கண்கவர் ஒளியில் மிதக்கும் நேப்பியர் பாலம்
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்கினார்

சென்னை, ஜூலை 29- ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் நேப்பியர் பாலத்தில் கண்கவரும் மின் ஒளி விளக்குகள் அமைக் கப்பட்டுள்ளதை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இயக்கி வைத்தார். சென்னை நகரை சிங்கார சென்னையாக்கும் முயற்சி யில் முதலமைச்சர் கலை ஞர், துணை முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலின் ஆகி யோர் தீவர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகி லேயே இரண்டாவது நீண்ட கடற்கரையாகும். நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுமார் 3.10 கி.மீ. நீளத்திற்கு மெரினா கடற்கரை ரூபாய் 26 கோடி செலவில் நவீன முறையில் அழகுபடுத்தப் பட்டு, முதலமைச்சர் கலை ஞர் 20.12.2009 அன்று திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக, நேப்பியர் பாலம் சிறந்த முறையில் பார்வையாளர்களை கவரும் வகையில் ஒளியூட் டப்படும் என துணை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் அறிவித்தார். புனித செயிண்ட் ஜார்ஜ் கோட் டையில் மெட்ராஸ் பிரசி டென்சி ஆளுநராக பொறுப்பு வகித்த நேப்பியர் பெயரில் 1869 ஆம் ஆண்டு கூவம் கரையோரம் முதல்முத லாக இரும்பு பாலம் கட் டப்பட்டது. அதன் பின் னர் 1943ஆம் ஆண்டு வாகன போக்குவரத்திற்காக இப்பாலம் விரிவாக்கப் பட்டது. 5.2.2000 ஆம் ஆண்டு சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபொழுது முதலமைச் சர் கலைஞர் 4 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் நேப்பியர் பாலம் 6 அழகிய வடிவமைப்புகளுடன் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக விரிவாக்கம் செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

சிங்கார சென்னையின் ஒரு திட்டமாக நேப்பியர் பாலம் 464 சிறப்பு வகை மின்விளக்குகள் பயன் படுத்தப்பட்டு, தேவைக் கேற்ப ஒளியின் தன் மையை கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டு, ஒளி யூட் டப்பட்டுள்ளது. பொருத் தப்பட்ட பிட்டிங்கள் அதிகப்படியாக பகலில் கண்ணுக்கு தெரியாதபடி இருக்கும். பாலத்தின் சிறப் பம்சங்களை எடுத்துக் காட்டுவதாக இருக்கும். பொருத்தப்பட்டுள்ள பிட்டிங்கள் குறைந்த பரா மரிப்பில் நீண்ட காலம் உழைக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தனித் தன்மை கொண்டதாக விளங்கும் வகையிலும், பாலம் மிதப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஒளியமைப்பு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு சிர மம் ஏற்படாத வகையில் பாலத்தில் உள்ள சாலைப் பகுதியில் குறைந்த உயர ஒளியமைப்பு செய்யப் பட்டுள்ளது.

ஒரு கோடியே 80 லட் சம் ரூபாய் செலவில் நேப்பியர் பாலம் அனை வரையும் கவரும் வகையில் அலங்கார மின்விளக்கு களால் மின்னொளியூட் டப்பட்டுள்ளது. இந்த பணியினை துணை முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பொது மக் களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத் தில் முதல்வர் கலைஞர் அங்கு வந்தார். காரில் இருந்த படி நேப்பியார் பாலம் மின்னொளியில் மிளிரும் காட்சியை ரசித்து பார்த்தார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai