ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்
திட்டமிட்ட காலத்துக்கு முன்பே நிறைவேற்றப்படும்
துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜன.12-_ ஒகேனக்கல் கூட்டுக்-குடிநீர் திட்டம் திட்ட-மிட்ட காலத்துக்கு முன்பே நிறைவேற்றப்-படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்-தின் மீது நடந்த விவாதத்-திற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய-தாவது:-
விலைவாசி என்பது இங்கே தமிழகத்திலே மட்டுமல்ல, இன்றைக்கு இந்தியா முழுவதும் ஏற்-பட்டிருக்கக் கூடிய பிரச்-சினை. விலைவாசியை குறைக்க வேண்டும் என்-பதற்காகத் தான் தொடர்ந்து ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கிக் கொண்டிருக்-கிறோம். துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமா-யில், கோதுமை மாவு, மளிகைப் பொருள்களை மானிய விலையிலே வழங்கிக் கொண்டிருக்-கிறோம். விலைவாசி உயர்-வால் மக்கள் பாதிக்கப்-பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் 2005_-06ஆம் ஆண்டில் ரூ.1600 கோடியாக இருந்த உணவு மானியச் செலவு, தற்போது ரூ.4000 கோடி-யாக உயர்ந்திருக்கிறது.
அரசுப் பணியிலே ஓய்வு பெறக்கூடிய-வர்-களை ஒப்பந்த அடிப்-படையிலே காலிப் பணி-யிடங்களில் நியமிப்பது குறித்து அச்சப்பட வேண்-டிய அவசிய-மில்லை. கடந்த ஆட்சியில் போடப்-பட்ட வேலை நியமன தடை சட்டத்தை ரத்து செய்த ஆட்சி, கலைஞ-ருடைய ஆட்சி என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
இந்த அரசு பொறுப்-பேற்ற பிறகு மே 2006 முதல் செப்டம்பர் 2009 வரை காவல் துறை மூல-மாக 12,471 பேர்களும், அரசு பணியாளர் தேர்-வாணையத்தின் மூலமாக 23,971 பேர்களும், வேலை-வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1,15,073 பேர்களும், காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்-யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களாக 1,84,154 பேர்களும், கருணை அடிப்படையில் 9,145 பேர்கள் ஆக மொத்தம் 3,44,815 பேர்கள் வேலை-வாய்ப்பை பெற்றிருக்கி-றார்கள்.
தேர்வாணையத்தின் மூலமாக பணியிடங்களை நிரப்புகிற நேரத்தில் சில நேரங்களில் ஏற்படக்-கூடிய இடைவெளியை நிரப்புகின்ற நோக்கத்தில் தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறதே தவிர வேறு அல்ல. எந்த ஓர் இளைஞனுக்கும் இந்த அரசாணையால் எந்த விதத்திலும் ஓர் இம்மி-யளவும் பாதிப்பு இருக்-காது.
ஒகேனக்கல் கூட்டுக்-குடிநீர் திட்டம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுடைய நீண்ட காலப் பிரச்சினை என்-பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். 2006-இல் அதற்கான முழு-முயற்சி எடுக்கப்பட்டு, இப்போது அந்த திட்டம் ஒரு கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒப்பந்த அடிப்படையிலே திட்ட மேலாண்மை கலந்தா-லோசகர் ஜப்பான் நாட்டை சார்ந்த நிப்பான் கோய் என்கிற நிறுவனம் 3.10.2008-ல் நியமிக்கப்பட்-டிருக்கிறது. இந்தப் பணி-களை 5 தொகுப்புகளாகப் பிரித்து இதை நாம் நிறை-வேற்றவிருக்கிறோம்.
அந்த 5 தொகுப்புக-ளுக்கான பணிகளைப் பொறுத்தவரைக்கும் டெண்டர் கோரி அந்த 5 டெண்டர்களும் முறை-யாகப் பெறப்பட்டு, தற்-போது அது மதிப்பாய்வு செய்யப்பட்டுக் கொண்டி-ருக்கிறது. நான் உறுதி-யோடு தெரிவித்துக்-கொள்ள விரும்புகிறேன். மார்ச் இறுதிக்குள்ளாக அவையெல்லாம் முடிவு செய்யப்பட்டு, அதனு-டைய தொடக்கப் பணி, களப்பணி, அது மார்ச் இறுதியிலே தொடங்-கப்பட இருக்கிறது.
அது தொடங்கப்-படுவது மட்டுமல்ல, ஏற்-கெனவே அதற்கென்று ஒரு கால அட்டவணை நிர்-ணயிக்கப்பட்டி-ருக்-கிறது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்-குள்ளாக இந்த பணியை நிறைவேற்றிட வேண்டு-மென்று வரம்பு நிர்ண-யிக்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் கூட்டுக்-குடிநீர் திட்டத்தை விரை-விலே முடித்தது போல இதை ஏன் முடிக்க-வில்லை என்று கேட்-டார். அவர் தேர்தலை மனதிலே வைத்து சொன்ன காரணத்தால், நானும் தேர்தலை மனதிலே வைத்தே சொல்கிறேன், 2012ஆ-ம் ஆண்டு என்று கால நிர்ணயம் வைத்து அறிவித்திருந்தாலும், அதைவிட முன்கூட்டியே அதை முடிப்பதற்கான முயற்சிகளில் நிச்சயமாக இந்த அரசு ஈடுபடும் என்ற அந்த உறுதியை நான் தெரிவித்துக்-கொள்-கிறேன்.
வேலூர் மாவட்டத்திற்கு ரூ.1800 கோடியில் குடிநீர் திட்டம்
வேலூர் மாவட்-டத்தில் இருக்கக்கூடிய வேலூர் மாநகராட்சி, திருப்பத்தூர், ஜோலார்-பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய 6 நகராட்சிகள், நாட்-றாம்-பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் 64 வழியோர ஊரகக் குடியிருப்புகள்.

இந்த பகுதிகளுக்-கெல்-லாம் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு 1,400 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே அந்தத் திட்டம் நிறைவேற்றப்-படும் என்று சென்ற ஆண்டு நான் அறிவித்-தேன். ஆனால் தற்போது, அதில் அரக்கோணம் நகராட்சியையும் சேர்த்து, 1,800 கோடி ரூபாய் திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையிலே இப்-போது திட்டம் உருவாக்-கப்பட்டிருக்கிறது. இதற்-குரிய நிதியாதாரத்தைப் பெறுவதற்கான வகையி-லே இப்போது உறுதி செய்து கொண்டிருக்கிறோம். எனவே, அதுவும் விரை-விலே உறுதி செய்யப்-பட்டு, நிச்சயமாக, உறுதி-யாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்-கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் இங்கே மிகுந்த அக்கறையோடு ஒரு கேள்வியை கேட்-டார். கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தைப் பற்றி அவர் பேசி, இதற்கு நிதி ஆதாரங்களை எங்-கிருந்து பெறவிருக்கி-றீர்கள் என்றார். அக்கறை-யோடு கேட்டதற்கு நன்றி. 6 ஆண்டுகளில் ரூ.12,600 கோடி ஒதுக்குவது ஒன்-றும் முடியாத செயல் அல்ல. நிச்சயமாக அந்-தந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே ஒதுக்கீடு செய்து அந்தத் திட்-டத்தை நிச்சயமாக நிறை-வேற்றவிருக்கிறோம்.
காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை
போக்குவரத்து துறை அமைச்சர் நேரு, அவ-ருடைய மாவட்டத்தில் கந்தரசன்கோட்டை தடுப்பணைத் திட்டம் வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைத்திருக்-கிறார். முதல்-அமைச்சரின் அனுமதியோடு நான் இந்த அறிவிப்பை வெளி-யிட விரும்புகிறேன்.
காவிரி ஆற்றின் படு-கையிலிருந்து திருச்சி குடிநீர் திட்டத்திற்கும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கும் நீர் வழங்கக்கூடிய கிணறு-களுக்கு நிலத்தடி நீர் செறி-வூட்டப்பட்டு, கோடைக் காலங்களிலும் தங்கு தடையின்றி நீர் கிடைத்-திட வழிவகை செய்யும் நோக்கத்துடன் திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், கம்பரசம்-பேட்டை கிராமம் அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைக்க ஆய்வுப் பணி-கள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டி-ருக்கின்றது. அந்த ஆய்வ-றிக்கை பெறப்பட்டதும் நிச்சயமாக அவருடைய கோரிக்கையும் நிறை-வேற்றப்-படும். என்றார் அவர்.
இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.


தமிழர் தலைவரின் பாராட்டை சட்டமன்றத்தில்
துணை முதலமைச்சர் பதிவு செய்து பெருமிதம்

ஆளுநர் உரைக்கு தமிழர் தலைவரின் பாராட்டை சட்டமன்றத்தில் பதிவு செய்து நன்றி தெரிவித்தார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நேற்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கையில்:
முதலமைச்சர் கலைஞர் அவர்களின் இலட்சியத்-திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் ஆளு-நர் உரை திகழ்கிறது. ஆளுநர் உரையை பத்திரிகை-களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வெகு-வாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா வீரமணி அவர்கள், ஆளுநர் ஆற்றியுள்ள உரை குறித்து தந்தை பெரியார், அண்ணாவின் லட்சியங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு வளர்ச்சியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு உள்ளது. சொன்னதைச் செய்யும் அரசு தி.முக அரசு என்பதற்கு ஓர் செப்பேடு என்றால் அது மிகையா-காது என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் என்று துணை முதலமைச்சர் சட்டமன்றத்தில் தனது பதிலுரையில் தெரிவித்தார்.
நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai