தமிழர்களை குண்டுவீசி கொன்ற இலங்கை ராணுவம்
அமெரிக்க மனித உரிமை அமைப்பு குற்றச்சாற்று

நியூயார்க், மே 20_ கடந்த ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் குண்டு வீசிக் கொன்றது என்று அமெரிக்க மனித உரிமை அமைப்பு குற்றம் சாற்றியுள்ளது.

இலங்கையில் போர் முடிவடைந்ததன் ஓராண்டு நினைவு நாளையொட்டி, அமெரிக்காவைச் சேர்ந்த ‘இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப்` என்ற மனித உரிமை அமைப்பு, போரின்போது நடைபெற்ற சம்பவங்கள்பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கி, அங்கு அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் போகச் சொன்னதாகவும், அங்கு சரமாரியாக குண்டு வீசி ஆயிரக்கணக்கான தமிழர்-களைக் கொன்றதாகவும் குற்றம்சாற்றி-யுள்ளது.

இத்தாக்குதல் பற்றி உயர் அதிகாரி-களுக்குத் தெரிந்த போதிலும், அவர்கள் அதைத் தடுக்கவில்லை என்றும் கூறி-யுள்ளது. இந்த விதிமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரியுள்ளது.


சிறை கைதிகளுக்கு ‘கால்சென்டர்’ வேலை

அய்தராபாத், மே 20_ ஆந்திராவி-லுள்ள சிறை கைதிகளுக்கு வங்கி தொடர்பான கால் சென்டர் வேலை கொடுக்கப்பட உள்ளது.அய்தராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். தண்டனை பெற்ற இந்த கைதிகளில் பலர் சோப்பு, பினாயில், மரச்சாமான்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறைத்துறை டி.ஜி.பி., கோபிநாத் ரெட்டி குறிப்பிடுகையில், ‘செர்லபள்ளி சிறையில், 200 முதல் 250 கைதிகள் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்புவரை முடித்துள்ளனர். தண்டனை பெற்ற இந்த கைதிகள், மற்ற படிக்காத கைதிகளுடன் சேர்ந்து சோப்பு, பினாயில், தச்சு வேலையை செய்து வருகின்றனர்.

படித்த இந்த கைதிகளுக்கு கால் சென்டர் வேலை அளிக்க, ‘ரேடியன்ட் இன்போ சிஸ்டம்’ என்ற நிறுவனம் முன்-வந்துள்ளது. சிறை வளாகத்திலேயே வங்கி பணி தொடர்பான பி.பி.ஓ., பணி-களை செய்ய கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற பின் அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்’ என்றார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai