சிறீநகர் போன்ற இடங்களுக்குச் சென்று காணல், இன்னும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடு-களுக்குச் சென்று, அவ்விடங்களின் வேளாண்மை, தொழில், போக்குவரத்து, நகர அமைப்பு, உணவு, உடை, இருப்பிடம், பழகும் முறை முதலிய-வற்றைக் கண்டுவரல் எனும் வகையில் சுற்றுலாக்-களை மேற்கொள்வது படிப்பினைகளைத் தருவதுடன், நல்ல நினைவுகளையும் நம் நெஞ்சில் சேர்த்து இன்பம் பயக்கும். பண்டிகைகள், விழாக்கள் என்பவற்றுடன் இவற்றையும் மனதுக்கு இதம் தரும் பொழுதுபோக்குகளாகக் கொள்ளலாம்.
உணர்வுக்கு முன்னிடம்
ஒரு முக்கியமான விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். வழக்கமான பணியில் அல்லது அன்றாடத் தொழிலில் நாம் ஈடுபடும்பொழுது, நம் உடலும் உள்ளமும் (கைகால்களும் மூளையும்) வேலை செய்கின்றன. அதாவது உழைப்புக்கும் அறிவுக்கும் முதல் இடம் தந்து பணியாற்று-கிறோம். ஆனால், பண்டிகை திருவிழா சுற்றுலா என வரும்பொழுது உணர்வுக்கு முன்னிடம் தருகிறோம். இனிப்பு உண்ணக்கூடாது என்ற மருத்துவரின் தடையிருந்தாலும் அக்காலங்களில் சிறிதேனும் சுவைக்கிறோம். கொல்கத்தா, ஜலந்தர் முதலிய இடங்களுக்குச் சென்று, அங்கு கிடைக்கும் தனி ரகமான இனிப்பை நாவில் போட்டுப் பார்க்காமல் வருவது எப்படி?
கிருபாநந்த வாரியார் தமது பக்திப் பொழிவைத் தொடங்கும் பொழுதே, அப்பமொடு, அவல், பொரி எனத்தான் பாடுவார். அப்பம், அவல், பொரி ஆகியவற்றில் அவர் காலத்தில் அவ்வளவு மவுசு! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என நான்கு; இவற்றுடன் கொளுக்-கட்டை, சுண்டல்; இத்தியாதியான தின்பண்டங்-களைக் காட்டித்தான், தும்பிக்கையான், யானை முகனைத் தமிழ் நாட்டில் நுழைப்பித்தனர். அய்ந்து வயதிலே அந்தக் கடவுளுக்குத் தோப்புக்-கரணம் போடக் கற்பித்தனர்; கற்றுக்கொண்டவன் ஆயுள் பூராவும் அதைவிட்டான் இல்லை. விநாயக சதுர்த்தியன்று கூடுதலாகப் போட்டான்! அக்கடவுளின் பிறப்பு எவ்வாறு என எண்ணிப்-பார்த்தானா?
பண்டிகை, விசேட நாள் முதலிய பெயர்களில் வெளி மாநிலங்களில் கும்பமேளா; தமிழகத்தில் மகா மகம்; ஆற்றங்கரை, கடற்கரை, குளக்கரை ஆகிய இடங்களில் இலட்சக்கணக்கில் கூடிப் பாவத்தைப் போக்கிப் புண்ணியம் தேடுகிறார்-களே, அவர்-களுடைய நடத்தையில் நாகரிகம் கிஞ்சிற்றேனும் தென்படுகிறதா? இப்படியே வேதனை தரும் செய்திகள் பலவாகச் சொல்லலாம்; இது போதும்!
மூடநம்பிக்கை, இன இழிவு
இவ்வளவு சொன்னதும் ஏன்? ஒவ்வொரு மனிதரும் மகிழ்ச்சியில் நாட்டத்தைத் தவிர்க்க முடியாது; கூட்டமாகக் கூடும்பொழுது அம்-மகிழ்ச்சி அதிகரிப்பதாக உணர்கிறார்கள். அறிவைப் பின்னுக்குத் தள்ளி, உணர்வை முன்னிறுத்தும் விழா அல்லது பண்டிகைக்கால உள இயலைப் பயன்படுத்திப் பார்ப்பனர்கள் பக்தியின் பெயரால் மூடநம்பிக்கைகளையும் இன இழிவையும் புகுத்திவிட்டார்கள் என்பதுதான் நமக்குள்ள ஆதங்கம்! நிலா மறைப்பு, சூரியன் மறைப்பு ஆகியவற்றை இன்னும் ராகு, கேது எனும் பாம்புகள் விழுங்குவதாக நம்பி, அக்காலகட்டத்தில் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறான்! அறிவு விசாலமாவது எவ்வாறு? ஹரிஹரபுத்திரன் வந்த கதை பண்பாட்டு மேன்மையைக் குறிப்பதா?
ராவணனைக் கொல்லும் ராம்லீலா கொண்டாடுவதும், நரகாசுரன் வதைக்காக எண்ணெய் தேய்த்து முழுக்குப் போட்டு மகிழ்வதும், இன இழிவை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமல்லவா? வாமன அவதாரம் எடுத்த மகா விஷ்ணு, மா வலியை (மகா பலியை) ஏமாற்றி, அவன் தலைமேல் கால் வைத்து அழுத்-திப் பாதாள உலகுக்கு அனுப்பியதாகக் கட்டப்-பட்டுள்ள கதையின் உட்பொருளை உணர்ந்த-வர்கள், விஷ்ணுவின் எந்த ஒரு அவதாரத்-திற்-காகவது விழா எடுக்க முன்வருவார்களா? இந்நாட்டின் பூர்வகுடிகள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை வாமன அவதாரமும் குறிப்பிடுகிறது எனக்கூறி, மாமன்னன் மாவலிக்கு விழா எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுக் குரலைத் தந்தவர், மகாத்மா ஜோதிபா ஃபுலெ. மராத்திய மண்ணில் மட்டுமன்றி, மலையாள மண்ணிலும் மாவலிக்கு மக்கள் எல்லாம் கூடி விழா எடுக்கிறார்கள்; அதுதான் ஓணம் எனப்படுவது.
அறிவும் உணர்வும் கலந்தவர்கள் மாந்தர் என்பதையும், பண்டிகைக் காலங்களில் அறிவை-விட உணர்வு மேம்பட்டு இருக்கும் என்பதையும் ஓர் அடிப்படை உள இயல்பாகப் புரிந்து கொண்ட ஆரியம், விழாக்களைப் பயன்படுத்தி இந்நாட்டின் தொல்குடிகளை மூட நம்பிக்கை-யிலும் இன இழிவிலும் ஆழ்த்தியிருக்-கிறது என்ற மெய்ம்மையை மனத்திற்கொண்டு, சமயச் சார்பற்ற பொங்கல் விழாவைத் தமிழர்கள் ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தங்கள் தேசிய விழாவாகக் கொண்டாடி மகிழ்வார்களாக!
நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai