பொங்கல் விழாவினை மட்டும் கொண்டாடுவதில்தான் எங்கள் குடும்பம் மகிழ்கிறது!

பேராசிரியர் மு.நாகநாதன் பெருமிதம்!
முதலில் நாம் மாநில திட்டக்குழு துணைத் தலைவரும், பேராசிரிய-ருமான மானமிகு மு.நாக-நாதன் அவர்களை குடும்-பத்துடன் சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் சந்-தித்தோம். விடுதலை ஏட்-டிற்கு என்றதும் மிகுந்த நெருக்கடிக்குள்-ளும் நமது வாசகர்களுக்காக தனது நேரத்தை செலவிட்டார். இனி பேராசிரியர் பேசு-கிறார்.
விடுதலை: பொங்கல் விழாவை தாங்கள் எப்-பொழுது முதல் கொண்-டாடி வருகிறீர்கள்?
மு.நாகநாதன்: பள்ளிக் காலம் தொட்டு பகுத்தறி-வின் மீதும், திராவிட இயக்-கத்தின் மீதும் பற்று கொண்ட நான், பொங்கல் விழா-வினை மட்டும்தான் சிறப்புடன் கொண்டாடு-வேன். சாதி மறுப்பு, காதல், பகுத்தறிவு திருமணமாக எங்கள் திருமணம் நிகழ்ந்-தாலும், என் இணையர் பொதுவுடைமை இயக்-கத்தைச் சார்ந்தவராக அமைந்ததாலும், மத, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் வழி-யில் வாழ்க்கையை மகிழ்ச்-சியோடு அமைத்துக் கொண்-டோம். எனவே, உழவர் திருநாளாகவும், உழைப்பவர் விழா-வாக-வும் அமைந்த பொங்-கல்-தான். பொருத்தமான ஒரே விழா-வாக எங்கள் குடும்பத்தில் கொண்டா-டப்படுகிறது. எவ்வித சடங்குகளும், சம்பிர-தாயங்களும், மூடநம்பிக்-கைகளும், எள் முனை அளவில்கூட இந்த இனிய பொங்கல் விழாவில் முளைத்து-விடக் கூடாது என்ற உணர்வோடுதான் இவ்விழாவை எடுக்-கி-றோம்.
குடும்பம் குடும்பமாக பகுத்தறிவு நெறியை எல்லாவற்றிலும் பின்-பற்றினால்தான் மகிழ்ச்சி-யும் அமைதியும் இல்லத்-திலும், சமுதாயத்திலும் தழைத்தோங்கும் என்-ப-தற்கு எடுத்துக்காட்டாக, எனது மகன்கள் மருத்து-வர் முத்தழகன், மருத்து-வர் எழிலன், பொறியா-ளர் ஜெகன் ஆகியோரும் கடவுள் மறுப்பாளர்-களாக, பெரியார் வழி நிற்-பவர்-களாக வளர்ந்து வருகின்ற-னர். தலைப்-பொங்கல் காணும் எனது மருமகள்-கள் திருமதி. சாரதா, மருத்துவர் பிரியா இரு-வரும் பகுத்தறிவு நெறி-யில் பக்குவப்பட்டு வருகிறார்-கள். நல்ல குடும்-பம் ஒரு பல்கலைக்-கழகம் என்று அழைக்கப்-படுவதுண்டு. அய்யா, அண்ணா வலி-யுறுத்-திய மானமும், அறி-வும் இணை-வதால் எங்கள் குடும்பம் ஒரு பகுத்தறிவுக் கலனாக நின்று பெரியார் என்னும் பகுத்தறிவுப் பல்கலைக்-கழகத்தோடு இணைந்து பொங்கல் விழாவைச் சிறப்புடன் கொண்டாடு-கிறது.
விடுதலை: தாங்கள் பணிக்காலத்தில் பொங்-கல் விழாவை பல்கலைக்-கழகத்தில் கொண்டாடி உள்ளீர்களா?
மு.நாகநாதன்: சென்-னைப் பல்கலைக்-கழகம் எனக்குப் பல படிப்பினை-களையும், பாடங்களையும் அளித்துள்ளது. பொருளா-தாரத் துறையில் 1975இல் விரிவுரையாளராக இருந்து, பேராசிரியராக, துறைத் தலைவராக 1987-இல் பொறுப்பேற்-றேன். 2006இல் விருப்ப ஓய்வு பெற்றேன். அறிவுக்குக் கலங்கரை விளக்கமாக விளங்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தி-லேயே ஆயுத பூசைதான் போற்-றப்-பட்டது. இந்நிலையை மாற்றி 1987_லிருந்து மதச்சார்-பின்மைக்குச் சான்றாக அமைந்த பொங்-கல் விழாவினை நாம் கொண்டாட வேண்-டும் என்று மாணவர்கள், உடன் பணியாற்றிய ஆசிரி-யர்கள், ஊழியர்-களிடத்-தில் எடுத்து-ரைத்து வெற்-றியும் பெற்-றேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை மலரின் மாண்பு மணத்-தில், விழாவின் மாண்பு பொதுவுணர்வில் அமைய வேண்டும் என்று குறிப்-பிட்டார். பொருளா-தா-ரத் துறை எடுத்த பொங்-கல் விழா பொதுவுணர்-வையும், பகுத்தறிவு உணர்வையும் போற்றி-யது. அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி, இசைப் போட்டி, அறிவுப் போட்-டிகள் என பல போட்டி-கள் போட்டி-யிட்டன. பொங்கல் விழா-வின் சிறப்பினை உணர்ந்த பல கல்லூரிகளிலும், ஆண்டு தோறும் இவ்-விழாவைக் கொண்டாடி வருகின்றன.
விடுதலை: தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்-டாக கொண்-டாட-வேண்-டிய அவசி-யம் பற்றி?
மு.நாகநாதன்: மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்-கள் பொங்கல் விழா-வைத் தமிழ்ப் புத்தாண்-டாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவித்-துள்ளார். இது தமிழரின் சமூக வாழ்வில் ஒரு திருப்பு முனையாகும். பஞ்சாங்க மூட மத விழாக்களுக்கு விடை கொடுக்கும் வரலாற்று நிகழ்வாகும். இதனால் பொங்கல் விழா பொலி-வும், புதுமையும் பெறு-கிறது. ஏழை, பணக்காரர் என்றில்-லாமல் அனைத்-துத் தமிழர்-களும் விழா எடுக்கின்ற-னர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், ஆசிரியர் வீர-மணியார் ஆகியோர் செய்த தொண்-டுக்கு கிடைத்த வெற்றி என்று பொங்கலைக் கொண்--டாடு-வோம், தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்-போம்.

தமிழரின் வாழ்விலும், பண்பாட்டிலும் பொங்கலுக்கு ஈடான விழாவுமில்லை, தைக்கு ஈடான திங்களும் இல்லை.
தங்களது வாழ்வில் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், எத்தனைச் சிக்கல்கள் தோன்றினாலும், அதற்கெல்லாம் தீர்வையும், விடையையும் தரும் என்ற அனுபவப்பூர்மான நம்பிக்கையுடன் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழி தமிழர் வாழ்வில் என்றோ தோன்றி இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அந்த அளவிற்கு தை மாதப் பிறப்பு தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால்தான் அம்மாதப் பிறப்பையே ஆண்டின் துவக்கமாகவும், முதன்மைப் பண்டிகையாகவும் தமிழ் மண்ணெங்கும் கொண்டாடப்படுகிறது.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவரும் ஒரு நெடிய நாகரிக இனமான தமிழரின் வாழ்வில் ஆடிப் பட்டம் தேடி விதைத்து, தென் பெண்ணை ஆற்றிலிருந்து தெற்கே தாமிரபரணி வரை உள்ள தமிழ்நாட்டின் நதிகளில் தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழைகளால் ஏற்படும் புதுப் புனலை எதிர்பார்த்து நாற்று விட்டு, களையெடுத்து மார்கழி முடிவிற்குள் கதிரறுத்து, களத்து மேட்டில் போரடித்து, சிதறிக் குவிந்த நெல்லை வீட்டுப் பத்தாயத்தில் கொண்டு வந்து நிரப்பி, இயற்கையின் பலனை உழைத்துப் பெற்ற உவகையுடன் தை முதல் நாளில் அந்த புது நெல்லைக் குத்தி அரிசியாக்கி, புதுப் பானைகளிலிட்டு, வீட்டிற்கு வெளியே அடுப்புக் கட்டி அதில் வெண் பொங்கலாகவும், சர்க்கரைப் பொங்கலாகவும் சமைத்து, பக்கத்திற்கு ஒன்றாக கரும்பு சாத்திவைத்து பானையிலிட்ட அரிசி வெந்து பொங்கிவரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று முழங்கி புத்தாண்டை கொண்டாடும் மரபு தமிழர் வாழ்வின் அடையாளமானது.
இன்றும் தை பிறந்தபின்னரே பெண் பார்த்தல், திருமண நிச்சயம் செய்தல் போன்றவையெல்லாம் செய்யப்படுவது வழமையாக உள்ளது. தொழில் தொடங்குதல், விற்றல் - வாங்கல், புது மனை புகுதல் ஆகியன தையிலேயே - குறிப்பாக கிராமங்களில் - நடத்தப்படுவதைக் காணலாம்.
ஆக தமிழரின் வாழ்வும் வளமும் தை மாதத்தையே அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. எனவேதான், தை மாதத்தை தமிழாண்டின் துவக்கமாக கொள்ள வேண்டும் என்று தமிழ் அறிஞர்களின் விடுத்த வேண்டுதலை ஏற்று முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு தை மாதத்தை தமிழர் புத்தாண்டாக அறிவித்தது.
தை பிறக்கட்டும், தமிழர் வாழ்வு செழிக்கட்டும்!.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai