தமிழ் செம்மொழி மாநாடு - கண்காட்சி
மறக்க முடியாத மகிழ்ச்சி: மாணவிகள் உற்சாகம்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கண்காட்சியின் உள்ளே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்வையிட்டனர்.

கோவை, ஜூன் 27_ உல-கிலேயே மூத்த இனம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறும் பெருமைக்குச் சொந்தக்-காரர்களான நம் தமிழர்-கள் பழங்காலத்தில் எப்-படி வாழ்ந்து இருக்கிறார்-கள்? என்பதை உலகத்-தமிழ் செம்மொழி மாநாட்டு காட்சியரங்கம் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. சுமார் ஒரு கிலோ மீட்-டர் பரப்பளவில் அமைந்-துள்ள இந்த காட்சிய-ரங்கை பார்வையிட 3 கிலோ மீட்டர் தூரத்-துக்கு 4 மணி நேரம் வரி-சையில் காத்து நின்று செல்கிறார்கள். கால்வ-லிக்க வரிசையில் காத்து நின்றவர்கள் அரங்கிற்-குள் சென்றதும் அடடே, எவ்வளவு பிரமாதமான காட்சி இது! என்று வியந்து போகிறார்கள்.

செம்மொழி மாநாட்டு திடலுக்கு... தமிழர் கட்ட-டக் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்ததும் சிந்து சம-வெளி நாகரிக அகழ்வா-ராய்ச்சியில் கண்டெ-டுக்-கப்பட்ட கல்வெட்டு குறிப்-புகளும், கிடைத்த முத்திரைகளும் பளிச்சிடு-கின்றன. தமிழ் பெண்-களின் அழகுக்கு அழகு சேர்க்கும் வளையல், நகர அமைப்புகள் ஆகியவை சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களின் நாகரிகம்-தான் என்பதற்கு சாட்சி-யாக உள்ளன.

வழவழப்பான தாள்-களில் அச்சிட்டு நாம் படிக்கும் அய்ம்பெரும் காப்பிய நூல்களான சீவகசிந்தாமணி, மணி-மேகலை மற்றும் புற-நானூறு ஆகியவற்றின் மூல ஓலைச் சுவடி
-களும், எழுதுவதற்கு பயன்படுத்திய எழுத்-தாணி-களும் கண்ணாடிப் பேழைக்குள் கண் சிமிட்-டு-கின்றன. கடந்த மே மாதம் 20ஆம் தேதி நாகை மாவட்டத்தில் பூமியை தோண்டும்-போது 85 இதழ்களுடன் கூடிய செப்புப் பட்டயம் கிடைத்தது.

கங்கை கொண்ட சோழனின் மகன் முத-லாம் ராஜாதிராஜன் மற்-றும் அவனது தம்பி 2ஆம் ராஜேந்திரன் ஆகியோர் எழுதிக் கொடுத்த பட்ட-யம் அது. சோழர் முத்-தி-ரையுடன் இணைக்கப்-பட்டுள்ள இந்தப் பட்-டயத்தில் இந்தளூரை மய்யமாக வைத்து ஒரு நகரை உருவாக்க குறிப்-பிட்டுள்ளனர். அந்த பகுதியில் கிடைக்கும் வருவாயை கோவில்கள் வளர்ச்சிக்கும், நாட்டு வளர்ச்சிக்கும் பயன்படுத்-தும்படி உத்தரவிடப்-பட்டுள்ளது.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்-துகளால் எழுதப்-பட்டு உள்ளது. இதன் எடை 158.5 கிலோ ஆகும். இதேபோல் பல்லவர், சேரர், பாண்டியர் காலத்து செப்பேடுகளும் கண்-காட்-சியில் இடம் பெற்-றுள்ளன. பரதமும், இசை-யும் தமிழில் தோன்றி-யவை. பலவகை இசைக் கருவிகளை நம் முன்-னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். செம்-மொழித் தமிழ்த் திரு-விழா நடக்கும் கோவை சோழர் பழங்குடியான இருளர் குழு தலைவன் கோவன் என்பவனால் உருவாக்கப்பட்ட நகரம் என்று வரலாறு கூறு-கிறது. இந்த இருளர் இனம் இருபக்கமும் துளை உள்ள பெரிய ‘புளுட்’ இசைக்கருவியை இசைத்து இருக்கிறார்கள்.

செங்கோட்டு யாழ், எருது யாழ், மயில் யாழ், மயூரி யாழ் என்ற யாழ் இசைக் கருவிகள் 700 ஆண்டுகள் பழமையா-னவை. 800 ஆண்டுகள் பழமையான பஞ்சமுக வாத்தியம் ஒன்றரை டன் எடை உள்ளது. முற்றி-லும் செம்பால் உருவாக்-கப்பட்டுள்ள இந்த வாத்-தியம்தான் இந்த கால டிரம்செட் வளர்ச்சிக்கு அடிப்படை. இந்தக் கரு-வியின் ஒவ்வொரு முகத்-திலும் அடித்தால் ஒவ்-வொரு விதமான இசை ஒலிக்கிறது.

திருப்பாச்சி வீச்சரி-வாள், வேல்கம்பு என்று பல ஆயுதங்கள் இன்றும் நம் தமிழர்களால் பயன்-படுத்தப்படுகின்றன. பழந்-தமிழ் மக்கள் 11 விதமான அரிவாள்களை பயன்-படுத்தி இருக்கிறார்கள். அம்புகள், கோடரியிலும் பல ரகங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

இவைகளும் கண்காட்-சியில் இடம் பெற்றுள்-ளன. 5 ஆயிரம் ஆண்டு-களுக்கு முந்தைய செப்பு வாள்கள் பிரமிக்க வைக்-கிறது. ஒரு காலத்தில் சாப்பிடும் தட்டு, காய்கறி-கள் வைக்கும் தட்டு ஆகியவற்றை மரத்தி-னால் செய்துள்ளனர். குமரி மாவட்டம் குலசே-கரம் பகுதியில் முகமது அலி என்பவரால் சேக-ரிக்கப்பட்ட இந்த வகை பொருள்களும் கண்காட்-சியில் உள்ளன. மரத்தில் செய்த 7 அறை பெட்டி-யும் உள்ளன.

தமிழரும், தமிழ் நாகரி-கமும் காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி பெற்று வருகிறார்-கள். விமானத்தை தெரி-யாத காலத்திலேயே வானவூர்தி ஏறினாள் என்று சிலப்பதிகாரமும், வலவன் ஏவா வான-வூர்தி என்று ஆள் இல்லா விமானம் பற்றி புறப்-பாடலும் கூறுகிறது. 5 ஆயிரம் ஆண்டு தொன்-மைக்கு சொந்தக்காரர்-களான தமிழர்கள் இன்று கணினியிலும், விண்வெ-ளித் துறையிலும் கலக்கு-கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அக்னி, பி.எஸ்.-எல்.வி. ராக்கெட் வரை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கண்-காட்சி அரங்கை கண் கொட்டாமல் பார்த்து விட்டு வெளியே வரும் பொதுமக்கள் பிரமிப்பில் இருந்து விடுபட சில நிமிடங்கள் ஆகிறது.

அவர்களில் சிலர் கூறியதாவது:- கோமதி (பொறியியல் மாணவி, திண்டுக்கல்):- கண் காட்-சியை பார்ப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து உடுமலையில் உள்ள உற-வினர் வீட்டுக்கு வந்-தோம். நான் பள்ளியில் பாடங்களில் படித்ததை இன்று பார்த்தேன். அந்-தக் காலத்தில் இருந்த 87 வகை மலர்கள் பற்றிய காட்சி என்னை கவர்ந்-தது. கற்பனையில் நினைத்து பார்க்க முடியாததை இன்று நேரில் பார்த்-தேன். மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சந்தோஷத்தை அனுபவிக்க என் தங்கை சுபத்ரா மற்றும் குடும்-பமே கோவையில்தான் 3 நாள்களாக முகாமிட்டு உள்ளோம்.

மஞ்சுளா (பொறி-யியல் மாணவி, உடு-மலை):- மிகப்பெரிய வர-லாற்றை காட்சி பொரு-ளாக பார்த்தது பிரமிப்-பாக உள்ளது. இதுவரை இந்த மாதிரி கண்காட்சி பார்த்த அனுபவம் எனக்கு இல்லை. இது என் வாழ்-நாளில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்து-விட்டது.

விஷ்ணு பிரியா (கோவை):- 4 மணி நேரம் வரிசையில் காத்து நின்று-தான் கண்காட்சி அரங்-குக்கு வந்தேன். வரிசை-யில் நின்ற போது கால் வலித்தது. பார்க்காமலே போய் விடலாம் என்று நினைத்தேன். அப்படி போயிருந்தால் வாழ்க்-கையில் மிகப்பெரிய வாய்ப்பை இழந்து இருப்-பேன்.

வாழ்க்கையில் அரி-தாக கிடைக்கும் வாய்ப்பு இது. கண்காட்சியில் பார்த்தது என் மனத்-திரையில் பல ஆண்டுகள் பதிந்து இருக்கும். இன்று எனக்கு ரொம்ப சந்தோ-ஷமான நாள் என்றார். கண்காட்சியை பார்க்க தினமும் படையெடுக்கும் கூட்டத்தை பார்த்து அதிகாரிகளே திகைத்து நிற்கிறார்கள்.

இரவு 10 மணிக்கு அரங்கம் மூடி விடுவதால் பலர் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பு-கிறார்கள். பொதுமக்-களின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய மாநாடு முடிந்த பிறகும் ஒரு வாரம் கண்-காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai