அரிய ஆவணங்களைப் படிக்க தடை நீக்கம்: மத்திய அரசு முடிவு

மும்பை, மே 20_- நாட்டின் மிக முக்கிய அரிய ஆவணங்களை, பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யும் மாணவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற சட்டத்தை, மாற்றிய-மைக்க மத்திய அரசு முடிவு செய்-துள்ளது. இது அமலானால், இனி யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அரசு மற்றும் தனியார் ஆவணங்-களைப் பாதுகாத்து வைக்கும், அரசு ஆவணக் காப்பகம் கி.பி.1891 இல் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. பின், அந்தக் காப்பகம், 1926 இல் டில்-லிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து போபால், ஜெய்ப்பூர், புதுச்சேரி மற்றும் புவனேஸ்வரிலும் ஆவணக் காப்பகங்கள் தொடங்கப்-பட்டன.

இன்றைய நிலையில், டில்லியி-லுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில், அக்பர் காலம் தொட்டுப் பல்வேறு ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் போதைப் பொருளான ஓபியம் விற்பனை 19 ஆம் நூற்றாண்டில் இருந்தது, பகத்சிங்கின் வழக்கு விசாரணை, தாதாபாய் நவ்ரோஜி கணிதமேதை ராமானுஜத்துக்கு எழுதிய கடிதம், அம்பேத்கரின் தனிப்பட்ட கடிதங்கள், காந்தியார் கொல்லப்பட்ட பின் மும்-பையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, முகலாய ஆட்சிக் காலத்திய அரசு ஆவணங்கள் என, பல ஆவணங்கள் உள்ளன.

‘பொது ஆவணங்கள் சட்டம்-1993’ இன் படி, அங்கீகரிக்கப்பட்ட பல்-கலைக் கழகங்களில் பல்வேறு துறை-களில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்-கள் மட்டுமே, தங்கள் துறை ரீதி-யான ஆவணங்களைப் பார்க்க முடி-யும். பொதுமக்கள் இந்த ஆவணங்-களைப் பார்க்க இயலாது. இந்நிலை-யில், இந்தச் சட்டத்தில் சில மாற்றங்-களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, ‘ஆராய்ச்சியாளர்’ என்ற சொல்லுக்-குப் பதிலாக ‘பயனாளி’ என்ற சொல் சேர்க்கப்படும். இதனால், பல்கலைக்-கழக ஆராய்ச்சியாளர் மட்டுமல்லா-மல் தேவைப்படுபவர் யாராயினும், இந்த ஆவணங்களைப் பார்க்க முடியும். விருப்பப்படுபவர்களுக்கு தனியாக ‘வாசகர் அட்டை’ வழங்-கப்படும். இந்த அட்டை வைத்திருப்-பவர்கள், ஆவணக் காப்பக வளாகத்-துக்குள் நுழைய அனுமதி பெற முடி-யும். அரசு ஆவணங்கள் உருவாகி 25 ஆண்டுகளுக்குப் பின்னர், தேசிய ஆவணக் காப்பகத்தில் சேர்க்கப்படு-கின்றன. இப்போதைய திருத்தத்தின் படி, இனி ஆவணங்கள் உருவாகி 20 ஆண்டுகளுக்குப் பின் காப்ப-கத்தில் சேர்க்கப்படும்.


இங்கிலாந்து ராணி இறந்ததாக செய்தி
மன்னிப்பு கேட்டது பி.பி.சி., வானொலி

லண்டன், மே 20_- இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டதாக பி.பி.சி., வானொலி அறிவிப்பாளர் டானி கெல்லி அறிவித்தார். அதற்கு முன்பு அவர் தேசிய கீதத்தை ஒலிபரப்பினார். அது ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்-போதே நேயர்களுக்கு முக்கியமான அறிவிப்பு என்று கூறி, ராணி எலிசபெத் இறந்து விட்டார் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பர்மிங்காம் நகரிலும், மேற்கு மிட்லாண்டு பகுதியிலும் ஒலிபரப்பானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்-தியது. இதை தொடர்ந்து பி.பி.சி ரேடியோ வருத்தம் தெரிவித்துக் கொண்டது. அந்த அறிவிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.பி.சி., அறிவித்தது.


ஜார்க்கண்டில் சுழற்சி முறை ஆட்சி

ராஞ்சி, மே 20_ ஜார்க்கண்ட் மாநிலத்-தில் கடந்த மூன்று வாரங்களாக நிலவிவந்த அரசியல் நெருக்கடி நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

பாஜக மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆகிய கட்சிகளி-டையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி இரு கட்சியைச் சேர்ந்த தலை-வர்கள் தலா 28 மாதம் சுழற்சி அடிப்-படையில் முதல்வராக இருப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது பாஜக-வைச் சேர்ந்த தலைவர் முதல்வராகப் பதவி-யேற்பார். 28 மாதங்களுக்குப் பிறகு ஜேஎம்எம் தலைவர் முதல்வராக பதவியேற்பார் என்று கூட்டணிக் கட்சி-யினருடன் பேச்சு நடத்திய பிறகு செய்தி-யாளர்களுக்கு பாஜக-வின் அர்ஜுன் முண்டா, ஜேஎம்எம் தலைவர் சிபு சோரன் ஆகியோர் தெரிவித்தனர்.

முதல்வர் பதவியை எப்போது ராஜிநாமா செய்வீர்கள் என்று சிபுசோர-னிடம் கேட்டதற்கு, அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார். இருப்பினும் இம்மாதம் 25 ஆம் தேதி தனது பதவியை அவர் ராஜிநாமா செய்வார் என்று தெரிகிறது. அன்றைய தினமே புதிய முதல்வராக அர்ஜுன் முண்டா பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 28- ஆம் தேதி மக்களவையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்துக்கு சிபுசோரன் எதிராக வாக்களித்தார். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்டில் சிபு சோரனுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக பாஜக அறிவித்தது.

பாஜக தலைமையேற்றால் தங்கள் கட்சி ஆதரவு தருவதாக சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் அறிவித்தார். இதையடுத்து மே 8- ஆம் தேதி ஆட்சி-யைப் பகிர்ந்து கொள்ள பாஜக முன்-வந்தது. இருப்பினும் இது தொடர்பாக கடந்த மூன்று வாரங்களாக பேச்சு-வார்த்தை நடைபெற்றது. தற்போது பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்-டுள்ளது.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai