வாழ்வியல் ச்ந்தனைகள் - கி.வீரமணி

திருவாடுதுரையும், தோடி ராகமும்!

‘புதிய பார்வை’ இதழில் பிரபல எழுத்தாளர் _ கட்டுரையாளர் திரு. ‘சின்ரா’ அவர்கள், “நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் (பிள்ளை) என்ற தலைப்பில் மிக அருமையான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.

‘தோடி’ ராகப் புகழ் _ திருவாடுதுரையார் அவர்கள் அக்காலத்தின் ‘சங்கீத சாம்ராட்’ தமிழர்கள் பெருமைப்படவேண்டிய நாதஸ்வர கலைஞர் _ எல்லாவற்றையும்விட தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத ஆற்றலாளர்.

அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையில் உள்ள இரண்டு நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்குக் கொள்ளை இன்பம்!

“ராஜரத்தினம் (பிள்ளை) மிக அற்புதமாக கச்சேரி செய்து கொண்டிருந்தார். ஒரு பிரமுகர் ‘ராஜரத்தினம் தோடி வாசிப்பா’ என கேட்டார்.

வழக்கமாக இப்படி கேட்டவர் யாரானாலும் அலட்சியமாக பதில் சொல்லும் ராஜரத்தினம் (பிள்ளை), அன்று உடனே நாதஸ்வரத்தை மேடையில் வைத்துவிட்டு, மிக வேகமாக எழுந்து தனது பட்டுத்துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்தப் பிரமுகர் பக்கம் வந்து பணிவாக காதில் ஏதோ சொல்லிவிட்டு மறுபடியும் மேடை ஏறி வந்துவிட்டார் ராஜரத்தினம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அடேயப்பா இத்தனை மரியாதையுடன் இறங்கி வந்து ராஜரத்தினம் (பிள்ளை) பேசிவிட்டுப் போகவேண்டுமானால், அந்தப் பிரமுகர் எவ்வளவு பெரிய மனிதராக இருப்பார் என அந்தப் பிரமுகர் முகத்தையே பார்த்தார்கள். அந்தப் பிரமுகர் முகமோ வெளிறிக் காணப்பட்டது.

காரணம் பின்னர்தான் தெரிய வந்தது. அந்தப் பிரமுகர் ‘தோடி வசிப்பா’ என்றார் அல்லவா? ஏற்கெனவே அந்த சமயம் ராஜரத்தினம் தோடிதான் வாசித்துக் கொண்டிருந்தார். அது தெரியாமல், ராகத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பிரமுகர்மேல் எக்கச்சக்க கோபம் ராஜரத்தினத்திற்கு வந்துவிட்டது. அதை அடக்கிக் கொண்டு, அதே சமயம் அந்தப் பிரமுகர் அடுத்து வாய் திறக்காமல் இருக்க, காதோரம் சொன்னது, ‘அட மண்டூகமே, நான் வாசிக்கிறதுதானே தோடி’ என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்!’’

இதுவல்லவா சரியான பாடம் கற்பிக்கும் அரிய முறை!

மற்றொரு நிகழ்வுபற்றி கட்டுரையாளர் ‘சின்ரா’ கூறும் சம்பவம்:

ராஜரத்தினம் (பிள்ளை) யாருக்கும் பணியாதவர்போல் நடப்பதாகத் தெரிந்தாலும், உரியவருக்கு தரும் மரியாதையில் மிகப் பணிவுடன் நடந்துகொள்வார். ஒரு சமயம் மதுரையிலிருந்து தனது சொந்த ஊர் திரும்பிய ராஜரத்தினம், ரயில் நிலையத்தில் நுழையும்போது, அங்கே ரயிலில் இருந்து இறங்கி தனது தொண்டர்களுடன் தந்தை பெரியார் வெளியே வந்துகொண்டிருந்தார்.

தந்தை பெரியாரிடம் ராஜரத்தினம் (பிள்ளைக்கு) பெரிய மரியாதை உண்டு. பெரியார் உயர்வகுப்பினர் அல்லாதவர்களுக்குப் பாடுபடுகிறார். அவர் இல்லாவிட்டால், தங்களைப் போன்றவர்களுக்கு இந்த மரியாதை கிடைத்திருக்காது; உயர் வகுப்பினர் இசையிலும்கூட வாய்ப்பாட்டு, பிடில், வீணை, புல்லாங்குழல் என இலகுவான வாத்தியங்களைத்தான் வாசிக்கிறார்கள். நம்மவர்களோ, நாதஸ்வரம், மேளம் என மிக சிரமப்பட்டு, வாசிக்கிற வாத்தியங்களை வாசிக்கிறார்கள் என பெரியார், அண்ணா போன்றவர்கள் பேசி வருவதால், தங்களுக்கு மக்களிடையே தனிப் பெருமை கிடைக்கிறது என நம்பியவர் ராஜரத்தினம் (பிள்ளை).

எனவே, எதிரே பெரியார் வருவதைக் கண்ட ராஜரத்தினம் தனது இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டபடியே பெரியாரை நெருங்கி அவர் அருகே வந்ததும் அப்படியே பெரியார் காலில் விழுந்தார்.

அந்த காலகட்டத்தில் மதுரை ரயில்வே நிலையத்தில் நடைபாதையில் சிமெண்ட் தரை கிடையாது. செம்மண்தான். எனவே, அந்தத் தரையில் பட்டுச்சட்டையுடன் கீழே விழுந்த ராஜரத்தினம் (பிள்ளையை) பெரியார் தூக்கியபடி ‘அய்யா எழுந்திருங்க. இந்த செம்மண் தரையில் உங்க பட்டுச்சட்டை வீணாகப் போயிடுமே’ என்றார்.

ராஜரத்தினம் எழுந்தபடி, அட சட்டை போனால் என்ன அய்யா, உங்களை நேரில் கண்டு தரிசிக்க வாய்ப்பு கிடைத்ததே என்றாராம்.

எனவே, யாரை எப்படி மதிக்கவேண்டும்! தகுதியவற்றர்களுக்கு எப்படி அமைதி வழியில் அறிவு புகட்டவேண்டும் என்பதற்கு இந்த இரு சம்பவங்கள் போதாதா?

பலரது வாழ்க்கை என்பது பாடந்தான், எவ்வளவு சுவையானது! மறக்க முடியாதது!


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai