தமிழர்களின் கலாச்சார அடையாள-மாய் நிமிர்ந்து நிற்கிறது பொங்கல் விழா. தமிழகம், மற்றும் தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள இடங்களிலும் பொங்கல் விழாவினைக் கொண்டாடி தங்கள் இன, சமூக, கலாச்சார, வாழ்வியல் அடையாளங்கள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சுமார் அய்ம்பது நாடுகளில் தமிழர்கள் தங்கள் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
சங்க காலமான கி.மு இரு-நூறுக்கும், கி.பி முன்னூறுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தமி-ழர்கள் பொங்கல் விழா கொண்டாடி-யதாக நம்பப்படுகிறது. அறுவடை விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல், தங்களுக்கு நல்ல விளைச்-சலைக் கொடுத்த இயற்கைக்கு நன்றி செலுத்தவும், தங்கள் கவலைகளை விலக்கி புதிய பயணத்தைத் துவங்க-வும், கொண்டாடப்படுகிறது. மதங்-களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையின் விழாவாகக் கொண்டாடப்படும் இந்த விழா தன்னகத்தே நான்கு விழாக்-களைக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும் அதே நாளில் இந்தியா முழுவதும் அறுவடை விழா பல பெயர்களில் கொண்டாடப்படு-கிறது. வட இந்தியாவில் லகோரி என்றும், அஸ்ஸாமில் போகாலி பிகு என்றும், உத்தரப்பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பிகாரில் மகர சங்கராந்தி என்றும், ஆந்திரா-வில் போகி என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கடந்தாண்-டிலிருந்து தை முதல் நாளே தமிழர்-களின் புத்தாண்டாக கொண்டாடப்-பட்டு வருகிறது.
தை நீராடல் என்னும் பொங்கல் விழாவின் முன்னோடியைக் குறித்த செய்திகள் கி.பி நான்காம் நூற்-றாண்டு, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்-பிடப்பட்டுள்ளன.
பொங்கல் விழா தமிழர் விழாவாக பெருமையுடன் கொண்டாடப்படும் அதே வேளையில் பொங்கல் விழாவின் அர்த்தத்-துடனான விழாக்கள் உலகெங்கும் கொண்-டாடப்படுகின்றன. ஆதிகாலத்திலேயே விவசாயிகள் அறுவடை விழா கொண்-டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்-கள். கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொண்-டாடப்-படும் இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் அறுவடைத் திருவிழா
ஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோ ரி-னோ - இச்சி என்னும் பெயரில் அறுவடை விழா கொண்-டாடுகிறார்கள். இரவு முழுதும் ஆட்டம் பாட்டமாய் இந்த விழா குதூகலமூட்டுகிறது.
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை நன்றி செலுத்தும் விழா கொண்-டாடப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா விளைச்-சலுக்கான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மக்கள் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்கிறார்கள். அமெரிக்கா வழி செல்லும் கன-டாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்-கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. சைனாவில் மக்கள், ஆகஸ்ட் நிலா விழா கொண்-டாடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய உணவான மூன்கேக்குகளை மக்கள் பகிர்ந்து, பரிசளித்து மகிழ்கிறார்கள்.
வியட்நாமில் தெட் திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் பதினைந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்த-மாய் ஒன்றியிருக்கும் விழாவாக இந்த விழா அமைந்து குழந்தைகளை மய்யப்படுத்துகிறது.
இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதி-னைந்தாவது நாள் சுக்கோத் விழா கொண்டாடப்-படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இன்று கிறித்துவர்களாலும் கொண்-டாடப்படுகிறது.
ஆப்பிரிக்காவில், யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா ஆப்பிரிக்-காவின் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. ஆஸ்தி-ரே-லியாவில், ஏப்ரல் மாதக் கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்-டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர் ஜனவரி காலத்தில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படு வது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது. ஜெர்மனியில் அறுவடை விழா அக்-டோபர் விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த விழா கொண்-டாடப்படுகிறது. வண்ண மயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
மலேஷியாவில் ஜூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. அரிசி விளைச்-சலுக்காக நன்றி செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்-களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள்.
இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் அறுவடை-வீடு என்னும் பெயரில் இந்த விழா கொண்டா-டப்-படு-கிறது. இவ்வாறு உலகெங்கும் கொண்-டாடப்படும் அறுவடை விழாக்கள் இயற்கையோடு மனிதனுக்கு உள்ள தொடர்பையும், சக மனித-னோடு அவர்கள் கொள்கின்ற உறவையும் வெளிப்-படுத்துபவையாக திகழ்கின்றன. எந்த ஒரு விழாவும் வெறும் அடையாளத்தை மட்டும் அணிந்து கொண்டு அதன் அர்த்தத்தை இழந்து விடும் பயனற்றதாகி விடுகிறது. விழாக்கள் அதன் அர்த்தங்களை அறிந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றன. மனிதனோடும், இயற்கையோடும், கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. - பண்ணை இளங்கோ

நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai