மூடநம்பிக்கையின்
விளைவு

பில்லி, சூன்யம் எடுப்பதாக ஏமாற்றி தங்கச் சங்கிலி திருடிய மந்திரவாதி கைது
குடந்தை, ஜன. 12_ பில்லி, சூனியம் எடுப்பதாகக் கூறி வியாபாரி மனைவியிடம் தங்கச் சங்கிலியைத் திருடிய மந்திரவாதியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாச்சியார்கோவில் வடக்கு வீதியைச் சேர்ந்த பெட்டிக்கடை நடத்தி வரும் கிட்டுவின் மனைவி வசந்தி. கணவர், சபரிமலைக்குச் சென்றிருந்த நிலையில் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கைரேகை பார்க்கப்படும், பில்லி, சூனியம் எடுக்கப்படும் என்று கூவிக் கொண்டு தெருவில் ஒருவன் சென்றதைக் கண்ட வசந்தி அந்த இளைஞரைக் அழைத்து கைரேகை பார்க்கச் சொல்லியிருக்கிறார். கைரேகை பார்த்த அந்த இளைஞர் உங்களின் கணவருக்கு யாரோ பில்லி, சூனியம் வைத்துவிட்டார்கள். அதற்குப் பரிகாரம் செய்யாவிட்டால் அவரது உயிருக்கே ஆபத்து. உங்கள் கணவரை உடனே அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளார்.
தன் கணவர் சபரிமலை போயிருப்பதாக மனைவி கூற, பரவாயில்லை. அவர் அணியும் நகை ஏதேனும் இருந்தால் கொண்டு வாருங்கள். அதை வைத்துப் பரிகார பூஜை செய்து விடலாம் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார். கிட்டுவின் 3 பவுன் தங்கச் சங்கிலியை வசந்தி அந்த இளை-ஞரிடம் கொடுத்துள்ளார்.தங்க நகையை வைத்துப் பூசை செய்வது போல் நடித்த இளைஞர் தட்டில் பூ, எலுமிச்சம்பழம், குங்குமம் கரைக்கப்பட்ட நீர் ஆகியவற்றைத் தொரு முச்சந்தியில் கொட்டி விட்டு வரும்படி கூறியுள்ளார்.
அவ்வாறு வசந்தியும் கொட்டி விட்டு வீடு திரும்பி வந்தபோது அந்த இளைஞரைக் காண-வில்லை. தங்கச் சங்கலியுடன் அவர் ஓடிவிட்டது தெரிய வந்தது. இது பற்றி காவல் நிலையத்தில் வசந்தி புகார் அளித்ததை அடுத்து, நாச்சியார் கோயில் அருகே உள்ள முளையூர் என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில் நகை திருடியவர் அவர்தான் எனத் தெரிய வந்தது. தங்கச் சங்கி-லியை மீட்டு வசந்தியிடம் ஒப்படைத்த காவல்-துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்தனர்.


மரகத விநாயகனை கடத்திய மூவர் கைது

பாலக்காடு, ஜன. 12_- பாலக்காடு அருகே மரகத விநாயகர் சிலையை விற்க முயன்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களின் எல்லையில் வடக்காஞ்சேரி உள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் ஒத்தப்பாலத்தைச் சேர்ந்த மூன்று பேர் தங்கியிருந்தனர். இவர்களிடம் கோடிக்கணக்கான விலைமதிப்புடைய வலம்புரி மரகத விநாயகர் சிலை இருப்பதாக காவல் துறை-யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருச்சூர் காவல்துறையினர் சிலை வாங்குப-வர்கள் போல், மாறுவேடத்தில் இவர்களிடம் அணுகினர். ஒரே கல்லால் செதுக்கிய பழமையான வலம்புரி மரகத விநாயகர் சிலை இருந்தது. இது, 212 கிராம் எடை கொண்டது. பேரம் பேசியபோது, 25 லட்சம் ரூபாய்க்கு சிலையை விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மாறுவேடத்-தில் சென்ற காவல்துறையினர் உடனடியாக வடக்-காஞ்சேரி ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தனர். ஆய்வாளர் ஷினோஜ் தலைமையில் காவல்-துறையினர், சிலை விற்கும் கும்பலை சுற்றி வளைத்-தனர். சிலை விற்க முயன்ற சிவகுமார், அஜயகுமார், சுரேஷ்பாபு ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மரகத விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.


சபரிமலை பாதுகாப்புக்கு ரூ.7 கோடியில் புதிய கருவிகளாம்

சபரிமலை, ஜன. 12_ சபரிமலை பாதுகாப்புக்கு ஏழு கோடி ரூபாய் செலவில் புதிய கருவிகள் வாங்கப்-பட்டுள்ளன. நெரிசலை தவிர்க்க, தரிசனத்துக்கு முன்பதிவு செய்வது பற்றி தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.சபரிமலை பாதுகாப்பிற்காக, கேரள அரசின் கெல்ட்ரான் நிறுவனம் மூலம், ஏழு கோடி ரூபாயில் ரசாயன, வெடிபொருட்களை கண்டு பிடிக்கும் தெர்மல் டிடெக்டர்கள், நொறுங்கி விழுந்த கட்டடங்களின், இடிபாடுகளுக்குள் உயிருக்கு போராடுபவர்கள் இருக்கின்றனரா என்பதை கண்டுபிடிக்கும் லைப் டிடெக்டர்கள், பாடி ஸ்கேனர்-கள் உள்ளிட்ட நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. மண்டல மகரவிளக்கு சீசன் காலத்தில் ஏற்படும் நெரிலை தவிர்க்க முன்பதிவு முறையை அமல்படுத்துவது பற்றியும், காவல் துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம். முதற்கட்டமாக சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அமல்படுத்தி விட்டு, அது வெற்றிகரமாக நடைபெற்றால் சீசன் முழுவதும் அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.


பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் தயாரிப்பு பயிற்சி

தேனி, ஜன. 12_ அனைவருக்கும் கல்வி திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நாப்கின் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எட்டாம் வகுப்பில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை பிரிவு, பெண் கல்வி திட்ட மாணவிகளுக்கு, சுயதொழில் திறனை மேம்படுத்தும் வகையில், ஜனவரி 20இல் நாப்கின் தயாரிப்பு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்-பட உள்ளது. தமிழகத்திலுள்ள 900 வட்டார வள மையங்களிலும், 45 ஆயிரம் மாணவியருக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், 1,500 மாணவியர் பயிற்சி பெற உள்ளனர்.பயிற்சி செலவிற்-காக, அரசு, மூன்று கோடியே 29 லட்சத்து 9 ஆயி-ரத்து 950 ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மாண-வியருக்கு பயிற்சி அளிப்பதற்காக, இன்று ஆசிரியை-களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டமாக, மாவட்டத்திற்கு, 60 ஆசிரியைகள் வீதம் பயிற்சி பெறுகின்றனர்.நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai