில்லி), பொருளாளர்: சுகுமாரன் தனுவச்சபுரம் (கேரளா).

மாநாட்டு நிறைவுரை

மாநாட்டு நிறைவுரை-யினை பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் பொறுப்பாளர்களும், திருநெல்வேலி மனோன்-மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணை-வேந்தர்கள் டாக்டர் ஆர்.டி.சபாபதி மோகன் வழங்கினார்.

தனது கடந்த கால பகுத்தறிவாளர் கழகச் செயல்பாடுகளை, புரவ-லர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டு-தலை நினைவு கூர்ந்து பேசினார். மனித இன-மேம்பாட்டுக்கு பகுத்-தறிவு அணுகுமுறைதான் அடிப்படையாக அமைய வேண்டும். அதனை பகுத்-தறிவாளர் இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அறை-கூவலை விடுத்தார்.

தமிழர்தலைவரின் மாநாட்டு முடிப்புரை

மாநாட்டு முடிப்புரை-யினை தமிழர் தலைவர் கி.வீரமணி வழங்கி மாநாட்டு நிகழ்ச்சியினை முடித்து வைத்தார்.

தனது நிறைவுரையில், தந்தை பெரியார் இயக்கச் செயல்பாடு காரணமாக இன்றைய தமிழ்நாடு அரசியல், நிருவாகம், கல்விக்கூடம் என அனைத்துத் தளங்க-ளிலும் பகுத்தறிவா-ளர்கள் பொறுப்பில் வந்துள்ள சூழல் உரு-வாகிவிட்டது. இத்தகைய சூழல் பிற மாநிலங்களில் நிலவவில்லை. ஏன்? பிற நாடுகளில் கூட இத்த-கைய பகுத்தறிவாளர் சூழல் வட மாநிலங்களில் நிலவிய இந்திய பகுத்த-றிவாளர் சங்கக் கூட்ட-மைப்பு தனது பணிகளை நடத்திட வேண்டும். பிரச்சாரம் மேலும் தீவி-ரமாக்கப்பட வேண்டும். அனைத்து இந்திய பகுத்தறிவாளர் அமைப்-பின் ஒருமைப்பாடு கட்-டிக்காக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துச்-சொல்லி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அனைத்து மாநில பொறுப்பாளர்கள், பேராளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கூட்ட-மைப்பின் பொறுப்பாளர்-களுக்கு தனது வாழ்த்து-தலை தெரிவித்துக்-கொண்டார்.

மாநாட்டு சிறப்பு மலரினை கண்களைக் கவரும் விதத்தில், அழகு-ணர்ச்சியுடன் வண்ண வண்ண பக்கங்களைக் கொண்ட மலரினை கணினி மூலம் வடிவ-மைத்த சென்னை கிரி-யேட்டிவ் ஸ்டுடியோ நிறுவனர் எம்.விஜயன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் புதிய தேசிய செயலாளர் ஆர்.ஜி.ராவ் எம்.-விஜ-யனை பாராட்டினார்.

நிறைவாக மாநாட்டு நன்றியுரையினை கூட்டமைப்பின் மண்டல செயலாளர் சுகுமாரன், தனவச்சபுரம் வழங்கிட மாலை நிகழ்வுகள் இனி-தாக, அனைவருக்கும் நிறைவளிக்கும் வகையில், ஊக்கமூட்டிடும் வகையில் முடிவுற்றது.


ஜெ.தாண்டவமூர்த்தி இறுதி நிகழ்ச்சி

வேலூர், டிச.31_ வேலூர் காந்தி நகர் முனிசிபல் காலனியில் வசித்து வந்த முன்னாள் நகர தி.க தலைவரும், ஓய்வுபெற்ற நகராட்சி ஆணையா-ளரும், பெரியார் பற்றா-ளருமான ஜெ.தாண்டவ மூர்த்தி, 4.12.2009 அன்று காலை இயற்கை எய்-தினார். (வயது 78). இவர், தந்தை பெரியார் வேலூர் சி.எம்.சி மருத்துவ-மனைக்கு வரும் போதெல்லாம் உடன் இருந்து கவனித்து கொண்டவர். இறந்த அன்று மாலையே அவ-ரது இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்ற பின்னர் வேலூர் பாலாற்-றங்கரை இடுகாட்டில் அவரது மகன் டாக்டர் தா.மனோகரன் கால்-நடை உதவி மருத்துவர் அவர்களால் எவ்வித சடங்குகளும் இன்றி உடல் எரியூட்டப்-பட்டது.

அன்னாரது நினைவு நாளாக 13.12.2009 அன்று காலை 11 மணியளவில் இல்லத்தில் படத்திறப்பு நிகழ்ச்சி அன்னாரின் நெருங்கிய நண்பரான ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையாளர் கே.இரா-தா-கிருட்டிணன் தலை-மையில் நடைபெற்றது. தொழிலதிபர் வெ.-சோலைநாதன் படத்-தினை திறந்து வைத்து அவரின் சிறப்பினை எடுத்துரைத்தார். கே.சின்-னப்பா சென்னை மாவட்ட குழு சி.பி.எம், எஸ்.ஆர்.செந்தாமரைக் கண்ணன், கே.கிருபா-சங்கர், பிரங்க்ளின் பாண்-டியன் (சி.எம்.சி ஓய்வு) மாவட்ட தி.க அமைப்-பாளர் ச.கி.செல்வநாதன்.

மாவட்ட தி.க செய-லாளர் கு.இளங்கோவன், மாவட்ட தி.க தலைவர் வி.சடகோபன், அன்னா-ரின் மருமகன் சிறீதர் (யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ்) ஆகியோர் மறைந்த ஜெ.தாண்டவ-மூர்த்தி அவர்கள் தந்தை பெரியார் மீது வைத்தி-ருந்த பற்றினையும், கொள்கைப் பிடிப்பினை-யும் பணியில் நேர்மை பற்றியும், எளியோர்க்கு உதவும் பண்பினையும், மகளுக்கு ஜாதி மறுப்பு திருமணம் செய்த விவரம் பற்றியும் எடுத்துரைத்-தனர். அன்னாரின் மகன் டாக்டர் தா.மனோகரன் அவர்கள் நன்றி கூறினார். மாவட்ட தி.க தலைவர் வி.சட-கோபன் பெரியார் நட-மாடும் புத்தக ஊர்தியி-லிருந்து அய்யாவின் கருத்-துகள் அடங்கிய சிறிய புத்த கங்கள் ரூ.1000க்கு வாங்கி அனைவருக்கும் இலவச மாக வழங்கினார். திருச்சி நாகம்மையார் குழந்தை கள் இல்லத்-திற்கு ரூ.1000 (ஓர் ஆயிரம் மட்டும்) வழங்கப்பட்டது.


நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

ஏ.எஸ்.பெரியசாமி (முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி (படத்திறப்பு_21.8.2009), உரிமையாளர், கிளாஸ் பீடிபேக்டரி, குடியேற்றம், அவர்களின் மகள் ஈசுவரி சடகோபன், மாவட்ட மகளிர் பாசறை அமைப்-பாளர் ரூ.250_ம், சரசுவதி பெரியசாமி, 8ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு (31.12.2009), அவரின் தம்பி வி.சட-கோபன் (தலைவர், வே.-மா.தி.க) ரூ.250_ம் வழங்-கினர். நன்றி.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai