உகாண்டா நாட்டின் கிழக்குப் பகுதியான புடுடா மாவட்டத்தில் பெய்த கடுமையான மழையால் அங்குள்ள கிராமத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது; இதில் 300க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது-வரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தலாய் லாமா செல்வாக்கை குறைக்க சீனா புதிய தந்திரம்
பஞ்சன் லாமாவுக்கு முக்கியப் பதவி

பெய்ஜிங், மார்ச் 3_ தலாய் லாமாவின் செல்-வாக்கை குறைக்கும் திட்டத்துடன் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்-கும் பஞ்சன் லாமாவுக்கு, முக்கியப் பொறுப்பைக் கொடுத்துள்ளது சீன அரசு.

திபெத்திய மத வழக்-கப்படி தலாய் லாமா-வாக இருப்பவர்கள், தங்களுக்கு அடுத்த வாரி-சாக சிறு வயதிலேயே ஒருவரைத் தேர்ந்-தெ-டுத்து அவருக்கு பஞ்சன் லாமா என்று பட்டம் சூட்டி விடுவார்கள்.

தலாய் லாமாவின் மறைவுக்குப் பின்னர் இந்த பஞ்சன் லாமாதான் அடுத்த தலாய் லாமா-வாக பொறுப்பேற்பார். அந்த வகையில், தற்-போதைய தலாய் லாமா அடுத்த பஞ்சன் லாமா-வாக ஒரு சிறுவனைத் தேர்வு செய்தார். ஆனால் அதற்குப் போட்டியாக கடந்த 1995ஆம் ஆண்டு கியால்ஸ்டன் நோர்பு என்ற சிறுவனை பஞ்சன் லாமாவாக தேர்ந்-தெடுத்-தது சீன அரசு. தற்போது இவருக்கு 20 வயது ஆகப்போகிறது. ஆனால் தலாய் லாமா தேர்ந்-தெடுத்த பஞ்சன் லாமா சிறுவனை, தேர்வு செய்த பிறகு யாருமே பார்க்க-வில்லை.

இந்த நிலையில் சீன அரசு தேர்ந்தெடுத்த பஞ்சன் லாமாதான் ஒரே வாரிசாக இருக்கிறார். எனவே அடுத்த தலாய் லாமா தேர்வின்போது பெரும் சிக்கல் ஏற்படும் என கருதப்படுகிறது. இந்நிலையில் தலாய் லாமாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும், அவரது செல்வாக்கைக் குறைக்-கும் நோக்கிலும் பஞ்சன் லாமா நோர்புவுக்கு சீன அரசு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளது. சீன அரசுக்கு பல்வேறு துறை-களில் ஆலோசனை கூற, சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு என்ற குழு உள்ளது. இந்தக் குழுவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்-பினர்களாக இருப்பார்-கள்.

தற்போது இந்தக் குழுவின் உறுப்பினராக பஞ்சன் லாமாவை நிய-மித்துள்ளது சீன அரசு.-இந்த வாரம் இக்குழுவின் வருடாந்திர கூட்-டம் நடைபெறுகிறது. அதில் பஞ்சன் லாமாவும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திபெத்-தியர்களிடையே பிளவை ஏற்படுத்தி அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சீனா திட்ட-மிட்டுள்ளதாக கூறப்படு-கிறது.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai