பிற இதழிலிருந்து...
கருநாடக முதலமைச்சர் முன்வருவாரா?
இந்துக் கலாச்சாரம், பாரதீயப் பண்பாடு என்ற பெயரில் கருநாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தீவிரமான இந்து மத வெறியர்களின் பேயாட்டம் தடங்கலின்றி வெளிப்படை-யாகவே நடந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு மே திங்கள் கருநாடக முதல்-வராகப் பதவியேற்ற எடியூரப்பா அடுத்த நாளே நான் சங் பரிவார் கொள்கைகளை எமது ஆட்சி அரசிய-லில் பயன்படுத்திக் கொள்வேன். சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தங்கள்-தான் எனக்கு சிறந்த அரசியல் முடிவுகளை எடுக்க நல்வழி காட்டும் என்றார். அந்த வாக்குறுதியின்படியே அவர் முதலமைச்சர் பொறுப்பேற்ற 5 திங்களுக்குள் தான் ஒரு இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ். சகா என்பதை வெளிப்படையாகவே உணர்த்திவிட்டார்.
2001 ஆம் ஆண்டில் முதன் முத-லில் குஜராத் பா.ஜ.க. முதலமைச்சராக முடிசூட்டிக் கொண்ட இந்துவிய வெறியர், நரேந்தர மோடி எனும் ஆர்.எஸ்.எஸ். பிற்போக்காளர், கிறித்துவத் தேவாலயங்களின்மீது குறி வைத்து அடித்து நொறுக்கப்பட்டதைக் கண்டுகொள்ளவில்லை. கண்டிக்கவும் இல்லை. அதைப் போலவே கருநாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் தன் ஆட்சிக்குட்பட்ட வடக்குக் கருநாடக மாவட்டங்களில் சமய சிறுபான்மை கிறித்துவர்கள்மீது தொடுக்கப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை _ கண்டிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைப் பொருட்படுத்தவில்லை.
தாக்குதல்களில் ஈடுபட்ட இந்துவியப் பிற்போக்கு சங் பரிவார் அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பைத் தடை செய்ய-வேண்டும் என்ற வேண்டுகோளையும் நிராகரித்தார். தட்சிணக் கன்னடா, உடுப்பி, சிக்கமகளூர் மற்றும் பல கடலோர மாவட்டங்களில் கிறித்துவத் தேவாலயங்களின்மீது நடத்தப்பட்ட பஜ்ரங்தள் அமைப்பைத் தடை செய்ய எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்காது என்றார். மற்றும் அநீதி, வன்-முறை நிகழ்வுகளை நியாயப்படுத்தினார். கிறித்துவ அமைப்புகள் புதிய வாழ்வு என்ற பெயரில் கட்டாய மத மாற்றம் செய்கின்றனர்.
அதற்காக வெளிநாடுகளிலிருந்து குறுக்கு வழிகளில் சட்டத்திற்கு எதி-ராகப் பணம் திரட்டுகின்றனர். அரசு அதற்கு ஆதாரமாகத் தகவல்களைத் திரட்டுகின்றது. அவர்களின் மத மாற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது என்றார். தேவாலயங்கள் தாக்கப்படு-வதைத் தடுக்கக் காவல்துறையின் செயல்பாடுகள் நிறைவு அளிப்பதாகப் பாராட்டுத் தெரிவித்தார். 100_க்கும் மேற்பட்ட கலகக்காரர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளதாக-வும், 18.9.2000 அன்று குல்பர்காவில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்-காணலில் (பேட்டியில்) அறிவித்தார். மற்றும் இந்துவிய அமைப்புகள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடாது என எச்சரித்தார். கட்டாய மதமாற்றம் நடை-பெற்றால் அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேற்கண்ட நேர்காணலில் இருந்-தும், நாம் அறிந்துகொள்வது இதுதான். இந்துவிய வெறி அமைப்புகள் திட்டமிட்டு, காவல்துறையினரின் உத-வியுடன் ஆட்சி அதிகாரிகளின் துணைகொண்டு சமயச் சிறுபான்மை-யினர்களின்மீது கட்டாய மத மாற்றம் என்ற பொய்யான குற்றச்சாற்றைச் சுமத்துகின்றனர். அவர்களின் உயிர் மூச்சான மற்ற மதத்தினரை விரட்டி-விட்டு, இந்து ராட்டிரத்தை அமைக்கும் கொடூரக் கொள்கையின் ஆரம்பமே பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் நடைபெறும் சமயச் சிறுபான்மையினர் மீதான வன்முறை வெறியாட்டங்கள் என்பது வெளிப்-படையாகத் தெரிகிறது.
வடக்குக் கருநாடகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் கிறித்துவத் தேவாலயங்கள், பள்ளிக் கூடங்கள், தொழுகை வளாகங்கள், சமயச் சின்-னங்கள், இடித்துத் தரைமட்டமாக்கப்-பட்டன. கிறித்துவ சமயத்திருநூல் (பைபிள்) கிழித்தெறியப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. தூய (புனித) சமயச் சின்னமான (சிலுவை) குறுக்கை _ குறுக்கைத் தூண்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. கிறித்துவர்கள் நம்புகிற வணக்கத்திற்குரிய சிலைகள் சேதப்-படுத்தப்பட்டும், உடைத்தும் தூளாக்கி வீதியில் வீசப்பட்டன.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி தொடங்கிய மே திங்கள் முதல் 2008 டிசம்பர் திங்கள் 31 ஆம் நாள்வரை மங்களூரை முதன்மையாகக் கொண்டு தட்சிண கன்னடா, பெல்லாரி, தாவன-கரை, உடுப்பி, சிக்கமகளூர், தார்வார்ட் பெங்களூரு, கோலார், சிக்கபெல்லாபூர் ஆகிய மாவட்டங்களில் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு மக்கள் நலம் பேணும் இயக்கங்கள், மாந்த உரிமைக் கழகங்கள், கிறித்துவ அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்பிலும் அரசுக்கு நெருக்கடி உண்டாக்கப்பட்டதின் காரணமாக, தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து உசாவல் செய்ய (நீதிபதி) நயனகர் சோமசேகர் தலைமை-யிலான ஆணையத்தை அரசு நிய-மனம் செய்தது. தனது 500 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை 2.2.2010 அன்று உசாவல் குழுவின் தலைவர் நயகனர் சோமசேகர் அரசு செயலாளர்களிடம் வழங்கல் செய்தார். கூடுதல் உள்துறைச் செயலாளர் அபி-ஜித் தாசு குப்தா, சட்டத்துறைச் செய-லாளர் சித்த லிங்கேசுவரா ஆகியோர் அறிக்கையைப் பெற்றுக்கொண்டு, உரியவர்களிடம் ஒப்படைப்பதாக அறிவித்தனர்.
அரசிற்குக் கொடுக்கப்பட்ட இடைக்கால உசாவல் அறிக்கையில் கல-வரத்தில் ஈடுபட்டு மத நல்லிணக்கத்-தைக் குலைக்கும் வகையில் கிறித்துவத் தேவாலயங்களின்மீது தாக்குதல்களை நடத்தியவர்கள் பஜ்ரங்தள், விசுவ இந்து பரிசத், சிரி இராமசேனா அமைப்புகளே என்பதை உறுதிப்படுத்தினர்.
மேற்கண்ட சங் பரிவார் இந்துவிய அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கலவரத்தை ஊதிப் பெரிதாக்கியவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட நிருவாகம், பஞ்சாயத்து அமைப்புகளின் தலைமை நேரடி-யாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கை நேரடியாகக் குற்றம் சாற்றியுள்ளது. காவல்துறையினர் கல-வரங்களை அடக்குவதாகப் பாவனை செய்து தாக்குதல்களுக்கு உள்ளான கிறித்துவர்கள்மீதே நேர்மையற்ற முறையில் மீண்டும் தாக்குதல்கள் நடத்தி, முதியவர்கள், பெண்கள், குழந்-தைகள் எனப் பாராமல் காயப்படுத்தி-யுள்ளனர்.
18.9.2008 ஆம் நாள் கருநாடக முத-லமைச்சர் எடியூரப்பா கலந்து கொண்டு தொழிலாளர்களின் நேர்காணலில் காவல்துறையினர் மதக் கலவரத்தை நல்ல முறையில் கையாண்டுள்ளனர் என்ற நற்சான்றை உசாவல் ஆணை-யர் பொய் என்று மெய்ப்பித்துள்ளார். மேற்கண்ட மதக் கலவரம், பாரதீய ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சியின-ரால் தூண்டிவிடப்பட்டது என்ற குற்றச்சாற்று தவறானது என்பதை நிலைநாட்டியுள்ளார். மதக் கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.
கிறித்துவ நிறுவனங்கள் கட்டாய மத மாற்றம் செய்ததால்தான் இந்துக்களின் கோபம் கிறித்துவர்களின்மீது திரும்-பியது என்ற எடியூரப்பா கும்பலின் வாதத்தை, பொய்யாக்கி மதமாற்றம் எவரின் வற்புறுத்தலின் மூலமும் நிகழவில்லை, தன்னிச்சையாக இயல்பாக நடந்தது என்று உசாவல் ஆணையம் வெளியிட்டதின்மூலம் பாரதீய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், இராம்சேனா போன்ற இந்துவிய பாசிச அமைப்புகள் அனைத்தும் அமைதியை விரும்பும் குமுகாயத்திற்கு எதிரான அமைப்புகள் என்பது வெளிப்பட்டது. இது அனைவரும் அறிந்ததே. எனவே, மாந்த நேயத்திற்கும், மனித உரிமை-களுக்கும், மத நல்லிணக்கத்திற்கும், ஊறுவிளைவிக்கும் இவர்களை ஒதுக்கி வைக்கவேண்டும். ஆட்சி அதிகாரத்தி-லிருந்து அகற்றவேண்டும்.
மாநிலம் முழுவதுமான மதக் கல-வரங்கள் அனைத்தும் காவல் நிலையங்-களில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், பெங்களூரு நகரம். பெங்-களூரு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. மிக அதிகமான தட்சிண கன்னடாவில் 554 வழக்குகளும், தாவன்கரேயில் 238, உடுப்பியில் 100, சிக்கமகளூரில் 27, சிக்பல்லாபூரிலில் 7, பெல்லாரியில் 3, தார்வாரில் 2 என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது-வரையில் வழக்குமன்ற உசாவலுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இடைக்கால அறிக்கையில் நயனகர் சோமசேகர், அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றிப் பரிந்துரைகள் செய்துள்ளார். அவை மாநிலத்திலுள்ள அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களையும் அவர்களின் நிறுவனங்-களையும் எந்த அரசியல் வேறுபாடும் முன்னிறுத்தாமல் பாதுகாப்பு வழங்க-வேண்டும். குறிப்பாக கலவரம் வெடித்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களைக் கண்காணிக்கவேண்டும்.
மத நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமைப்புகளின் சார்பாகவோ _ அரசியல் கட்சிகளின் மூல-மாகவோ வேறு எந்தப் பெயர் மாற்றத்துடனோ சமூக விரோத நட-வடிக்கையில் ஈடுபடும் இயக்கங்களைத் தடை செய்யவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை ஒற்-றர்களின் ஆற்றலை வலுப்படுத்தவேண்-டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நியாயமான பரிந்துரை-களை அரசு ஏற்று, பாரதீய ஜனதா அரசு செயல்படுத்துமா? என்ற அய்யம் எழுவது இயற்கையே. ஏனெனில், உசாவல் ஆணைய அறிக்கை வெளிவந்தவுடனேயே, கிறித்துவ தேவாலயங்களின்மீது தாக்குதல்கள் தொடர்பான நயனகர் சோமசேகர் உசாவல் அறிக்கையின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். ஆனால், உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவோ இந்த அறிக்கை இடைக்கால அறிக்கை மட்டுமே முழுமையான அறிக்கை வழங்கல் செய்ய மார்ச் திங்கள் 31 ஆம் நாள் வரை காலநேரம் இருக்-கிறது. இந்த அறிக்கை நிறைவானதல்ல. இறுதி அறிக்கை வந்தபின் முடிவு எடுக்கப்படும் என்கிறார். இந்த முரண்-பாடு குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து தப்புவிக்க வழிகுக்கலாம் என்று கருதுவது தவறாகாது.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி தொடங்கிய காலம் முதல் இன்றளவும் சமயச் சிறுபான்மையினர் மேல் நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்கதையாகவே உள்ளன. அண்மையில் மைசூர் இன்கல்லில் உள்ள தூய குடும்ப தேவாலயத்தில் நுழைந்து கிறித்துவர்களால் தாய்மேரி என்று வணங்கப்படும் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளது. உத்தர கன்னடா, முருடேவுவரா அருகில் உள்ள தூய அந்தோணியார் தேவாலயத்தில் ஏசுவின் சிலை சேதப்பட்டுள்ளது. மைசூர் பத்கல்லில் உள்ள தேவாலயம் சில நாள்களுக்கு முன் சிதைக்கப்பட்டது.
கருநாடகத்தில் உள்ள 13 மாவட்-டங்களில் கிறித்துவத் தேவாலயங்கள் சிதைக்கப்பட்டு உசாவல் ஆணையம் அமைக்கப்பட்டு முதல் அறிக்கை வழங்கல் செய்யப்பட்டு சங்பரிவார் அமைப்புகள்மீது குற்றங்கள் மெய்ப்-பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தேவாலயங்கள் தாக்கப்படுகின்றன. இந்தத் தாக்குதல்கள் நயனகர் சோமசேகர் அறிக்கைக்கு எதிரான நடவடிக்கைகள் என உணரப்பட்டுப் பல தரப்பிலிருந்தும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.
எனவே, மாநில முதலமைச்சர் எடி-யூரப்பா கோயில், மசூதி, தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்துவோர்களின் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின்-கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றக் கூண்டிலே நிறுத்திக் கடுமையான தண்டனை வழங்க-வேண்டும் என்கிறார். இன்னும் சற்று கோபமுற்று அத்தகைய வன்முறையில் ஈடுபடுவோர்களின் கைகளைத் துண்டிக்க வேண்டும் என்கிறார்.
வழிபாட்டுத் தலங்களைச் சேதப்-படுத்துவோரின் கைகளை வெட்ட வேண்டும் என்றால், இந்த நாட்டில் மதக் கலவரங்களுக்கு முதன்மைக் காரணமான பாபர் மசூதி இடித்த-வர்களின் கைகளை முதலில் துண்டிக்க வேண்டும்.
அதற்குப் பின்னால் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடத்தி மாநில முதலமைச்சர்களின் கைகளை வெட்டவேண்டும். குறிப்பாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் கைகளை வெட்டவேண்டும். இந்தத் தீர்ப்பைக் கருநாடக மாநில முதல-மைச்சர் நடைமுறைப்படுத்த முன்-வருவாரா?
நன்றி: தமிழர் முழக்கம்
(கருநாடக தமிழர் இயக்கத் திங்கள் இதழ்,
பிப்ரவரி_மார்ச் 2010)