தமிழர்களுக்கென்றொரு விழா தை முதல் நாள் (ஜன.14)
தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழாவே!


தமிழனுக்கென்று ஓர் ஆண்டு குறிப்பு வரலாற்றுக் குறிப்பு வேண்டாமா? தமிழர்களுக்கு என்று ஆண்டுதான் என்ன? தமிழர்-களுக்கு என்று ஏதாவது விழா இருக்-கிறதா? என்று பார்த்தால் இவைகளுக்-கெல்லாம் விடை இப்பொழுதுதான் அதாவது 90 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மிகச் சரியான விடை கிடைத்-திருக்கிறது.
தமிழனுக்கென்று பண்டிகை - வரலாறு
எதற்கும் காரண காரிய ஆதாரம் இருக்க வேண்டாமா? தீபாவளி என்று ஒரு ஆரிய பண்டிகையை எதற்காகக் கொண்டாடு-கிறார்கள்? என்ன காரணத்திற்காகக் கொண்டாடுகிறோம் என்கிற சங்கதியே தமிழர்களுக்குத் தெரிவதில்லை. ஏதோ முன்னோர்கள் காலத்திலிருந்து கொண்டாடு-கிறார்கள் அவ்வளவுதானே தவிர வேறு ஒன்றும் தெரியாது என்று சொல்லுகிறார்கள். தீபாவளி பண்டிகை என்பது எப்படிப்பட்ட அறிவுக்குப் பொருந்தாத ஒரு மூடப்பண்டிகை என்பதை மக்கள் இதுவரை உணர வில்லை.
தமிழனுக்னென்று ஒரு புத்தாண்டு, தமிழனுக்கென்று பண்டிகை எது என்பதை நமக்காக பாடுபட்ட அறிஞர் பெருமக்கள், தலைவர்கள், காரண காரியத்தோடு விளக்கி-யிருக்கின்றார்கள். அந்த விளக்கங்கள் கடந்த சில ஆண்டுகளாகத்தான் வெளியில் வரத் தொடங்கி மக்களிடையே இன்று மெல்ல மெல்ல பரவி வருகிறது. அந்த வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? இதோ அதற்குரிய வரலாற்றை ஒரு பருந்துப் பார்வை போல் சுருக்கமாக உங்களுக்குக் காட்ட விழைகின்றோம்.
1921இல் 500 அறிஞர்கள் கூடி முடிவெடுத்தனர்
1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடி-களார் தலைமையில் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் நடைபெற்ற தமிழாண்டு தீர்மானிப்புக் கருத்தரங்கில் எடுக்கப் பெற்ற முடிவின்படி திருவள்ளுவராண்டின் அடிப்படையில் தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் பின்பற்ற வேண்டும்.
இம்முடிவு முதன்மையான தமிழறிஞர்கள் எழுவரின் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்-டது. அவர்கள் (அ)மறைமலையடிகளார் (ஆ) பேரா. கா.நமச்சிவாயர் (இ) தமிழ்த் தென்றல் திரு.வி.க. (ஈ) தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணி-யம் (உ) சைவப் பெரியார் சச்சிதானந்தம் (ஊ) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் (எ) நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் கலந்து கொண்ட கருத்தரங்கில் 500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் ஏற்பிசை வழங்-கினார்கள்.
பெரியார் கூட்டிய மாநாட்டிற்குப் பிறகுதான் பரவியது
1935-_ஆம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்-டில் கா. சுப்பிரமணியனார், மதுரை பி.டி. இராசன், திரு.வி.க. மறைமலையடிகளார் முதலான தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் பொங்கல் சமய விழாவா? சமயமற்ற விழாவா? என்ற பலத்த விவாதம் நடை பெற்றது.
பொங்கலைச் சமய விழா என்று சொல்லி, சர்ச்சையைக் கிளப்பி குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம்மா-நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
இது சமய சார்பு இல்லாத விழா. எந்தச் சமயத்துக்காரன், எந்தச் சூத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்தப் புராணம் இருக்கிறது? எந்த இதிகாசம் இருக்கிறது? என்று கேட்டு மிகவும் சீற்றம் அடைந்தார்.
எனவே எந்தப் புராணமும் இல்லாதபோது, தமிழில் புறநானூற்றில் பிட்டங்கொற்றவனின் வரலாற்றில் கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கிறது. இதை யார் மறுக்க முடியும்? என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. இதை ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி, என்றார். இல்லை, நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார்.
பெரியார்தான் இம்மாநாட்டை நடத்தினார். பொங்கல் மதச் சார்பற்ற முதன்மையான பொன்னான தமிழர் விழா என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் சொன்னதும் அனைவரும் கையொலி எழுப்பினர்.
அதன்பிறகுதான் மிகச் சிறந்த விழாவாக பொங்கலை அனைவரும் ஏற்கத் தொடங்கினர். இந்த வரலாற்றுச் செய்தி பெரும்பாலோருக்குத் தெரியாது. பெரியார் ஏற்றுக் கொண்ட பிறகுதான் குடிஅரசு இதழிலும் மற்றைய திராவிடர் கழக ஏடுகளிலும் பொங்கல் தமிழ் புத்தாண்டை ஏற்று ஆதரித்து கருத்துகள் எழுதப்பட்டன.
மாநாட்டில் ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொங்கலைப் பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்-தார் பி.டி.இராஜன், வழிமொழிந்தவர் திரு.வி.க. இதுதான் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளின் வரலாறு.
பெரியாரின் சரமாரியான கேள்விகள்
தமிழனுக்கென்று ஏதாவது ஒரு சரித்திரம் உண்டா? குறிப்பு உண்டா? தமிழனுக்கென்று ஒரு பண்டிகை உண்டா என்று தந்தை பெரியார் அவர்கள் ஆதங்கத்தோடும், கவலையோடும் மக்கள் தன்நிலை உணர்ந்து, காரண காரியத்தோடு அறிந்து தலை நிமிர்ந்து வாழ வேண்டாமா? என்ற ஒரு கேள்வியை, 8-.4.-1944 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் கட்டுரையில் சரமாரியாகக் கேட்டார்.
இந்தக் கட்டுரையில் பெரியார் கூறுகிறார்: ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகள் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபச்சாரம், இயற்கைக்கு மாறான மடத் தனமான சங்கதிகள் முதலியவைகள் இல்லாமல் இருப்பது மிகமிக அதிசயமாகும்.
தமிழ் வருஷப் பிறப்புக் கதை நாகரிகமுள்ள மக்களால் எழுதப்பட்டிருக்க முடியுமா? இதைப் படித்துப் பார்க்கும் அன்னியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்னவென்று நினைப்பான்?
கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாகவும், சரித்திரத்திற்குப் பயன்படத்தக்கதாகவும் நாகரிகம் உள்ளதாகவும் உள்ள வருஷக் கணக்குகள் இருக்கின்-றன. உதாரணமாக அவர்களது வருஷங்களுக்கு கி.மு., கி.பி., ஹிஜிரி என்கின்ற பெயர்களும் அவற்றுக்கு நல்ல ஆதாரமுள்ள கருத்துகளும் இருக்கின்றன.
ஆனால், தமிழனுக்கு - நாதியற்ற தமிழனுக்கு_ என்ன வருஷம் இருக்கிறது? அதற்கு என்ன கருத்து என்று பார்ப்போமானால், தமிழர் என்கின்ற பெயர் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்க-மில்லையா என்றுதான் தோன்றும். தமிழனின் நிலையை ஆரியர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் மானங்-கெட்ட காட்டுமிராண்டி, லம்பாடி சமூகமாக ஆக்கி-விட்டதால், இவ்வளவு விழிப்பு ஏற்பட்ட இந்தக் காலத்-திலும் தமிழனுக்கு சூடு சொரணை ஏற்படுவதில்லை.
கோயிலுக்குத் தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால், மற்றபடி தமிழனால் ஆக்கப்பட வேண்டிய இழிசொல் வேறு என்ன இருக்கிறது? இது மாத்திரமா? மோட்சம் என்றால் தமிழன் எதையும் செய்ய முன் வருகின்றான்.
ஆய பயன் அய்ந்து என்று சொல்லிக் கொண்டு மாட்டு மூத்திரம், ச்ணி எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கின்றான். நாம் நம் வருஷப் பிறப்புக்குத் தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லிக் கொள்கிறோம். இது நியாயமா? தமிழ் வருஷப் பிறப்புக் கதையைப் பாருங்கள் என்று கூறும் தந்தை பெரியார் மேலும் சொல்லுகிறார்.
நாரதர் பிரம்மரிஷி. அவருக்கு ஒரு நாள் காம இச்சை ஏற்பட்டதாம். எங்கும் போனால் இது தீரும் என்று ஞான திருஷ்டியினால் பார்த்து, சாட்சாத் கிருஷ்ண பகவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி கிருஷ்ணனிடம் ஓடினாராம்.
கிருஷ்ண பகவான், நாரத முனிசிரேஷ்டரே, எங்கு வந்தீர்? என்றாராம். அதற்கு நாரதர், ஒன்றும் இல்லை என்று தலையைச் சொரிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம்.
கிருஷ்ண பகவான், சும்மா சொல்லும்! என்றாராம். நாரதர் எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்-கிறார்களே. அதில் ஒன்று கொடுங்களேன்! என்று கேட்டாராம். உடனே, கிருஷ்ண பகவான், இதுதானா பிரமாதம், இன்று இரவு எனது அறுபது ஆயிரம் கோபிகளில் நான் இல்லாத ஒரு கோபியின் வீட்டிற்-குப் போய் அங்குள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றாராம்.
உடனே நாரதப் பிரம்மம், கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக 59999 கோபிகள் கிடைத்ததாகக் கருதிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீடு நோக்கிச் சென்றாராம். அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் கிருஷ்ண பகவான் கோபியுடன் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு, வெகு கோபத்துடன் கிருஷ்ண பகவானின் வீட்டிற்கு வந்தார்.
வழியில் என்ன நினைத்துக் கொண்டு வந்தார் என்று யோசித்தால், அது மிகவும் வேடிக்கையானது. அதாவது இப்படி நம்மை மோசம் பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்று தான் கருதிக் கொண்டு வந்தார் என்று தெரிய வருகிறது. அதாவது, பகவானே! நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர்; ஆதலால் சும்மா வந்து விட்டேன். அதன் நிமித்தம் நான் தேவரீரையே அனுபவிக்க ஆசைப்படுகிறேன் என்று நாரதர் சொன்னதோடு, பகவானைப் பெண்ணாகக் கொண்டு அனுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரோ என்று கருதினார் போலும். பகவானே என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அனுபவிக்க எண்ணிக் கொண்டேன் என்று கெஞ்சினார்.
பகவான் உடனே கருணை கொண்டு சிறீமதி நாரத அம்மாளை அனுபவித்தார். இந்த நாரத அம்மையுடன் 60 ஆண்டுகள் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்றென்றால், ஆணாய் இருந்தால் என்ன, பெண்ணாய் இருந்தாலென்ன, பகவான் கிரீடை செய்தால் வீணாய்ப் போகுமா? போகவே போகாது.
எனவே 60 வருஷ லீலைக்கும் நாரத அம்மாளுக்-கும் 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த 60 பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக் கொண்டு எங்களுக்கு என்ன கதி? என்று கேட்டன.
பகவான் அருள் சுரந்து நீங்கள் 60 பேரும் 60 வருஷங்-களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கு உலகை ஆளுங்கள் என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்டு அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப் பட்டு, வருஷந்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.
ஆகவே இந்த 60 வருஷங்கள், பகவானும், ரிஷியும் ஆன ஆணும் ஆணும், ஆண் - பெண்ணாகச் சேர்ந்து பிறந்த குழந்தைகள். இதற்காகத்தான் வருஷப் பிறப்பு கொண்டாடுகிறோம்.
இப்படி ஆணும் ஆணும் சேர்த்ததால் பிறந்த அதிசயமான பிள்ளைகளானாலும் இந்த வருஷப் பெயரையோ எண்ணிக்கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கண்டு பிடிக்க முடிவதில்லை. அதனால்தான், தமிழனுக்கு சரித்திரம் இல்லை என்பதோடு, தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் இல்லை.
ஏதாவது ஒரு சனியனையோ!
ஆகையால், இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ கால முறையை காரித்துப்பிவிட்டு, கி.பி.யையோ, ஹிஜிரியையோ, கொல்லத்-தையோ (கொல்லம் ஆண்டு), விக்கிரமாதித்-தனையோ சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சனியனையோ குறிப்பு வைத்-துக் கொள்வார்களா? அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் நெஞ்-சில் கொள்கிறோம் என்று தந்தை பெரியார் அறிவார்ந்த முறையிலே தர்க்க ரீதியாகக் கேட்டு தமிழா உனக்கு என்று ஒரு சரியான வரலாற்றை, சரியான குறிப்பை, சரியான தமிழாண்டை வைத்துக் கொள்ள வேண்டாமா என்று அன்று தனது சிந்தனையி-ன் மூலம் தமிழினத்தையே தனது பிரச்சார பலத்தால் ஒரு கலக்கு கலக்கி சிந்திக்க வைத்தார். அதன் விளைவு என்ன?
தமிழர் தலைவர் பிரச்சாரம்
தமிழனுக்கென்று புத்தாண்டு தைமுதல் நாள்தான். சித்திரை அல்ல. தமிழர்கள் கொண்டாட வேண்டிய பண்டிகை தீபாவளி அல்ல. அது நம் இனத்திற்கே எதிரான பண்-டிகை. ஆரிய குல மக்கள் ஆட்டுவிக்கின்ற பண்-டிகை என்பதை பல ஆண்டுகளாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மேடைப் பேச்சுகள் மூலமாக, அறிக்கைகள் வாயிலாக, மக்களி-டையே பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்-களும் தை முதல்நாள்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு, பொங்கல் விழாதான் தமிழர்-களுக்கு விழா என்பதைப் பேசியும் எழுதியும் வருகிறார்.
கலைஞர் ஆணை
கலைஞர் அரசு 2008 ஆம் ஆண்டு உலகத் தமிழர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியை சட்டமாக இயற்றி அறிவித்தது.
ஜனவரி 14ஆம் தேதி தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டின் தொடக்கம். அதே ஜனவரி 14ஆம் தேதி தான் பொங்கல் பண்டிகையினை தமிழர்களாகிய நாம் கூடிக் குலவிக் கொண்டாட வேண்டும் என்கின்ற அறிவிப்பாகும்.
தமிழர்களுக்கு என்று இருக்கின்ற மாபெரும் விழா இந்தப் பொங்கல்; பண்டிகைதான் என்பதை பறைசாற்றினார். தை முதல் நாள்தான் ஜன.14 தமிழ்ப்புத்தாண்டு என்பதையும் அறிவித்தார்.
அது மட்டுமல்ல. சென்னை மாநகரில் சென்னை சங்கமம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ்க் கலைஞர்களை வரவழைத்து தமிழ்க் கலை நிகழ்ச்சிகளையும், வீர விளையாட்டு-களையும் நடத்திடச் செய்து தமிழர்களின் கண்களுக்கும் உள்ளங்களுக்கும் இன்ப விருந்தளித்தார். அளித்து வருகிறார்.
திராவிடர் கழகமோ ஆரம்ப காலத்தி-லிருந்தே தமிழ்ப் புத்தாண்டையும், பொங்கல் பண்டிகை யையும் தமிழர்கள் புத்தாடைகளை அணிந்து, இனிப்புகளை வழங்கி, ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி தமிழர்கள் வாழ்வில் இன்பமயமான நாட்கள் என்பதை பிரச்சாரம் செய்தது; செய்து வருகிறது.
உலகெங்கும் மகிழ்ச்சிக் கூத்தாடட்டும்
உலகத் தமிழர்களே! தமிழ்ப் புத்தாண்டை-யும், பொங்கலையும் கொண்டாடி மகிழ்ச்சிக் கூத்தாடுங்கள்!

சிங். குணசேகரன் (தலைமை செய்தியாளர், விடுதலை)
நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai