பன்னாட்டு மொழிகளுக்கும் தாய் - தமிழ்!
20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது
கோவைக் கருத்தரங்கில் அறிஞர்கள் கணிப்பு

கோவை, ஜூன் 28_ தமிழ் மொழி 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும், அது பல சர்வதேச மொழி-களுக்கு தாய்மொழியாக விளங்குவதாகவும் செம்-மொழி மாநாட்டு கருத்-தரங்கில் நேற்று முன்தினம் பேச்-சாளர்கள் தெரிவித்தனர். உலகத்தமிழ் செம்-மொழி மாநாட்டின் 4ஆவது நாளான நேற்றுமுன்தினம் பொது அரங்க நிகழ்ச்-சியில் செம்மொழி தகுதி என்ற தலைப்பில் கருத்-தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கவிஞர் மன்னர்மன்னன் தொடங்கி-வைத்தார். பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி தலைமை தாங்கி பேசி-னார். தமிழ் தொன்மை-யானது மட்டுமின்றி இலக்கிய வளம் மிகுந்-தது. சங்க கால இலக்-கியம் படைத்த புலவர்-கள் 475 பேர். கி.மு. 2 முதல் கி.பி. 2-_ஆம் நூற்-றாண்டுவரையிலான காலத்தில் 500 புலவர்-களை கொண்ட தமிழ் மொழிபோல் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை. இதை அறிஞர்-கள் சிறப்பான முறையில் ஆய்வு செய்யவேண்டும். இது மாபெரும் அதிசயம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார். மூத்த மொழி

செம்மொழி தகுதி தொன்மையில் என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது::

தொல்காப்பியத்தின் தொடை வகைகள் மொத்-தம் 13 ஆயிரத்து 699. இதில் செந்தொடைகள் என அழைக்-கப்படும் தொடைகள் 8 ஆயிரத்து 556 ஆகும். இந்த தொடைவகைகளில் கூறப்படும் தமிழ்மொழி-யின் காலம் 7 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. அதனால்தான் தமிழ் மொழி 10 ஆயிரம் ஆண்-டுக்கு முன்பு தோன்றியது என தொல்-காப்பியரின் சான்றுகள் கூறுகிறது. இலக்கியம் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்-பட்டது என்றால் மொழியின் வயது 20 ஆயிரம் ஆண்டாக இருக்-கும் என்றே கருத தோன்-றுகிறது. இவ்வாறு அவர் பேசினார். மொழிகளுக்கெல்லாம் தாய்!

கருத்தரங்கில் செம்மொழி தகுதி, பன்-மொழிகளை ஈன்றதில் என்ற தலைப்பில் ஜி.ஜான் சாமுவேல் பேசும்போது கூறியதாவது:

18ஆம் நூற்றாண்-டுக்கு பிறகே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஒரே குடும்-பத்தை சேர்ந்த மொழி-கள் என்று கண்டறிந்-தோம். அதன்பிறகு திராவிட மொழிகளுக்கு தமிழ் தாய்மொழி என தெரிந்தது. 1856இல் மொழிக்கு தமிழ் தாய்-மொழி என்றும், 1906இல் தமிழ் 14 மொழிக்கு தாய் என்றும் அறியப்பட்டது. இப்போது தமிழ் 30 மொழிகளுக்கு தாயாக விளங்குகிறது. அதே-போல் சுமேரிய, செமித் மொழிகளுக்கும், ஜப்-பானிய, கொரிய மொழி களுக்கும், தமிழுக்கும் தொடர்பு இருப்பதை ஆராய்ச்சி மூலம் கண்-டறிந்து உள்ளோம். அத-னால் பல சர்வதேச மொழிகளுக்கும் தாயாக தமிழ் விளங்கி இருக்கும் என்ற அய்யப்பாடுகூட எழுகிறது. இவ்வாறு அவர் பேசினார். விருந்-தோம்பல் சிறப்பு செம்-மொழி தகுதி, பண்-பாட்டுக் கொடையில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் வளனரசு பேசிய-தாவது::

தமிழ் இலக்கியங்-களில் பத்துப்-பாட்டு, எட்டுத்தொகை, முத்-தொள்-ளாயிரம், திருக்-குறள் போன்றவை தமிழரின் தனித்தமிழ் பண்பாடுகளை எடுத்து சொல்கின்றன. தொல்-காப்பியத்தில் உள்ள ஓரறிவு முதல் ஆறறிவு வரை என்ற பாடலும் பண்பாட்டை விளக்கு-கின்றன. பண்பாடு என்று பார்க்கும்போது தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்று வகுக்கிறது. உலகிலேயே தமிழர்-களின் விருந்தோம்பல் பண்பு சிறப்பானது. அதேபோல் கலைகளி-லும் வளர்ந்தவன் தமிழன். அதனால் தமிழ் மொழியின் பண்பாடு-களுக்கு ஈடு இணை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

செம்மொழி தகுதி, இலக்கிய செழுமையில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் ஆறு.அழகப்பன் பேசிய-தாவது:: தமிழ் மொழி ஒரு கோவில்-போன்றது. கோவிலின் சுவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற மண்களால் உருவாக்கப்-பட்டதாக கருதலாம். முதல் மாடத்தை சங்க இலக்கியம் என்றும், 2ஆவது மாடத்தை நீதி நூல்கள் என்றும், 3ஆவது மாடத்தை அய்ம்-பெருங்காப்பியங்-களாகவும், 4ஆவது மாடத்தை சைவ சித்தாந்த நூல்களாகவும், 5-ஆவது மாடத்தை பிர-பந்தமாகவும், 6ஆவது மாடத்தை தனிப்பாடல்-களாகவும், 7ஆவது மாடத்தை இஸ்லாமிய இலக்கியமாகவும், கிறிஸ்-தவ இலக்கியமாகவும் கருதலாம். அந்த கோவி-லின் 9 கலசங்களாக இயல், இசை, நாடகம், அறிவியல், ஊடகம், மொழி பெயர்ப்பு, உரை-நடை, நாட்டுப்புறவியல், செம்மொழி என்றும் அலங்கரிக்கலாம். அந்த அளவுக்கு தமிழ் மொழி சிறப்புடையது. இவ்வாறு அவர் பேசினார். பொதுவுடைமைச் சிந்தனைகள்

செம்-மொழி தகுதி, உலகப்-பொதுமையில் என்ற தலைப்பில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் பேசியதாவது::

பொதுவுடைமை தமிழில் எழுதப்பட்ட அனைத்து நூல்களும் உலக மக்களின் நலனை கருத்தில் கொண்டு எழு-தப்பட்டு உள்ளன. திருக்-குறளில் பல குறள்கள் உலக மக்கள் அனைவ-ராலும் ஏற்கும் வகையில் உள்ளது. திருக்குறள்-போல் உலகில் பிற-மொழி நூல்களில் எந்த நூலும் பொதுவுடைமை சிந்தனை-யோடு இருந்த-தில்லை. உடலில் இருப்-பது ஊனமல்ல. உழைக்-கும் தகுதி உடையவன் உழைக்காமல் இருந்தால் அவனே ஊனன் என்-கிறான் வள்ளுவன். பணத்தை தொழிலாக்கு, தொழிலை உழைப்பாக்கு, உழைப்பை செல்வமாக்கு என்று அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் வள்ளுவன் கூறி இருக்கிறான். பாரதி, பாவேந்தர் பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள் என தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற நூல்கள் பொதுவு-டைமையை பிரதிபலிக்கின்றன. இவ்-வாறு அவர் பேசினார். செம்மொழி தகுதி, இலக்கணச் செப்பத்தில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் இலக்குவனார் மறைமலை பேசிய-தாவது:: உலகறிந்த இலக்கண நூல்களில் தொல்காப்-பியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொல்காப்-பியம் எழுத்து, சொல், பொருள் என 3 அதி-காரங்-களை கொண்டது. தொல்காப்பியர் தமிழில் 30 எழுத்துகள்தான் இருப்ப-தாக கூறுகிறார். அதை அவர் சொன்ன காலம் 3000 ஆண்டுக்கு முன்பு... சொல் அதிகாரம் என்று பார்க்கும்போது தமிழில் உள்ள ஒருவர் என்ற சொல் உலகில் எந்த மொழியிலும் இல்லாதது. பொருள் அதிகாரத்தில் ஆண்பால், பெண்பால் என்று மனித இனத்தை பிரித்துக்-காட்டும் தொல்காப்பியர் பெண்கள் அறிவு மிகுந்த-வர்களாக காட்டியுள்-ளார். இவ்வாறு அவர் பேசினார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 

சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai