அமாவாசை

மகாளய அமாவாசை யையொட்டி இன்று முன்னோர் களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துகிறார்கள்.

புரட்டாசி மாதம் பவுர்ணமி முதல் அமாவாசை வரும் 15 நாள்களும் மகாளய பட்ச காலமாம்.

இந்த நாள்களில் அந்தந்த திதிக்கு உரிய, தங்களின் முன் னோர்களுக்குத் திதி கொடுக்கும் வழக்கம் இந்துக்களுக்கு உண்டாம்.

அதிலும் மகாளய பட்சத்தின் இறுதி நாளான மகாளய அமாவாசை தினம் இன்றாம் - முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்தநாள் இந்நாள் என்று சாங்கோ பாங்கமாக தினமலர் ஏடு விவரிக்கிறது.

அது சரி, அமாவாசை, அமாவாசை என்று கதைக் கிறார்களே, அதன் கதைதான் என்ன?

புராணக் களஞ்சியமான அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது?

அச்சோதை என்பவர் ஒரு புண்ணிய நதியாம். மரீசி மக்களாகிய பிதுர்க்களுக்கு குமரி. இவள் தம் பிதுரரால் நிருமிக்கப்பட்ட அச்சோதை யென்னும் நதிக்கரையில் ஆயிரம் வருடம் தவஞ் செய்ய, பிதுர்க்கள் பிரத்திய க்ஷணமா யினர். அவர்களுள் ஒருவனா கிய மாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் அவள் விபச்சாரியாய்ச் சுவர்க் கத்திலிருந்து தள்ளப்பட்டு பூமியில் விழாது, அந்தரத்து நின்று தவஞ் செய்தனள். அவள் வசமாகாத மாவசு, இச்செய்தி நடந்த தினத்தை அமாவாசை யாக்கினான். அவள் மீண்டும் அவர்களை வேண்ட, நீ தேவர் கர்மத்தைப் புசித்து (28) வது துவாபரயுகத்தில் ஒரு மீன் வயிற்றில் சத்தியவதியெனப் பிறந்து, பராசரனைக் கூடி, வியாசனைப் பெற்றுப் பிறகு சந்தனுவின் தேவியாய் இரண்டு புத்திரரைப் பெற்று, அப்பால் அச்சோதையெனும் புண்ணிய நதியாகவென அருளிப் போயி னர். இத்தினத்தில் அப்பிதுர்க் களை நினைத்துக் கர்மாதிகள் செய்யின் அவை பிதுர்ப் பிரீதி யைத் தரும் (மச்ச புராணம்) என்று விவரிக்கிறது அபிதான சிந்தாமணி. ஒருமுறைக்கு இருமுறை படித்தாலும் மண் டைக் குடைச்சலைத் தான் ஏற்படுத்தும்.

இந்து மத வகையறாக் களை எங்குத் தோண்டினாலும் அங்கெல்லாம் விபச்சாரம் என்னும் பாம்பு தலையெடுக்கா மல் இருக்காது. மூடத்தனம், ஆபாசம், விபச்சாரம் என்னும் இவற்றை விட்டால், இந்து மதத்தில் எந்தச் சரக்கும் கிடை யவே கிடையாது. கசுமாலம் இவற்றையெல்லாம் படித்துத் தொலைய வேண்டியிருக்கி றதே, என்ன செய்ய!

செத்துப் போனவர்களுக்கு இந்த நாளில் புரோகிதப் பார்ப் பானை அழைத்துத் தர்ப்பணம் செய்தால், பொருள்களை வாரிக் கொடுத்தால், அவை செத்துப் போன நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேருமாம் - கதை அளக்கிறார்கள். நடிகவேள் எம்.ஆர். ராதா சொல்வார் - புரோகிதன் வயிறு பரலோகத் துக்குத் தபால் பெட்டியோ என்று அவருக்கே உரித்தான பாணி யில் குரல் கொடுப்பார். நாடகக் கொட்டகையே அதிரும்.

அய்யரே, எங்கள் அப்பா வுக்கு கருவாடு, மீன் இல்லை யென்றால் ஓர் உருண்டை சோறுகூட உள்ளே போகாது. சமையல் ரெடி - இங்கேயே என் எதிரிலேயே உட்கார்ந்து சாப்பிடணும் என்பார் நடிகவேள் - எடுப்பார் அய்யர் ஓட்டம்.

இதையே இன்னொரு வகையில் கபிலர் பாடியுள்ளார்.

பார்ப்பன மாந்தர்காள்

பகர்வது கேண்மின்

இறந்தவராய் - உமை

இல்லிடை இருத்தி

பாவனை மந்திரம்

பலபட உரைத்தே

உமக்கவர் புத்திரர்

ஊட்டின போது

அரும்பசியாற் குலைந்து

ஆங்கவர் மீண்டு

கையேந்தி நிற்பது

கண்டதார் புகல்வீர்!

அருந்திய உண்டியால்

ஆர்பசி கழிந்தது என்றார்

கபிலர் - சிந்திப்பீர்!

- மயிலாடன்


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 


சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai