எட்டு மாநிலங்களுக்கு
புதிய ஆளுநர்கள் நியமனம்

டெல்லி, ஜன17- புதுச்-சேரி மாநில முன்னாள் முதல்வர் எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர், ஜார்க்-கண்ட் மாநில ஆளுந-ராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்-சர் சிவராஜ் பாட்டீல், பஞ்சாப் மாநில ஆளுந-ராகவும், சண்டிகர் நிர்-வாகியாகவும் நியமிக்கப்-பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவில் புதிய ஆளுநர்கள் நிய-மனம் குறித்த அறி-விப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது.
இதுவரை தேசிய பாதுகாப்பு ஆலோச-கராக இருந்து வந்த எம்.கே.நாராயணன், மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்-பட்டுள்ளார். இவர் முன்பு அய்பி தலைவராக இருந்தவர். நக்சலைட்டு-களால் பாதிக்கப்பட்-டுள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு இவர் ஆளுநராக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டீஸ்கர் மாநில ஆளுநராக இருந்து வந்த நரசிம்மன் ஆந்திர மாநிலத்திற்கு மாற்றப்பட்-டுள்ளார். இவர் தற்-போது ஆந்திர ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார் என்-பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாது-காப்புத்துறை செயலாளர் சேகர் தத், சட்டீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்-பட்டுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேச மாநில ஆளுநராக உள்ள பிரபா ராவ், ராஜஸ்தானுக்கு மாற்-றப்பட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஊர்மிளா பென் சிங் ஹிமாச்சல் பிரதேச ஆளு-நராக நியமிக்கப்-பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம்.ஓ.எச்.பரூக் மரைக்-காயர், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்-பட்டுள்ளார். அங்கு தற்போது ஆளுநராக இருக்கும் கேரளாவைச் சேர்ந்த சங்கரநாரா-யணன், மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்-பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்-டீல், பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிரு-வாகியாகவும் நியமிக்கப்-பட்டுள்ளார்.சமூக நல்லிணக்கத்துக்கு சமநீதிதான் அடிப்படை
மலேசிய தலைவர் விளக்கம்


கோலாலம்பூர், ஜன. 17_ பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் சமமான நீதி கிடைத்தால் மட்டுமே எல்லோரும் இணக்கமாக வாழ்வ-தற்கான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்று சமநீதி உலகிற்கான பன்னாட்டு இயக்கத்தின் தலைவர் சந்திர முஸாபர் கூறினார். மலேசிய தலை-நகர் கோலாலம்பூரில் இந்தியப் பத்திரிகை-யாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போனால்தான் சிறுபான்-மையின மக்கள் அதிருப்-தியை வெளிப்படுத்த நேரிடுவதாகக் கூறினார்.
அவர் மேலும் கூறிய-தாவது: எல்லா சமூக மக்-களையும் ஒருங்கிணைக்-கும் முயற்சியாகத்தான் ஒரே மலேசியா என்ற முழக்கம் உருவாக்கப்பட்-டுள்ளது.
மலேசியாவில் மலாய் மக்களுக்கென கல்வி, வேலையில் இடஒதுக்கீடு அளித்த காரணத்தால்-தான் இப்போது இந்த நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட மக்கள் கணிச-மாக எல்லா துறைகளி-லும் முன்னேற முடிந்-துள்ளது. இந்த மக்-களுக்கு எதுவும் கிடைக்-காமல் வெளிநாட்டின-ருக்கே பெரும் பங்கு வாய்ப்புகளும் கிடைத்-திருந்தால், பெரும்-பான்மை மக்கள் கோபம் கொண்டிருப்பார்கள்.
அதேபோல சிறு-பான்மை மக்களுக்கும் உரிய வாய்ப்புகள் கிடைப்-பது உறுதி செய்யப்பட வேண்டும். அந்த வகை-யில்தான் மலேசியாவில் தனியார் கல்வி நிறுவ-னங்கள் தொடங்க அனு-மதி அளிக்கப்பட்டது.
இப்போது எல்லா பிரிவினரும் சம வாய்ப்பு பெறும் சூழ்நிலை உரு-வாகி-யுள்ளது. மலாய் மக்களுக்கு உரிய வாய்ப்-புகள் வந்துவிட்டதால் இனி இட ஒதுக்கீடு தேவைப்படாது. மலேசி-யாவில் உள்ள இந்தியர்-களைப் பொறுத்தவரை, தங்களின் பிரச்சினை-களை பிரதிநிதித்துவப்-படுத்தும் அமைப்பு இப்-போது ஏதும் இல்லை என்ற குறை உள்ளது. இருந்தாலும் இந்த மக்களின் குறைகளையும் தீர்க்க வேண்டியது அர-சின் கடமையாக உள்ளது. இதை உணர்ந்த காரணத்-தால்தான், மலேசிய இந்-தியர்களின் பிரச்சினை-களைக் கவனிக்கும் துணைக் குழுவின் தலை-வர் பொறுப்பை பிரத-மரே ஏற்றுக் கொண்டி-ருக்கிறார்.
நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் சில சமயங்களில் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். 2008 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக 2007 நவம்பரில் இஸ்-லாங்கோ மாநிலத்தில் இந்துக் கோவில் ஒன்றை இடிக்க ஓர் அதிகாரி அனுமதி தந்துவிட்டார். வளர்ச்சிப் பணியை மேற்கொள்வதற்காக அந்தக் கோவில் நிலம் தேவைப்பட்ட நிலையில், இந்துக்களின் எதிர்ப்பு காரணமாக அது நிலு-வையில் இருந்தது. ஒப்-பந்ததாரர் இதை இடிக்க அனுமதி பெற்று, இடிக்கத் தொடங்கினார்.
அப்போதுதான் இந்துக்களிடம் மனமாற்-றம் ஏற்பட்டது. இந்து-ராப் அமைப்பும் தீவிர-மடைந்தது. ஆளும் கூட்டணிக்கு தேர்தலில் இது பெரும் பின்ன-டைவை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் தவறு-களும் சில சமயங்களில் நல்லிணக்கத்தை பாதிக்-கும் வகையில் அமைந்து-விடுகின்றன.
அல்லா என்ற வார்த்-தையை கிறித்துவப் பத்-திரிகை பயன்படுத்தியது தொடர்பாக இப்போது மலேசியாவில் பிரச்சினை எழுந்துள்ளது. அந்த வார்த்தையைப் பயன்-படுத்-துவது பற்றி பிரச்-சினை இருக்கக் கூடாது. அது தவறாகப் பயன்-படுத்தக் கூடாது என்-பதுதான் முக்கியமான-தாகும். இவ்வாறு அவர் கூறினார்.


‘ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர்’ தேர்வு முறை
கிராம ஊராட்சிகளில் வார்டுகள் சீரமைப்பு

தேனி, ஜன. 17_ ,கிராம ஊராட்சிகளிலுள்ள வார்டு குழப்பங்களுக்கு தீர்வுகாணும் வகையில், “ஒரு வார்டுக்கு ஒரு உறுப்-பினர்’ தேர்வு முறையை கொண்டுவர நட-வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழக கிராம ஊராட்சிகளில், வார்டு-கள் சீரமைப்பு பணி துவங்-கியுள்ளது. தமிழக ஊரக பகுதிகளில், மாவட்ட ஊராட்சி, ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி என மூன்றடுக்கு உள்-ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்புகளுக்-கான வார்டு கவுன்சிலர் அல்லது உறுப்பினர் தேர்வுகளின் போது, கிராம ஊராட்சிகளில் மட்டும் குழப்பம் நிலவி வருகிறது. மற்ற அமைப்பு-களில் “ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் அல்லது ஒரு கவுன்சிலர்’ தேர்வு செய்யப்படும் நிலையில், கிராம ஊராட்சிகளில் ஒரு வார்டில் இரண்டு அல்லது மூன்று உறுப்-பினர்-களை தேர்வு செய்-யும் முறை உள்ளது. ஒரே வார்டில் இரண்டு அல்-லது மூன்று உறுப்-பினர்-கள் இருக்கும்பட்சத்தில், அவர்கள் செயல்படுவ-தில் சிக்கல் ஏற்படுகிறது. தேர்தல் ஓட்டுப்பதிவின் போதும், வார்டுகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகின்றனர்.இந்த குழப்பங்களுக்கு முற்றுப்-புள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
வாக்காளர்களின் எண்-ணிக்கைக்கு ஏற்ப வார்டுகளை பிரிக்கவும், “ஒரு வார்டுக்கு ஒரு உறுப்-பினரை’ தேர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்-பட்டுள்ளது. அதன்படி, கிராம ஊராட்சியில் 500 முதல் 2,000 வரை வாக்-காளர்கள் இருப்பின் ஆறு வார்டுகளும், இரண்-டாயிரத்துக்கு மேல் 6,000 வாக்காளர்கள் இருப்பின் ஒன்பது வார்டுகளும், 6,000 மேல் 10 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பின் 12 வார்டுகளும், 10 ஆயிரத்துக்கு மேல் வாக்காளர்கள் இருப்பின் 15 வார்டுகளும் இருக்கும் வகையில், வார்டுகள் பிரிக்கப்பட உள்ளது. இதில் ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்வு செய்யும் வகையில், வாக்கா-ளர்-களை உள்ளடக்கிய பகுதி-கள் வார்டாக தரம் பிரிக்-கப்படும். வரும் உள்-ளாட்சி தேர்தலில் இந்த முறையில் தேர்தலை நடத்த அரசு திட்ட-மிட்டுள்ளது.
முதல்கட்டமாக மாவட்டந்தோறும் குறிப்-பிட்ட ஊராட்சி ஒன்றி-யங்களில், மூன்று முதல் அய்ந்து ஊராட்சிகளில், இந்த வகையிலான வார்டுகள் சீரமைப்பு பணி ஜன., 13 முதல் துவங்கியுள்ளது. ஆட்-சியாளர்களின் நேரடிப்-பார்வையில், பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் களப்-பணியாளர்கள் வார்டு-கள் மற்றும் வாக்கா-ளர்-கள் வரையறை செய்து வருகின்றனர். மாவட்டத்-திற்கு 15 முதல் 20 ஊராட்-சிகளில் நடைபெறும் இந்த வார்டுகள் சீரமைப்பு பட்டியல், ஆட்சியர்-களின் ஆய்வுக்கு பின், அரசுக்கு அனுப்பி வைக்-கப்பட்டு ஒப்புதல் பெறப்-படும். படிப்படியாக அனைத்து கிராம ஊராட்-சிகளிலும் வார்டுகள் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க கேட்-டுக்-கொள்ளப்பட்டுள்ளது.
 


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai