மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு:
மதங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல!

மும்பை, ஜன. 8_ அரசமைப்புச் சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்-டுள்ள பேச்சு சுதந்திரம், கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்ற அடிப்-படை உரிமைகளின் கீழ் மதங்களை, அது இசுலா-மாக இருந்தாலும், இந்து மதமாக இருந்தாலும், கிறித்துவ மதமாக இருந்-தாலும், விமர்சனம் செய்-வது அனுமதிக்கப்பட்-டுள்ளதுதான் என்றும், அந்தக் காரணத்துக்காக மட்டுமே ஒரு புத்தகத்தை தடை செய்ய முடியாது என்றும் மும்பை உயர்நீதி-மன்ற அமர்வு தனது தீர்ப்பில் கூறியுள்ளது. என்றாலும் அத்தகைய விமர்சனங்கள் உண்மை-யான நோக்கம் கொண்-டவையாகவும், இரு மதத்-தினரிடையே பகை உணர்வை வளர்ப்பதாக-வும் இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறி-யுள்ளனர்.

உயர்நீதிமன்றம் இவ்-வாறு கூறியிருப்பது மனித உரிமை ஆர்வலர்-களுக்குப் பெரு மகிழ்ச்-சியை அளித்துள்ளது. இசுலாம்_- அரசியல் உல-கின் மீது முஸ்லிம்களின் படையெடுப்பு என்னும் கருத்து என்ற நூலை பாசின் என்பவர் 2003 இல் எழுதி வெளியிட்டி-ருந்தார். 2007 ஆம் ஆண்-டில் மகாராட்டிர அரசு அந்த நூலை தடை செய்-தது. இதனை எதிர்த்து பாசின் உயர்நீதிமன்றத்-தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை நீதிபதி-கள் ரஞ்சனா தேசாய், சந்-திரசூட் மற்றும் மொஹிதி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசார-ணைக்கு வந்தது.

இசுலாம் பற்றி அதிக-மாக அறியப்படாத சில செய்திகளை ஆசிரியர் இந்த நூலில் கூறியுள்-ளார். அவை தவறாகக் கூட இருக்கலாம்; ஆனால் அதை வெளிப்-படுத்தவும் அவருக்கு உரிமை உள்ளது என்று அவரது வழக்கறிஞர் காமா வாதாடினார்.

அரசு வழக்கறிஞரும், சில முசுலிம் அமைப்பு-களின் சார்பில் வழக்கறி-ஞர்களும் தடையை ஆதரித்து வாதாடினர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புத்தகத்தின் மீதான தடையை நீக்க மறுத்துவிட்டனர். என்றா-லும் அவர்கள் தங்கள் தீர்ப்பில், தனக்கு சரி என்று பட்டதை ஆசிரி-யர் கூறலாம்; அது தவ-றாக இருந்தாலும் அதற்-காக அவரை தண்டிக்க முடியாது. என்றாலும், இசுலாம் மதக் கட்டளை-களை ஆராயும் உண்மை-யான நோக்கத்துடன் அத்தகைய கருத்து தெரி-விக்கப்பட்டுள்ளதா என்-பதைப் பார்க்க வேண்-டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த நூலில் அத்த-கைய நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கப்பட்-டிருக்கவில்லை. முசுலிம்-களின் மத உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற கெடு நோக்கத்து-டன் செய்யப்பட்டது போலவே தோன்றுகிறது என்று நீதிபதிகள் கூறி-யுள்-ளனர்.

மதத்தைப் பற்றி விமர்-சனம் செய்ய ஒருவருக்கு உரிமை உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மீது வெறுப்பு மற்றும் பகை உணர்வைத் தூண்டி-விடும் வகையில் அது இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முசுலிம் மத மக்களுக்-கும் மற்ற மத மக்களுக்கு மிடையே போர் நடை-பெறு-வது தவிர்க்க முடி-யாதது என்று கற்பனை செய்து கொண்டு, இந்திய முசுலிம்கள் எவ்வாறு இந்துக்களை மதம் மாறச் செய்ய விரும்புகின்றனர் என்பது பற்றியும், இந்து கோயில்களும் பெண்-களும் எவ்வாறு தாக்கப்-படுகின்றனர் என்பது பற்றியும் ஆசிரியர் எழுதி இருப்பது, மக்களிடையே பகை உணர்வைத் தோற்று-வித்து வன்-முறைக்கு வழிகோலும் என்று நீதிபதிகள் குறிப்-பிட்டுள்ளனர்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai