கிறித்துவரைப் பார்த்து குடிஅரசு கேட்ட வினாக்கள்!

(எதார்த்தவாதியும் - கிறிஸ்துமத போதகரும் பேசியது)

எதார்த்தவாதி: அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால், எப்பொழுது எழுதப்பட்டது?

போதகர்: பழைய காலத்திலேயே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும், பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.

எதா: சரி தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சிலவிடங்களில் தெய்வத்துக்குப் பயப்படாதவர்கள்தானே? போதகர்: இல்லை சார். எப்பொழுதும் தெய்வத்துக்குப் பயப்படுகிறவர்கள்தான்.

எதா: நல்லது. அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே?

போதகர்: ஆம் வாஸ்தவந்தான். ஆனால் அவனை (ரை) சில ஆராய்ச்சியாளர்கள் தன் தகப்பனின் மறுமனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்.

எதா: அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகியிருக்கலாம்.

போதகர்: அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியதென்ன?

எதா: உண்மையாக அவன் தீர்க்கதரிசிதானே?

போதகர்: ஆம் வாஸ்தவந்தான், ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளை) தேவனே.. அவன் ஒரு தீர்க்கதரிசி... என்பதாய் சொல்லியிருக்கிறார்.

எதா: அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில்... இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்... பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?

போதகர்: அ ஆ ஆம் வாசித்ததுண்டு. ஆனால், அவன் மனைவி ச.ஆ. சாராள் அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.

எதா: மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?

போதகர்: சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

எதா: சரி அய்யா, நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.

போதகர்: தெய்வமில்லாத காலமிது என்பதாய் முணுமுணுத்துக் கொண்டு நழுவி விடுகிறார்.

எதா: பைபிள் காலத்தில் தெய்வ பயமில்லாத இடமிருந்தது இப்பொழுது காலம் வந்து விட்டது என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு.

குடிஅரசு, பக்கம் 15, 5.4.1931


ஈச்சமர(த்திலும்) கடவுள்?

இந்தியாவில் பரித்பூர் என்றோர் ஊருள்ளது. அங்குள்ள ஒரு கோயிலுக்கருகில் ஓர் ஈச்சமரம் இருக்கின்றது. அக்கோயில் வழக்கமாக காலையிலும், மாலையிலும் கடவுள் வழிபாட்டின்போது மணியடிப்பதுண்டு. மாலையில் மணியடிக்கும் போது அவ்வீச்சமரம் சாய்ந்து விடுவதுண்டு மறுநாள் காலையில் மணியடிக்கும் போது அம்மரம் நிமிர்ந்து விடும். அம்மரத்தினுடைய செயல் கடவுள் வழிபாட்டின் போது வணங்குவது போன்றிருக்கும். இதனைக் கண்ட மக்கள் அம்மரம் மாலையில் கடவுளை வழிபடத் தொடங்கி, இரவு முழுவதும் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டுக் காலையில் எழுந்திருப்பதாகக் கருதி, அஃது தெய்வத்தன்மை உள்ளது என்று கடவுளுக்கு வழிபாடு நடத்துவது போல் நடத்தி வருகின்றனர். நம்நாட்டு விஞ்ஞானிகளில் ஒருவரான ஜகதீச சந்திரபோஸ் இம்மரத்தைக் கண்டபோது, இம்மரத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார். பல நாள்கள்வரை ஆராய்ந்து அதன் உண்மையைக் கண்டுபிடித்தார். இம்மரம் பகலில் உண்டாகிற வெப்பதால் மாலையில் சாய்ந்து விடுகிறது. இரவில் அவ்வெப்பம் நீங்கி விடுவதால் காலையில் இது நிமிர்ந்துகொள்கிறது இம்மரம் மட்டும். இவ்வாறு சாய்ந்து நிமிர்வதற்குக் காரணம் இதனுடைய சூழ்நிலைதான் என்று மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

உலக அதிசயங்கள் நூலிலிருந்து ரவிராஜ், அத்திமலைப்பட்டு - 632 315


காணாத இடத்தில் குரைக்காதே!

இன்னும் ஒன்றுதான் அப்புறம் ஒன்றுமில்லை. துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய் போன சாமி இருக்குதென்று நினைக்கின்றீர்கள்?

மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமா? அதுதான் கடவுள்.

பதில்: அப்படியானால் அந்தக் காரணத்தை கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா?

மூடர்: கடவுளைப் படைப்பதற்குக் காரணம் கேட்பது முட்டாள்தனமாகும்.

பதில்: அப்படியானால் உலக படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதை விட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.

மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்?

பதில்: சரி, நல்ல காரியமாச்சுது சனியன் தொலைஞ்சுது. ஆனால் காணாத இடத்தில் குரைக்காதே!

(சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் எழுதியது. பக்கம் 12) குடிஅரசு 4.1.1931


வேதங்களின் வண்டவாளம்

ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப் பாயாக... ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில் பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது. இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்து கின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர் களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3) ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.

 

 


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 


சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai