ஜின்னா சந்திப்பு

இதே நாளில்தான் (1940) தந்தை பெரியார் _ ஜனாப் ஜின்னா _ அண்ணல் அம்பேத்கர் சந்-திப்பு பம்பாயில் நடை-பெற்றது.

மாலை 5.30 மணி-முதல் 8.30 மணிவரை இந்தச் சந்திப்பு நடைபெற்-றது. சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம், ஜஸ்-டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி. நாதன், வழக்குரைஞர் கே.எம். பாலசுப்பிரமணி-யம், ஆகியோர் இந்தச் சந்-திப்பின்போது உடனி-ருந்-தனர்.

இந்தச் சந்திப்பு வர-லாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாட்டுப் பிரிவினை, இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, பார்ப்-பன எதிர்ப்பு என்பவை உரை-யாடலில் முக்கியமாக இடம் பெற்றன.

இந்தித் திணிப்பு என்-பது பார்ப்பன மதத்தையும், கலைகளையும் கருவிகளா-கக் கொண்டு விரிவுபடுத்-தும் குறுகிய நோக்கம் கொண்டது என்பது தெளிவு-படுத்தப்பட்டது.

இந்தி திணிப்பு குறித்து 1926 ஆம் ஆண்டிலேயே குடிஅரசு இதழில் (7.3.1926) தமிழிற்குத் துரோகமும், ஹிந்து மொழியின் இரகசியமும் என்ற தலைப்பிலேயே தந்தை பெரியார் எச்சரித்துள்ளார்.

இனி கொஞ்ச காலத்-திற்குள் இந்திப் பிரச்சாரத்-தின் பலனை நாம் அனு-பவிக்கப் போகிறோம். பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துக்-களில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். அதுபோலவே, 1931 இல் நன்னிலத்தில் நடைபெற்ற வட்டார சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்-மானம் நிறைவேற்றப்-பட்டது.

பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்-சிக்குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நமது மக்களைப் படிக்கும்படிச் செய்வது பார்ப்பனியத்-துக்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுகிறது என்று தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் வெற்றி பெற்ற-போது, அதனைப் பாராட்டி முகம்மது அலி ஜின்னா தந்தி கொடுத்தார் என்-பதும் சிறப்புமிக்க வரலாற்-றுக் குறிப்பாகும்.

தந்தை பெரியார் அவர்-களின் கொள்கைகளை வர-வேற்ற ஜின்னா அவர்கள் இதர மாநிலங்களிலும் சுற்றுப் பயணம் மேற்-கொண்டு இந்தக் கொள்-கை-களைப் பரப்பவேண்-டும் என்று கேட்டுக்-கொண்-டார்.

அதுபோலவே, முகம்-மது அலி ஜின்னா அவர்-களும், பாபா சாகேப் அம்-பேத்கர் அவர்களும் 15 நாள்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வது என்றும் அந்தச் சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.

பல வகைகளிலும் தலைவர்களுடன் தந்தை பெரியார் மேற்கொண்ட மும்பை சந்திப்பு முக்கியத்-துவம் வாய்ந்ததாகும்.

- மயிலாடன்


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai