வழிகாட்டும் தலைமைச் செயற்குழு! வெற்றி நமதே-வீறு கொண்டெழுக!

- கலி.பூங்குன்றன் (1)

தோழர்களே, நமக்கு அடுக்கடுக்கான பணிகள். ஒரு நிமிடம் சிந்தனையைப் பின்னோக்கிப் பயணிக்க வைத்தால் எத்தனை எத்தனைப் பயணங்கள்! மலைப்பாகவே இருக்கிறது!

கரூர் மாநாடு, வாலாஜா மாநாடு, சீர்காழி மாநாடு, திருப்பத்தூர் மாநாடு, திருவரங்கம் மாநாடு, மதுரை மாநாடு என்று அடுக்கடுக்காக அலைகள்!

திருப்பத்தூரில் பொதுக்குழுவுடன் கூடிய மாநாடு-ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. நமது தோழர்களும் சளைக்காமல் ஈடு கொடுத்து இணையற்ற பணிகளைத் தோள் மீது சுமந்து புது அத்தியாயங்களைப் படைத்து வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரிகளில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வாம்-நமது மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை எப்படிச் சேர்ப்பது என்பதை முடிவு செய்ய நமக்கு உரிமையில்லையாம், நமது தமிழ்நாடு அரசுக்கு அருகதையில்லையாம்.

டில்லியில் குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள சொகுசு அறையில், அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் நாமதாரிகள் முடிவு செய்கிறார்களாம்.

சூட்சமம் புரிகிறதா? நுழைவுத் தேர்வை ஒழித்துவிட்ட காரணத்தால் நமது சுப்பனும், குப்பனும், காத்தாயி மகள் கருப்பாயும் மருத்துவக் கல்லூரிகளில் காலடி எடுத்து வைத்துள்ளார்களே,

கருவேல் முள்ளாக உறுத்தாதா, இந்தக் கனக விசயன் பரம்பரைக்கு?

நெடுநாள் போராடி நம் மக்களுக்கு நாம் பெற்றுத்தந்த உரிமைகளையெல்லாம் நெட்டித்தள்ள-நெடுநாள் பகைவர்கள் சூழ்ச்சி வலைகளைப் பின்னுகிறார்கள்.

எம்.ஜி.ஆர் அவர்கள் நுழைவுத்தேர்வைக் கொண்டு வந்த நேரத்திலேயே அதனை எதிர்த்துக் கனல் கக்கியவர்கள் நாம்- போராட்டம் நடத்தியவர்கள் கருஞ்சட்டையினர்!

மானமிகு கலைஞர் அவர்களின் காலத்தில்-சமூக நீதி வரலாற்றின் நெடும்பாதையில், ஒரு கட்டத்தில் நுழைவுத் தேர்வை ஒழித்துக்கட்டியது-காலத்தைக் கடந்த கல்வெட்டாக நிலைக்கக்கூடியதாகும்.

சமூகநீதிக்காகப் பிறந்தது திராவிடர் இயக்கம். அதன் ஒரே அரசியல் வாரிசு தி.மு.க-அதன் தன்னிரகற்ற தலைவர். தலைகொடுத்தேனும் சமூகநீதிப் பயிரைக் காக்கும் பகுத்தறிவாளர்.

அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் முன் மார்பை நிமிர்த்திக்காட்டி, தமிழ்நாடு அரசையும், நுழைவு தேர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் இணைத்துள்ளார் (Implead). மிக மிகப் பிற்படுத்தப்பட்டவன் நான்; இதில் எத்தனை, எத்தனை மிக என்பதை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்வீர்! என்று சட்டப்பேரவையில் சங்கநாதம் செய்த சரித்திரத் தலைவர் கலைஞர்.

நுழைவுத்தேர்வில்-தொடக்கத்தில் தடுமாற்றத்திற்கு ஆளாகிய மத்திய அரசினை தன் அரிமாக் குரலால் நேர்கோட்டில் கொண்டு வந்து நிமிர்த்தி வைத்த சாதனை நமது மானமிகு கலைஞர் அவர்களையே சாரும். மத்திய அரசு சொன்னாலும் கேட்கமாட்டோம், மாநில அரசுகளும் சட்டம் செய்தாலும் குப்பைக்கூடையில் தூக்கி எறிவோம் என்ற இறுமாப்பில் மருத்துவக் குழுமம் மமதையோடு இருப்பதாகத் தெரிகிறது. முதலமைச்சர் கலைஞர் சங்கநாதம் செய்துவிட்டார், நுழைவு தேர்வுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லையென்று கறாராக அடித்துக்கூறிவிட்டார். திராவிடர் கழகம் வழக்கம்போல் வீதிக்கு வந்து விட்டது- நேற்று (டிச.18) சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் அவர்களின் வழிகாட்டுதலின் படி தீர்மானித்து விட்டோம். வரும்29 ஆம் தேதி மாலை 4மணிக்கு மாவட்ட தலை நகரங்களில் (கழக மாவட்டங்கள் அல்ல). ஆர்ப்பாட்டம் போர்ப்பாட்டு பாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணித் தோழர்கள் முன்னின்று மாணவர் பட்டாளத்தை ஒன்று திரட்டி கிளம்பிற்று காண் சிங்கத்தின் கீர்த்திமிகு கூட்டம் என்று காட்ட வேண்டும். இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புப் பெட்டகம்-அதன் திறவுகோல் தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் அல்லவா!

களம் காண்பதிலே தம் காலத்தைச் செலுத்தி, நாட்டின் வரலாற்றை மாற்றும் கட்டுமானப் பணியில் ஈடுபடும் கருஞ்சட்டைப் படை தேதி குறித்துவிட்டது.

சமூகநீதிக்கொடி மூச்சுக்காற்றை தாழ்ந்து பறக்க அனுமதிக்காத அரிமா சேனையே!

டெல்லி மாநகரை அசைத்துக்காட்ட டிசம்பர் 29அய் ஒரு குறியீடாகக் கொண்டு களத்தில் குதித்திடுவீர்!

இடஒதுக்கீட்டுக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன் முதலாகத் திருத்திய சாதனைக்குச் சொந்தக்காரர் நமது தலைவர் தந்தை பெரியார். மண்டல் குழு பரிந்துரையை மக்கள் மத்தியில் பரிமாறச் செய்ய-அழுத்தம் கொடுத்துச் செயல்படுத்திய இயக்கம் திராவிடர் கழகம். ஆம், இந்தப் போராட்டத் திலும் வென்று காட்டுவோம்!

தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் தலைமையிலே மண்டல் குழுப் பரிந்துரைகளின் பலன் இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக் குப் போய்ச்சேர முழுமுதற் காரணமாகப் போராடி வெற்றிக்கொடியை சமூகநீதித் தம்பத்தில் ஏற்றி காட்டினோமே! அதே போல நுழைவுத்தேர்வைத் தூக்கி எறியச் செய்து கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துக் காட்டுவோம்.

இது உறுதி! இது சபதம்! இந்த வகையில் நேற்று கூடிய கழகத்தின் தலைமைச் செயற்குழு கூட்டம் வரலாற்றில் ஒரு வைரக் கல்வெட்டாகும்.

வெற்றி நமதே-வீறு கொண்டெழுக!

காரணம் புரிகிறதா?

தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் புள்ளி விவரம் இதோ:

திறந்த போட்டிக்குரிய இடங்கள் : 460

இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் : 300

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் : 72

தாழ்த்தப்பட்டோர் : 18

முஸ்லிம்கள் : 16

உயர்ஜாதியினர் : 54

இதில் 200க்கு 200 கட் ஆஃப்

மதிப்பெண் வாங்கியோர் : 8

இதில் பிற்படுத்தப்பட்டவர் : 7

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் : 1

உயர் ஜாதியினர் : பூஜ்யம்

மானமிகு கலைஞர் ஆட்சியில் சட்ட ரீதியாக நுழைவுத் தேர்வு நொறுக்கித் தூக்கி எறியப்பட்டதால் ஏற்பட்ட பலன் இது.

இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை உறுத்துகிறது. எனவேதான் மீண்டும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வர பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்புகிறார்கள்.

உஷார்! உஷார்!! உஷார்!!!

 


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 


சென்னை:

 • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
 • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
 • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
 • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
 • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
 • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
 • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
 • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
 • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

 • நாகம்மை குழந்தைகள் இல்லம்
 • பெரியார் தொடக்கப்பள்ளி
 • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 • பெரியார் கணினி மய்யம்
 • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
 • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

 • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
 • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
 • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

 • பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மய்யம், சென்னை
 • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
 • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
 • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
 • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
 • டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

 • பெரியார் மய்யம், பாம்நோலி
 • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai