காவிரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தகவல்
புதுடில்லி, மார்ச் 9_ காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் கழிவு-கள் கலப்பதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்-சர் (தனிப் பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்-ளார்.
மாநிலங்களவையில் உறுப்பினர் கனிமொழி கேட்ட கேள்வி ஒன்-றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:
காவிரி ஆற்றில் தொழிற்சாலைக் கழிவு-கள் கலப்பதற்கு முன்பாக அவற்றை சுத்திகரிப்பதற்-கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்-கொண்டு வருகிறது. கழி-வுகளை சுத்திகரிப்பதற்-கான ஆலை மற்றும் மறு சுழற்சி முறையிலான கழிவுகள் சுத்திகரிப்பு போன்ற வசதிகளை தமிழ்நாட்டிலுள்ள தொழிற்-சாலைகள் கொண்டுள்ளன. சுத்தி-கரிக்-கப்பட்ட கழிவுகள் தோட்ட வேலைக்கும், நீர்ப் பாசனத்திற்கும், குளிர்ச்சிப்படுத்துவதற்கும் மீண்டும் பயன்படுத்தப்-படுகின்றன. அல்லது அவை தமிழ்நாடு மாசுக்-கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த தர நிர்ணய அளவுகளுடன் உள்ளூர் நீர் நிலைகளில் விடப் படு-கின்றன.
கர்நாடகாவில் காவிரி ஆறு தோன்றுகிறது. மத்திய மாசு கட்டுப்-பாட்டு வாரிய தகவலின்-படி கர்நாடகாவில் உள்ள எந்த ஒரு தொழிற்-சாலையும் தனது கழிவு-களை காவிரி ஆற்றில் கலக்க விடுவதில்லை.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
பாடம் கற்றுக் கொள்ளாத சாமியார்
தனது ஆசிரமத்தில் இலவசங்களை வாரி வழங்குகிறேன் என்று உத்-தரப் பிரதேச சாமி-யார் கிரிபாலு மஹராஜ் கூறியதால் ஏராளமான மக்கள் கூடி அந்த நெரி-சலில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். இது நடந்து நான்கு நாள்கள் கூட ஆக-வில்லை. அனைவருக்கும் பணம் தரப்போகிறேன் என்று அந்த சாமியார் மறுபடியும் அறிவித்தார். உடனடியாக 12 ஆயிரத்-துக்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் அவரது ஆசிர-மத்-திற்கு வந்தனர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் காவல்-துறையினர் அப்போது இருந்தனர். சாமியார்-களுக்கு தலா 551 ரூபாயும், ஏழை பக்தர்களுக்கு தலா 251 ரூபாயும் அவர் விநி-யோகிக்க ஆரம்பித்தார்.