கடவுள் ஒரு பொய் நம்பிக்கை - நிரூபித்தனர் திராவிடர் கழகத்தினர்
சத்தியமங்கலத்தில் மாநாடு போல் நடைபெற்ற பேரணி - மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி
ஒரு லட்சம் மக்களுக்கு மேல் பார்த்து பாராட்டு வியப்பு!
கழக தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்றார்



மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி


நிகழ்ச்சியை பார்வையிட்ட மக்கள் வெள்ளம்



கடவுள் இல்லை, கடவுள் இல்லை எனக் கூறி கழக தோழர்கள் தீமிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அரிவாள்மீது ஏறுதல் போன்ற மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்



சத்தியமங்கலம் மார்ச் 7_-சத்தியமங்கலத்தில் பகுத்தறிவுத் திருவிழா,நகரே குலுங்கிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி, சுமார் 1 லட்சம் பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்து வியந்தனர். அலகு குத்தி கார் இழுத்தல்,அரிவாள்மீது ஏறி நிற்றல், தீச்சட்டி ஏந்துதல், தாரை தப்பட்டை, தீ மிதித்தல், பகுத்தறிவுப்பாட்டுக் கச்சேரியுடன் பலகுரல் கலைநிகழ்ச்சி, வீதி நாடகம், மந்திரமல்ல, தந்திரமே! நிகழ்ச்சி,பகுத்தறிவு உரைவீச்சு என்று சத்தியமங்கலமே திணறியது. தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தீ மிதித்தனர்
06.03.2010 சனி மாலை 4.30 மணியளவில் சத்திய-மங்கலம் கோவை பிரிவு சந்திப்பில் தொடங்கிய பேரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம், கடை வீதி வழியாக வடக்குப்-பேட்டையில் அமைந்திருந்த பொதுக்-கூட்ட மேடைக்குச் சென்றது அங்கு அமைந்-திருந்த தீ மிதி குழியில் தோழர்கள் திரளாக ஒருவர் பின் ஒருவராக சென்று தீ மிதித்தனர். தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில், பல்சுவை செல்வர்" பாப்பாநாடு எஸ்.பி.-பாஸ்கர் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி -_ பெரியார் ஒருவர் தான் பெரியார்" என்ற பாடலில் தொடங்கி, பல குரலிசையில் பல பாடல்களைப் பாடி பொதுமக்களின் கைதட்டலைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து கழக பேச்சாளர் பொறியாளர் கனிமொழி மதம் என்ற தலைப்பில்,- கள் _ குடித்தவனை மாத்திரம் கெடுக்கிறது, ஆனால் மதம் நினைத்தவனை எல்லாம் கெடுக்கிறது சமூகத்தையே கெடுக்கிறது" என்ற அய்யாவின் கருத்துடன் கருத்து மழை பொழிந்தார். வீதி நாடகம்
தொடர்ந்து வீதிநாடக வித்தகர் -தெற்குநத்தம் சித்தார்த்தன்- _ பெரியார்நேசன் குழுவினரின் வீதி நாடகம் சாமியார்களின் மோசடி,தமிழரின் நாகரிகம் -ஆரியர்நாகரிகம் போன்ற சிறப்பான நாட-கங்கள் மக்களைச் சிந்திக்கவைத்தது. தொடர்ந்து கழக பேச்சாளர் இராம. அன்பழகன் திரைப்படத்திலிருக்கும் ஆபாசம்,சீரழிவு பற்றியும், க. ந. கருப்பண்ணன் கடவுள் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். இறுதியாக கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் "சாமியார்கள் என்றாலே அவர்கள் மிக மோசமானவர்கள் தான்" என்றும் சாமி-யார்களின் லீலைகள் பற்றியும் அவர்களைக்-கண்காணித்து தண்டிக்க வேண்டும் என்றும் சிறப்-புரையாற்றினார். விழா தொடங் கும் முன்பாக கோபி வெங்கிடு கருத்துரையாற் றினார். மாவட்ட தலைவர் இரா.சீனிவாசன் தொடக்க வுரையாற்றினார். மாநாடாக
நம்பியூர் சென்னியப்பன் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். மாநாடு போல் சிறப்பாக நடைபெற்ற, அதுவும் திராவிடர்கழக மாணவரணி நடத்திய இவ்விழா சிறக்க உழைத்தவர்களுக்கு தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புச்செய்தார். இவ்விழாவில் கழக துணைப்பொது செயலாளர் மரு. பிறைநுதல்செல்வி, மாநில இளைஞரணி செயலாளர். தஞ்சை இரா. செயக் குமார், கோபி மாவட்ட செயலாளர் ந.சிவலிங்கம், ஈரோடு மாவட்ட தலைவர். ப.பிரகலாதன், செயலாளர் த.சண் முகம், கோவை புறநகர் மாவட்ட தலைவர் சு.வேலுசாமி, செயலாளர் செந்தில்,கோவை மாநகர் சிங்கை ஆறுமுகம், பழ. அன்பரசு, திருப்பூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் வழக்குரைஞர் நா.சக்திவேல், மாநில இளை ஞர் .அணி துணை செயலாளர் பா.வைரம். கோபி யோகானந்தம், அருள்மணி, அ.பாட்டுசாமி, இராமலிங்கம். வெ.குணசேகரன், சிவக்குமார், நாகராஜ், கோவை மண்டல மாணவரணி சந்திரசேகரன், பூபதி, கருப்புசாமி, அரங்கசாமி,கோபி மாவட்ட தி.க துணை செயலாளர் பி.ராசமாணிக்கம், தலித் விடுதலைக்கட்சி மாவட்ட செயலாளர் சகுந்தலா, ஈரோடு மணிமாறன், ஜெயச் சந்திரன், தமிழ்செல்வன், மகேஸ்வரி, ராஜேஸ்வரி, மதிவாணன், நாமக்கல் குமார், கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், உதகை மாவட்டங்களைச்சேர்ந்த ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர் இறுதியாக அ.கு.பெரியார்செல்வம் மாவட்ட மாணவரணி தலைவர் நன்றி கூற பொதுக்கூட்டம் இனிதே நிறைவடைந்தது. சாமியார்களின் லீலைகள்
ஊர்வலத்தில் சாமியார்களின் ஆசிரமத்தில் நடக்கும் காமலீலைகள் பற்றிய கருத்துப்படங்கள் தாங்கிய பதாகை கள் காண்போரைக் கவர்ந்தன. பகுத்தறிவு திருவிழா பற்றிய கருத்துகள் பொதுமக்களிடம் கேட்கப்பட்டது.
பெ. பொன்னுசாமி மதுரை வீரன் நகர்:
இது சிறப்பான பேரணி, வரவேற்கத் தகுந்த கருத்துகள் 6 மாதத்திற்கு ஒருமுறையாவது நடத்தினால் பொது மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு பெறுவார்கள் என்றார்.
தா, கவுதமன். வடக்குபேட்டை: -
மிகவும் சிறப்பாக ஊர்வலம் இருந்த்து, நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சி களுமே மக்களை விழிப்புண்ர்வு கொள்ளச் செய்தது.
மு. சுப்பிரமணி தொட்டம்பாளையம் சத்தி-
ஊர்வலம் சிறப்பு, வீதி நாடகம் மிகவும் சிறப்பு மக்களுக்கு பய னுள்ள கருத்துக்கள் என்றார்.
சி. மணிகண்டன், ரங்கசமுத்திரம்:
நான் 5.00 மணியிலிருந்து இருக்கிறேன் ஊர்வலம், பாட்டு,வீதி நாடகம், பேச்சு, தீக்குண்டம் மீது நடந்த நிகழ்ச்சி அனைத்துமே சிறப்பாக இருந்தது என்றார்.
த. விஜயன், வெள்ளாளபாளையம்: -
நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளது, இது போன்று 6 மாதத்திற்கு ஒருமுறையாவது நடத்தவேண்டும். சாமி யார்களின் முகத்திரையை கிழித்துள்ளீர்கள் என்றார்.
சிவக்குமார், ரங்கசாமி, அரியப்பம்பாளையம்: -
வீதி நாடகம், பேச்சு, பொதுமக்களுக்கு பயன்பாடு டையதாக இருந்த்து, அடிக்கடி இதுபோன்று நடத்தி னால் மக்கள் திருந்துவார்கள்.
சின்னு த.பெ.கருப்பணன், பெருந்துறை: -
நல்ல நிகழ்ச்சி. எங்கள் பெருந்துறையில் நடத்தினால் நான் பகுதி செலவுகளை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு: ஈரோடு த. சண்முகம்