ரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோ குளோபின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத் தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந் தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக் களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோ குளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைகோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த் துக் கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்தச் வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள பிளேட்டலட் அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக் கும் சக்தி பிளேட்டலட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி கார்க் போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவிகித அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவிகித அளவுக்கு ரத்த சிவப்பு அணுக் களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவிகி தம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், ரத் தத்தை உறைய வைக்கக் கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங் களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருள்கள் எவை?

ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் என ரத்தத் தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் பிளாஸ்மா என்ற பொருளும் உள்ளது.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் பம்ப் செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு அய்ந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?

ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர். ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது அதன் வேகம் மணிக்கு 65 கி.மீ.! மோட்டார் சைக் கிளின் சராசரி வேகத்தை விட இது அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன் அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியி லிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லா திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய் கிறது. கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, புரதம் , தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் செயல்பட ஆக்சிஜனை எடுத்துச் செல்வது ரத்தம்தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக் களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல் லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார் பன் டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியாக வெளியேற வைப்பதும் ரத்தம்தான்.


விண்கற்கள்

ஆஸ்ட்ராய்டுகள் என்று அழைக்கப்படும் விண்கற்கள், கோள்களைப் போலவே சூரியனை வலம் வருகின்றன. ஆனால், கோள்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியதாக இருக்கின்றன. கோள்கள் உருண்டையாகவோ, நீர் வட்டமாகவோ காணப்படும். ஆனால், இந்த விண்கற்கள் ஒழுங்கற்ற வடிவத்தில் காணப்படுகின்றன. அதாவது உடைந்த பாறைத் துண்டுகள் போலக் காட்சி அளிக்கின்றன. சூரியக் குடும்பம் தோன்றியபோது கோள்களாக மாற முடியாத சிறு துண்டுகளே இவை என்று கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே 95 சதவிகித விண்கற்கள் உள்ளன. மீதி 5 சதவிகித விண்கற்கள் பல்வேறு கோள்களுக்கு இடையே சுற்றிக் கொண்டிருக்கின்றன.

செவ்வாய் கோள்களுக்கும், வியாழன் கோள்களுக்கும் இடையில் ஒரு கோள் உருவாகி இருக்க வேண்டும். ஆனால், அது கோளாக உருவாகாத அளவுக்கு வியாழனின் மிகப் பெரிய நிறை, தன்னுடைய ஈர்ப்பு விசையால் அதை கருச்சேதம் செய்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இவைதான் விண் கற்கள் என்று அழைக்கப் படுகின்றன. நம்முடைய சூரியக்குடும்பத்தில் 10 லட்சம் விண்கற்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோள்கள் உருவானபோது, அவற்றுடன் சேர்ந்து கொள்ள முடியாமல் போன மிச்சங்கள் தான் விண்கற்கள் என்ற கருத்தும் விஞ்ஞானி களிடையே நிலவுகிறது.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai