இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்: இடதுசாரிகள் உள்ளிருப்புப் போராட்டம்

புதுடில்லி, ஜூலை 29, விலைவாசி பிரச்சினை பற்றி விவாதிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானங்களை ஏற்க மறுத்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்றும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரண்டாவது நாளாக, நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. விலைவாசி உயர்வு பிரச்சினையை ஒத்திவைப்பு தீர்மானம் மூலம் விவாதிக்க அனுமதிக்கும்படி அன்றைய தினத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பா.ஜ.க., கம்யூனிஸ்ட்டுகள், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகியவையும் இதை ஆதரிப்பதால், அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த மறுக்கிறது.

இந்த தீர்மானத்தை ஏற்க மறுக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நேற்று முன்தினம் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நேற்றும் இதே நிலை நீடித்தது. மக்களவை நேற்று காலை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும் (பா.ஜ.), மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் தாங்கள் கொடுத்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மறுப்பது ஏன்? என்று சபாநாயகர் மீரா குமாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.க), எதிர்க்கட்சிகள் கொடுத்துள்ள ஒத்திவைப்பு தீர்மானங்களை சபாநாயகர் ஏற்க வேண்டும். ஏழை மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இப்போது அந்த மக்களையே விலைவாசியை உயர்த்தி சித்ரவதை செய்கிறது.

இதற்காக, மத்திய அரசை நாங்கள் கண்டிக்க வேண்டும். வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அரசு ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றார். அடுத்து பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங், விலைவாசி உயர்வால் நாட்டில் 85 சதவீத மக்கள் பாதித்துள்ளனர். எனவே, ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்று விவாதம் நடத்த வேண்டும். அரசு கிடங்குகளில் உணவு தானியங்கள் குவிந்துள்ள போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவு அதிகரித்துள்ளது. தானியங்கள் திறந்தவெளியில் கொட்டப்பட்டு பாழாகி வருகிறது. அதற்கு பதிலாக அதை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்.

விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்று கூறிய ஒரே பிரதமர் மன்மோகன் சிங்காக தான் இருப்பார். இதன் மூலம், வியாபாரிகளை பதுக்கலுக்கு ஊக்குவிக்கிறார் என்றார். இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா, அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை, தெலுங்கு தேசம் உறுப்பினர் நாம நாகேஸ்வர ராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் தாஸ்குப்தா, சிவசேனா உறுப்பினர் ஆனந்த்ராவ் அத்சுல் உள்ளிட்டோரும் ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்கும்படி வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் மீரா குமார், கேள்வி நேரத்துக்குப் பிறகு ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்வது பற்றி பரிசீலிக்கலாம் என்றார்.

எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்து, அமளியில் ஈடுபட்டனர். பின்னர், ஒத்திவைப்பு தீர்மானத்தை தவிர வேறு எந்த வகையில் வேண்டுமானாலும் விலைவாசி பிரச்னையை விவாதிக்கலாம். சட்டம் மற்றும் அரசியல் சாசனங்களை அமல்படுத்துவதில் அரசு தவறினால் மட்டுமே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கலாம் என்று கூறிய மீரா குமார், எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானத்தை உறுதியாக நிராகரித்தார்.

இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார். மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்கும்படி நேற்று வலியுறுத்தின. இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லியை (பா.ஜ.க.,) பேசும்படி அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அழைத்தார். ஆனால், கூச்சல் நிலவியதால் ஜெட்லியால் பேச முடியவில்லை. இதனால், அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அன்சாரி அறிவித்தார். மீண்டும் அவை கூடியபோது, அவையின் மய்யப் பகுதிக்கு சென்று பா.ஜ. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த துணைத் தலைவர் ரகுமான்கான், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

இன்றும் விலைவாசி உயர்வு குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் இரு அவைகளும் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் பா.ஜ.க.., மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவரிடம் விலைவாசி உயர்வை எதிர்த்து 10 கோடி மக்களிடம் கையெழுத்து பெற்ற மனுவை அளித்தனர்.

இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai