
இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மாவிலிருந்து ஏராளமான மக்கள், பிழைப்புத் தேடி சட்ட விரோதமாக தாய்லாந்து நாட்டுக்குள் புகுந்துள்ளனர். அவ்வாறு அங்கு தங்கி உள்ள மக்கள், குப்பை கழிவுகளில் கிடக்கும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை எடுத்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இத்தொழிலில் 1000_க்கும் மேற்பட்ட மியான்மா மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேவாலயம் சென்று திரும்பியவர்கள்மீது தாக்குதல்:7 பேர் பலி
கெய்ரோ,ஜன.8_- எகிப்தில் தேவாலயம் சென்று திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்-பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்-டனர். எகிப்தின் கெனா மாகாணத்தில் உள்ள நாக் ஹமாதி நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்றிரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. நள்ளிரவுக்கு சற்று முன்னதாக நடைபெற்ற கிறித்துமஸ் பண்டிகை-யை-யொட்டிய சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டுவிட்டு, கிறிஸ்தவர்கள் ஏராள-மானோர் வீடு திரும்பிக்-கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், திடீ-ரென தேவாலயத்திலி-ருந்து திரும்பிக் கொண்-டிருந்தவர்கள் மீது சர-மாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இதில் ஒரு தனியார் பாது-காவலர் ஒருவர் உள்பட ஏழு பேர் கொல்லப்-பட்டதாக எகிப்து உள்-துறை அமைச்சக அதி-காரி ஒருவர் தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம், இதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கிறித்துவர் ஒருவ-ரால் பாலியல் வன்-கலவி செய்யப்பட்டதற்கு பழிக்-குப் பழி வாங்கும் வித-மாகவே இந்த தாக்-குதல் நடத்தப்பட்டுள்ள-தாக கூறப்படுகிறது.