முல்லை பெரியாறு: புதிய குழு தேவையற்றது தமிழ்நாடு அரசு மனு
புதுடில்லி, மார்ச் 9_ முல்லைப் பெரியாறு வழக்கில் புதிய குழு தேவையற்றது என்றும் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்-நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏ.எஸ்.-ஆனந்த் தலைமையில் புதிய குழுவை நியமித்து-ள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்-ளது. அந்த மனுவில் மத் திய நீர்வள ஆணையத்தின் அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்-படையில் உச்சநீதி-மன்றமே இதனை விசா-ரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரி-விக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக உச்சநீதி-மன்றம் தனிக் குழுவிடம் அதிகாரங்களையும் பொறுப்-புகளையும் வழங்கி இருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று கூறப் பட்டுள்ளது.
ஆகவே முல்லை பெரி-யாறு அணையை ஆய்வு செய்ய அமைக்கப்-பட்ட குழு தேவையற்றது என்றும் அதனைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்-தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரை-ஞர் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார்.