மகளிர் மசோதா வாக்கெடுப்பு
நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி 7 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

மகளிர் மசோதாவை கட்டாயம் நிறைவேற்றியே தீரவேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பல்வேறு மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடில்லி, மார்ச் 9- நாடாளுமன்றம், சட்டப்-பேரவையில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்-கீடு வழங்க வகை செய்யும் மசோதாமீது இன்று வாக்-கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலங்கள-வை-யில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது.-இதனால் அவை நடவ-டிக்-கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்-டன. மேலும் நேற்றைய நடவடிக்கையின் போது மசோதா அறிக்கையை கிழித்து எறிந்த 7 எம்.பி.க் களை இடை நீக்கம் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் இட ஒதுக்-கீடு மசோதா மாநிலங்-களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட போது, சமாஜ்வாடி கட்சி எம்.பி., க்கள் மசோதா-வின் நகல்களைக் கிழித்து அவைத் தலைவர் ஹமீது அன்சாரியின் மீது வீசி-னர். இதனால் அவை 5 முறை ஒத்திவைக்கப்பட்-டது. மேலும் இதனால், மசோதா மீதான வாக்-கெடுப்பு இன்று தள்ளி வைக்கப்பட்டது.
இன்று (9.3.2010) மாநிலங்களவை கூடியதும், மகளிர் இட-ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக லாலு பிரசாத், சரத் ஆகிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை நடத்த-விடாமல் அவையில் உறுப்பினர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்-டனர். இதையடுத்து இன்று மதியம் 12 மணி வரை மாநிலங்களவையை ஒத்திவைத்தார் ஹமீது அன்சாரி.
அவை கூடுவதற்கு முன் அய்க்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்-வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று புதுடில்லி-யில் சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் செய்தியா-ளர்களுக்கு அனைவரும் கூட்டாகப் பேட்டியளித்-தனர். அப்போது பேசிய சரத், மகளிர் இடஒதுக்-கீட்டு மசோதாவில் பிற்-படுத்தப்பட்டோர், தாழ்த்-தப்-பட்டோர், சிறுபான்-மை-யின-ருக்கு உள்-ஒதுக்கீடு வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தி-னேன் என்றார். லாலு பிரசாத் கூறுகையில், அனைத்துக் கட்சிக் கூட்-டத்தை கூட்டி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா பற்றி விவாதிக்க வேண்-டும் என்றார்
7எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
மகளிர் மசோதா நேற்று மாநிலங்களவை-யில் தாக்கல் செய்யப்-பட்டது. அப்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, அய்க்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து கடும் அமளியில் ஈடுபட்-டனர். சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி மசோ-தாவை தாக்கல் செய்த-வுடன் துணை குடியரசுத் தலைவரும், சபை தலை-வருமான அமீது அன்-சாரி-யின் இருக்கை அருகே சென்ற அக்கட்சி எம்.பி.க்கள் அங்கு இருந்த மசோதா அறிக்கையை எடுத்து கிழித்தெறிந்-தனர். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்-டது. இந்திய நாடாளு-மன்ற வரலாற்றில் இது-போன்ற அமளி, மசோதா கிழித்தல் போன்ற அத்-துமீறல் நடவடிக்கை-களில் எம்.பி.க்கள் ஈடுபட்-டது இதுவே முதல் முறை என்பது குறிப்-பிடத்தக்கது. இச்சம்ப-வத்திற்கு பிரதமர் உள்-பட பல்வேறு கட்சி தலை-வர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்-நிலையில் இன்று மாநி-லங்களவை கூடியவுடன் நேற்று அமளியில் ஈடு-பட்டு மசோதாவை கிழித்து ஏறிந்த ராஷ்ட்-ரிய ஜனதாதளம் சமாஜ்-வாதி, அய்க்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 7 எம்.பி.க்களை சஸ்-பெண்ட் செய்து அமீது அன்சாரி உத்தரவிட்-டார்.இந்த 7 எம்.பி.க்-களும் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் பங்-கேற்க முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உத்தரவு
மகளிர் இடஒதுக்-கீட்டு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்-காக மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் இன்று அவைக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என அந்-தக் கட்சி கொறடா உத்-தரவு பிறப்பித்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா-தளம், சமாஜவாதி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான வாக்கெடுப்பு நடக்கவில்லை. ஆகவே, மசோதா-வுக்கு ஆதரவாக வாக்-களிப்பதற்காக காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் அனை-வ-ரும் தவறாமல் அவை நிகழ்ச்சிகள் பங்கேற்க வேண்டும் என அந்தக் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்-டுள்ளது
பிரதமர் வருத்தம்
மாநிலங்களவையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு மகளிர் இட-ஒதுக்-கீடு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் ரகளை-யில் ஈடுபட்டனர். மக்களவை தலைவரும், துணைக் குடியரசு தலை-வ-ருமான ஹமீது அன்-சாரியின் மேஜையில் இருந்த மைக்'கை உடைத்--தனர்.
அருகில் இருந்த பத்தி-ரி-கையாளர்கள் மேஜை, மேல் சபை செயலாளர் ஜெனரல் மேஜை ஆகிய-வற்றில் இருந்த கோப்பு-களை தூக்கி வீசினர். மேலும், மசோதா நகல்-களையும் அன்சாரியிடம் இருந்து பிடுங்க முயற்சித்-தனர். தங்கள் கைகளில் இருந்தவற்றை கிழித்து எறிந்தனர்.
இந்த சம்பவத்துக்காக பிரதமர் மன்மோகன்சிங் வருத்தம் தெரிவித்துள்-ளார். நேற்று அன்-சாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் வருத்தம் தெரி-வித்-துள்ளார்.- மகளிர் மசோதாவை கட்டாயம் நிறைவேற்றியே தீரவேண்-டும் என்று நாடாளு-மன்ற வளாகத்திற்கு வெளியே பல்வேறு மகளிர் அமைப்-பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு தகவல்: கடந்த 10 மாதங்களாக வெளிநாட்டில் வசித்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் இப்போது நாடு திரும்ப விரும்புகிறாராம்.