மேலவையில் சலவைத் தொழிலாளி, ஆதி ஆந்திரா பிரிவினருக்கெல்லாம்
இடம் தந்தோம் அந்த வாய்ப்பு மீண்டும் தேவைப்படுகிறது
மேலவையின் அவசியம் குறித்து முதலமைச்சர் உரை

சென்னை, ஏப். 13_ சலவைத் தொழிலாளர், ஆதி ஆந்திரா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்க மேலவை தேவைப்படுகிறது என்பதை முதலமைச்சர் கலைஞர் சட்டப்பேரவையில் நேற்றுத் தெரிவித்தார்.

மேலவைத் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சட்டப் பேரவைக்கான தேர்தல் அறிக்கை 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டபோது, அந்த அறிக்கையில், அரசியல் அறிஞர்கள், சான்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், சுய உதவிக் குழுவில் இருப்போர், வணிகர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் -இத்தகைய அமைப்புகளைச் சார்ந்தவர்-களின் பிரதிநிதிகள் இடம் பெற்று அரிய ஆலோ-சனைகளைக் கூறத்தக்கவகையில், ஆந்திர மாநிலத்தில் அண்மையில் கொண்டு வந்ததைப்போல, தமிழ்-நாட்டில் மீண்டும் சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டுவர உரிய அரசியல் சட்டத் திருத்தம் செய்ய வலியுறுத்துவோம் என்று 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குறிப்பிடப்பட்டு, தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும், கிட்டத்தட்ட ஒன்றிரண்டைத் தவிர, அனைத்தையும் நிறைவேற்றிய பெருமையுடையது திராவிட முன்னேற்றக் கழக அரசு. (மேசையைத் தட்டும் ஒலி) இவ்வளவு நாள் பொறுத்திருந்து, இப்போது இதை, கடைசி காலத்திலே கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?'' என்று செங்கோட்டையன் கேட்டார். இது யாருக்குக் கடைசி காலம் என்பதை இந்த நாட்டு மக்கள், வாக்காளப் பெருமக்கள் தீர்மானிக்க வேண்-டிய ஒன்று. எனவே, நானோ, செங்கோட்டையன் அவர்களோ வருத்தப்பட வேண்டியதில்லை; ஆத்-திரப்படத் தேவையில்லை; அவசரப்படத் தேவை-யில்லை. 2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே கொண்டு வரப்பட்ட, சொல்லப்பட்ட இந்த மேலவை மீண்டும் கொண்டு வரப்படும்; அதைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அந்த வாக்குறுதியைத்தான் இன்றைக்கு நிறைவேற்ற முற்பட்டிருக்கின்றோம். தேர்தல் அறிக்கையிலே மாத்திரமல்ல. 2006 ஆம் ஆண்டு ஆளுநர் உரையிலே-கூட, பத்தி 57இ-ல், சட்டமன்ற மேலவையைக் கொண்டு வரத் தேவையான அரசியல் சட்டத் திருத்தம் செய்ய இந்த அரசு அனைத்து முயற்சி-களையும் மேற்கொள்ளும். என்று குறிப்பிடப்பட்டிருக்-கிறது. மேலவை என்பது தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டுகள் இயங்கி வந்த ஒரு அமைப்பு என்பதை மனதில் புரிந்து கொள்ள வேண்டும். 23 ஆண்டு-களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் மேலவை தேவை என்று சொல்கின்ற அளவிற்கு மூன்றாவது முறையாக இந்த அரசால் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் -இங்கே நண்பர்கள் எல்லாம் குறிப்-பிட்டதைப்போல, தற்போது கர்நாடகம், மராட்டியம், பிகார், உத்தரப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றப் பேரவை, மேலவை என்ற இரண்டு அமைப்புகளும் இருக்-கின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. நம்-முடைய பீட்டர் அல்போன்ஸ் குறிப்பிட்டதைப்-போல், மிகப் பெரிய மக்கள் தொகையையும், பரப்பளவையும் கொண்ட இந்த மாநிலங்களில், மேலவை தேவைப்படுகிற காரணத்தினால், அதனை அவர் இங்கே வலியுறுத்திச் சொன்னார்; விளக்கிச் சொன்னார். நான் இங்கே நடைபெற்ற விவாதத்திலே குறிப்பிடப்பட்ட மாற்றங்களைப் பற்றியோ அல்லது வாசகங்களைப் பற்றியோ, விவாதித்த கருத்துகளைப் பற்றியோ விளக்கிட விரும்பவில்லை. ஏனென்றால், இங்கே விவாதத்தில் ஒரு புரியாத புதிராக குறுக்-கிடுவது என்பது ஒன்று. விவாதம் நடைபெறுகிற-போது கூச்சலிடுவது என்பது ஒன்று. குறுக்கிட்டு விளக்கம் தர விரும்புகிறார்களா? அல்லது கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்த விரும்புகிறார்களா என்ற அந்த நிலையை எண்ணிப் பார்க்கும்போது, என்னைப் பொறுத்தவரையில், நான் விரும்புவது, கூச்சலில்லா-மல், குழப்பமில்லாமல், ஜனநாயகத்திற்கு எந்தக் குந்தகமும் இல்லாமல், விவாதங்களின் மூலமாக விளக்கங்களைப் பெற்று, அதன் வழியிலே நம்முடைய தீர்மானங்களை நிறைவேற்றிடவும், முடிவுகளை மேற்கொள்ளவும் இந்த மாமன்றத்தை நாம் பயன்படுத்த வேண்டும். இவ்வளவு நாள் பொறுத்து திடீரென்று இதைக் கொண்டு வருவதாக ஒரு வாதம் வைக்கப்பட்டது. இது திடீரென்று கொண்டுவரப்-படவில்லை. பல நாள்கள், பல மாதங்கள், இன்னும் சொல்லப்போனால், மூன்று, நான்கு ஆண்டுகள் இதற்காக முயற்சி மேற்கொண்டு இந்த அரசு இன்றைக்கு இதைக் கொண்டு வந்ததற்குக் காரணம், இந்தப் புதிய சட்டப் பேரவை மண்டபத்தைப் பார்த்த பிறகு, உருவாக்கிய பிறகு - இது அமைந்த பிறகு, இதிலே மேலவையையும் வைப்பதற்கான இடம் இருக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் (மேசை-யைத் தட்டும் ஒலி) மேலவைக்கு எங்கே இடம் என்று தேட வேண்டிய அவசியமில்லை. இடம் இங்கேயே இருக்கிறது என்று யோசித்து, அந்த இடத்தை இங்கே குறிப்பிட்டு, அதைத் தயார் செய்து கொண்டிருக்-கின்றோம். இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்குச் சென்று, அங்கிருந்து ஆதரவான நிலை ஏற்பட்ட பிறகு, அதிலே வந்து அமரக்கூடியவர்கள் யார், யார் என்பதை, நாங்களல்ல; ஜனநாயக ரீதியிலே ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவர்களை, ஆசிரியர்களானால் அந்தப் பிரிவிலே உள்ளவர்களை, தொழிலாளர்-களானால் அந்தப் பிரிவிலே உள்ளவர்களை, கல்வியா-ளர்களானால் அந்தப் பிரிவிலே உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, மேலவைக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பை அந்த வாக்காளப் பெருமக்கள் எதிர்-காலத்திலே செய்ய வேண்டியவர்களாக இருக்-கிறார்கள்; செய்வார்கள் என்பதை நான் இங்கே தெரி-வித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த அவையில் மேலவையைக் கலைக்க வேண்டு-மென்ற ஒரு தீர்மானம் 1986ஆம் ஆண்டு வாக்கில் வந்தபோது - தோழர் ப. மாணிக்கம் கூறிய கருத்தை இங்கே எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அந்தக் கருத்தை நம்முடைய கோ.க. மணி முழுமையாக இங்கே குறிப்பிடவில்லை என்று கருதுகிறேன். பொது-வுடைமைக் கட்சியைச் சார்ந்த ஒரு தோழர் குறிப்-பிட்டதை இங்கே எடுத்துக் காட்டி, இதற்கு என்ன விளக்கமென்று இங்கே கேட்கப்பட்டது. அதற்கான விளக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளர் ப. மாணிக்கம் அன்றைக்கே இந்த அவையிலே எடுத்துச் சொல்லியிருக்கின்றார். அது என்ன? படித்த பட்டதாரிகள், அறிவாளிகள் ஆகியோருடைய அறிவு, மேலவைக்குத் தேவை. அவர்-களின் அறிவு தமிழ்நாட்டினுடைய நிர்வாகத்திற்குத் தேவை. அதனால்தான் அறிவுத் துறையில் உள்ளவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இங்கே பிரதிநி-தித்துவம் தரப்பட்டிருக்கின்றது. அதைப்போலவே உள்ளாட்சித் துறையில் உள்ளவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலவை கலைக்கப்பட்டால், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வரக்கூடியவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய் விடும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தமிழ் மாநிலச் செயலாளர் - மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ப. மாணிக்கம் அவர்கள் சொல்லியிருக்கிறார். மேலவையைக் கலைக்-கின்ற தீர்மானத்தை இங்கே கொண்டு வந்தபோது, இந்தக் கருத்தை மிக அழுத்தந்திருத்தமாக அவர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அதுமாத்திரமல்ல; மேலவை கலைப்புத் தீர்மானம் குறித்து 14.5.1986 அன்று இந்த அவையில் விவாதிக்கப்-பட்டபோது, தோழர் சுப்பராயன் அவர்கள் பின்-வருமாறு குறிப்பிடுகிறார். இங்கே முன் மொழியப்-பட்டிருக்கின்ற இந்தத் தீர்மானத்தைப் பொறுத்த-வரையில், ஆளுகிற கட்சியால் இதுவரையில் மக்களிடத்-திலே இது சொல்லப்படவில்லை. எத்தகைய சூழ்நிலையிலும் வலியுறுத்தப்படவில்லை. மேல-வையை ஒழிக்க வேண்டும் என்பதைக் கொள்கை-யாகக் கொண்ட கட்சியாக ஆளுங்கட்சி இல்லை. திடீரென்று ஏதோ போதி மரத்திற்குக் கீழே உட்-கார்ந்த பிறகு ஞானம் வந்தது போல், உள்ளாட்சித் தேர்தல்களின் தீர்ப்பு வெளியிடப்பட்டவுடன், மக்களின் தீர்ப்பு வெளிப்பட்டவுடன், ஒரு புதிய ஞானம் தோன்றித்தான் இப்படிப்பட்ட நடைமுறை இந்த மாநில அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதாவது, மக்கள் தங்கள் எண்ணத்துக்கு தக்கபடி தீர்ப்பளிக்க வேண்டும்; அப்படி தீர்ப்பு அளிக்க-வில்லை என்றால், தங்கள் அதிகாரத்தையும், பல்வேறு வழிமுறைகளையும் பயன்படுத்தி அந்தத் தீர்ப்புக்குச் சேதாரம் ஏற்படுத்தி விடுவது என்ற மன இயல்பு வாடிக்கையாக உள்ளது என்று நண்பர் திரு. சுப்பராயன் அவர்கள் இந்த அவையில் அன்றைக்குப் பேசியிருக்கின்றார். நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய சகோதரி அம்மையார் பாலபாரதி அவர்கள் - நான் வெளிநடப்புக்கூட செய்ய-மாட்டேன்; உள்ளேயிருந்து எதிர்த்து வாக்களிப்பேன் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார். ஒருவேளை வெளிநடப்புச் செய்தால், வாக்கு வித்தியாசத்திலே இந்தத் தீர்மானம் ஜெயித்துவிடும் என்ற அந்த எண்ணத்தில், நான் இங்கேயிருந்து வாக்களிப்பேன் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த தோழர் - என்னுடைய தோளோடு தோள் நின்று தொழிலாளர் வர்க்கத்திற்காக, கோவை மாவட்டத்திலே போராடிய தோழர் திரு. ரமணி என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தத் தோழர் கே. ரமணி அவர்கள் 20.2.1989 அன்று இந்தத் தீர்மானம் வந்தபோது, அதை எதிர்த்தவர். அந்தத் தீர்மானத்தை ஆதரிக்காதவர். அதாவது, மேலவை வரவேண்டும் என்ற தீர்மானத்தை விரும்பாதவர். அவர் சொல்கிறார்; இந்த அரசு தங்களுக்கு நன்மைகள் பல செய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், இந்த அரசிற்கு ஒரு இடையூறோ, தோல்வியோ ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை. ஆகவே, இதை ஆட்சேபித்து நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம் என்று கூறி-விட்டு வெளிநடப்புச் செய்தனர். அந்த வெளிநடப்பு ஓரளவு எங்களுக்கு உதவிகரமாக இருந்தது என்பதை பாலபாரதி அவர்கள் அறிவார்கள்.

எங்கே அப்படி உதவியாக ஆகிவிடப் போகிறதோ என்பதால்தான், நாங்கள் வெளிநடப்புச் செய்ய-மாட்டோம்; இங்கேயிருந்து வாக்களிப்போம்; அ.தி.மு.க.வுடன் சேர்ந்து உங்களுக்கு எதிராக வாக்களிப்போம் என்று உறுதிபடச் சொல்லி-யிருக்-கின்றார். நான் அதற்காக நன்றி கூற விரும்புகிறேன். அவர்களுடைய வைர நெஞ்சத்திற்கும், உறுதிக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஆனால், அவர்களுடைய தலைவர்களிலே ஒருவரான ரமணி எப்படி நடந்து கொண்டார் என்பதையும், அவர்களுடைய மனதிலே பசுமையாக பதிய வைப்பதற்காகத்தான் நான் அதைப் படித்துக் காட்டினேன்.

இன்னொரு கருத்து - இங்கே ம.தி.மு.க உறுப்பினர் அப்படிப் பேசினார் என்று கருதுகிறேன். அவர்களுக்கு மேலவை, ராஜ்ய சபா, இவைகளெல்லாம் பிடிக்காது. (சிரிப்பு) (மேசையைத் தட்டும் ஒலி) அவர் பேசும்-போது, இது வீண் செலவு என்று குறிப்பிட்டார். இது வீண் செலவு என்று வேறு சில பேரும் சொன்னார்கள். இந்த மேலவை மீண்டும் வர வேண்டுமென்பதற்கு எதிரான கருத்துகளைச் சொன்ன வேறு சில நண்பர்களும், மேலவையால் வீண் செலவு என்று சொன்னார்கள். அதையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது, மேலவைக்கு 1985_86 இ-ல் ஆன செலவு 13 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்-தான். அப்போது மேலவைச் செயலகத்தின் செலவு 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்தான். இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் செலவு கொஞ்சம் அதிகமாக ஆகலாமே தவிர வேறல்ல. கணக்கிட்டுப் பார்த்தால், இன்றைக்கு உறுப்பினர்களுக்கு நாம் அவர்களுடைய தொகுதி மேம்பாட்டிற்காக அளிக்-கின்ற தொகையைவிட இதுவொன்றும் அதிகமல்ல என்பதையும், மேலவை வருகிற காரணத்தால், பல கோடி ரூபாய் செலவாகிவிடும் என்று கருதத் தேவை-யில்லை. அதிகச் செலவு ஆகின்ற விஷயத்திலே நாங்கள் ஈடுபடுவதில்லை.

1985_86_-லேயே 13 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய்தான். செயலகத்திற்கு 18 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்தான். இப்போது நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல, மேலவையை அமைக்க புதிய மண்டபம் எதுவும் கட்டத் தேவையில்லை. நான்கூடக் கருதினேன். மேலவை வந்தால், நம்முடைய பழைய சட்ட மண்டபத்திற்குச் சென்று விடலாமா என்று-கூட ஒரு யோசனை இருந்தது. அங்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே மேலவையை வைத்துக் கொள்ளலாமா என்று கூட ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்-மொழி தமிழ் மத்திய அமைப்பு நிறுவன அலு-வலகத்தை அங்கே அமைப்பது என்கின்ற ஒரு கருத்து உருவாகியிருப்பதால் அதை அங்கே அமைத்து விட்டு இங்கே இரண்டு பெரிய கூடங்கள் இருக்கின்றன. ஒரு மிகப் பெரியகூடம்;- இன்னொன்று நடுத்தரமான கூடம். அந்த நடுத்தரமான கூடத்திலே நாம் இங்கே வாக்கெடுப்பில் வெற்றி பெற்று -மத்திய அரசு விரைவாகச் செயல்பட்டு நமக்கு அனுமதி தருவதிலே வெற்றி பெற்று -அந்த மேலவை அமையுமேயானால் அதை இங்கேயிருக்கின்ற இரண்டு கூடங்களிலே ஒன்றிலே அமைப்பதென்றும் முடிவு செய்திருக்-கிறோம் என்று நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்-பட்டிருக்கிறேன்.

நம்முடைய பீட்டர் பேசும்போது, எந்தெந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் - எத்தகைய இயலாதோருக்கெல்லாம் மேலவையில் இடம் தர முடியுமென்றார். தந்த உதாரணங்களைச் சொல்ல வேண்டுமேயானால் - கழக ஆட்சியில் மேலவையில் சமுதாயத்தின் அடித்தளத்திலே உள்ளவர்களை இடம் பெறச் செய்தோம். உதாரணம் வேண்டுமே-யானால்,- சலவைத் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கோலப்பன் இருந்தார். அதற்கு முன்பே சீர்காழியைச் சேர்ந்த எத்திராஜ் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் இடம் பெற்றிருந்தார். அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் புதிரை வண்ணார் என்கிற அந்தக் கூட்டத்தோடு எங்களை இணைத்து அவர்களுக்குள்ள உரிமைகளை வழங்க வேண்டு-மென்று பேசிக் கொண்டிருக்கக் கூடியவர்.

பின்னர் கழக ஆட்சியிலே மாசிலாமணி என்ற தோழர்_- ஏன் ஆதி ஆந்திரா சமுதாயத்தைச் சேர்ந்த எலமந்தா அவர்களுக்கு இடம் தந்தோம்;- தமிழ் மொழிக் காவலர்களில் ஒருவரான தவத்திரு குன்றக்-குடி அடிகளாருக்கு இடம் தந்தோம். அண்ணா அவர்கள் காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களே மேலவையிலே இடம் பெற்று இருந்தவர் தான். நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி மேலவையில் கழக ஆட்சியில் இடம் பெற்றார். காங்கிரஸ் கட்சி ஆட்சியிலே இருந்த போது நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் அவர்களும் -_கொடுமுடிக் கோகிலம் கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.

எனவே யார் யாருக்கு இடம் பெறுவது என்பதிலே எந்தவிதமான கருத்து வேறுபாடும் எழுவதற்கு வகையில்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றை மாத்திரம் நான் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் இந்த அவையிலே இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து அதை வழி மொழிந்து - ஆதரித்து காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்-பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தைகளின் சார்பிலும் தங்களுடைய கருத்துகளை அவர்கள் சொன்ன-போதெல்லாம் _ இந்த மேலவையின் வரலாற்றுத் துளிகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டிருக்கின்றார்-கள். அந்த வரலாற்றுத் துளிகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நமக்குக் காரியம் தான் பெரிது, வீரியம் பெரிதல்ல. ஆனால் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர்களான செங்கோட்டையன் போன்றவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அது இந்தத் தீர்மானத்தைப் பற்றியல்ல. நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு வார்த்தையைச் சொல்ல நேரிட்டது. அவர்களுடைய கட்சியைப் பற்றி -அ.தி.மு.க.வைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல நேரிட்டது. அதை நான் திருப்பிச் சொல்ல விரும்பவில்லை. அப்படி அந்த வார்த்தையைச் சொல்ல நேரிட்டதற்கு என்ன காரணம் என்றால், பின்புறத்திலிருந்தவர்கள் எழுப்பிய கூச்சல் தான். பீட்டர் சொன்ன வார்த்தையை ஆட்சேபித்த என்னுடைய அருமை நண்பர் செங்கோட்டையன், அந்தக் கூச்சலை ஆட்சேபிக்காமல் இருந்தாரே என்பது தான் எனக்குள்ள ஆதங்கம். இனிமேல் அப்படிப்பட்ட கூச்சல் எழும்பும் போது திரு. செங்-கோட்டையன் அவர்களோ, திரு. பன்னீர்செல்வம் அவர்களோ அதை அடக்கி வைத்து ஒரு அமைதியை உருவாக்கி விவாதம் ஒளிமயமாக நடைபெறுவதற்கு வழி வகுத்தால் எல்லோருக்கும் அது பயன் உள்ளதாக இருக்கும் என்று நான் தெரிவித்துக் கொண்டு இந்த விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பில் அனைவரும் வாக்களித்து - எதிர்த்துப் பேசியவர்களும், - நடுநிலை-யோடு பேசியவர்களும் - ஒன்றாகச் சேர்ந்து மேலவை அமைப்புக்காக வாக்களித்து - இந்தத் தீர்மானத்தை நிறை-வேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு அமைகின்றேன்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai