மானமும்அறிவும்
மங்காதவிழா!

ஆட்டம், பாட்டு, விளையாட்டு, விநோதம், வேடிக்கை, கேளிக்கை அவற்றிற்கான பண்டிகைகள் திருவிழாக்கள் முதலியவற்றை உலகெங்கும் உள்ள எல்லாச் சமுதாயங்களும் எல்லாக் காலங்களிலும் நாடின, இன்றும் நாடுகின்றன. நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம், சமுதாயத்திற்குச் சமுதாயம் விழாக்களில் வேறுபாடு உண்டு. வேறுபாடுகளுக்கு இடை-யில் ஒற்றுமையும் உண்டு. அன்றாட நடப்-பிலிருந்து விழாவின்பொழுது விலகி நடக்கிறோம். என்றுமுள்ள உணவுடன், பண்டிகையின்பொழுது கூடுதலான சுவையுள்ள பண்டங்கள் ஒன்றிரண்-டாவது சேர்த்துக் கொள்கிறோம். புத்தாடைகள் அணிகிறோம்; நமக்கு இல்லாவிட்டாலும் குழந்தை-களுக்கும், சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் அணிவிக்கிறோம்.
இவற்றிற்கு எல்லாம் மேலாக உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறோம். அல்லது பொதுவாக அன்-றைக்கு மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்கி-றோம்; கடவுள் நம்பிக்கையாளர்கள் வழிபாட்டு இடங்களுக்குச் செல்கிறார்கள்; மற்றபடி அனைவரும் ஆற்றங்கரை, கடற்கரை, விளையாட்டு, வேடிக்கை, கேளிக்கைக் காட்சிகள் முதலியன நடைபெறும் இடங்களுக்குச் செல்கிறோம்.
அடிப்படை மன இயல்பு
உலகில் உள்ள வெவ்வேறு சமுதாயத்தினரும் இவ்வாறு விழாக்களையும், பண்டிகைகளையும் கொண்டாடுவதற்குக் காரணம் ஓர் அடிப்படையான மன இயல்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அன்றாட வேலைகளிலும், பிரச்சனை-களிலும் மூழ்கி ஒரே போக்கில் உழல்வதை மாந்தரின் உள்ளம் ஏற்பது இல்லை. அந்தப் போக்கில் இருந்து தற்காலிகமாக விலகி, வேலைக்கு மாற்றாக வேடிக்-கையை விரும்புவது மனித இயல்பு.
பார்த்த இடங்களையே பார்ப்பது, பழகிய மக்கள் கூடவே பழகு-வது என்ற நிலை ஒரு வகைச் சலிப்பை வாழ்வில் உண்டாக்கிவிடும் (னீணீளீமீ றீவீயீமீ தீஷீக்ஷீவீஸீரீ). புதிய இடங்களையும் புதிய மனிதர்களையும் பார்ப்பதும், புதிய பட்டறிவைப் பெறுவதும் ஒரு வகையில் நல்லதுதான். பக்தியில் மூழ்கியவர்கள் யாத்திரை செல்வது வேறு; அவர்கள் கண்களை அகலத் திறந்து நோக்கி, புதிதாகக் காணும் காட்சிகளை ஏன், எப்படி, எதற்கு, எவ்வாறு, யாரால், எதனால் _ போன்ற கேள்விகளை எழுப்பி அறிவை விசாலமாக்கிக் கொள்வது அரிது; ஏதோ வேண்டுதல் செய்தோம், இருமுடிகட்டி அய்யப்பன் கோயிலுக்குப் போனோம், அல்லது வேண்டுதலின்படி பழனிக்கோ, திருப்-பதிக்கோ சென்றோம், திரும்பினோம், காசை கரியாக்கினோம், அறிவையும் மானத்தையும் மட்டமாக்கிக் கொண்டோம் என்பதைத் தவிர புனித யாத்திரையால் நல்ல பயன் காணோம்.
சுற்றுலா
இக்காலத்தில் சுற்றுலா செல்கிறார்கள்; அணைக்கட்டுகள், கோளரங்கங்கள், மக்களுக்காக வாழ்ந்து பணியாற்றியவர்களின் நினைவிடங்கள், விலங்குகள், பாம்புகள், பறவைகள் முதலியவற்றின் காட்சிகள், அருங்காட்சியங்கள், வரலாற்று முக்கிய-மான அகழ்வாய்வு இடங்கள், தாஜ்மகால் _ தஞ்சைப் பெரியகோயில் போன்ற கட்டக் கலைச் சாதனைகள், தமிழகத்தில் காணாத பனிப்பொழிவை சிம்லா,நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai